வருகின்ற தீபாவளிக்கு கார்த்திகேயன் நடித்த பிரண்ட்ஸ் திரைப்படம் வெளிவர உள்ளது. இதையடுத்து ரசிகர்கள் மிகவும் ஆவலாக என்ற படத்தை எதிர்பார்த்து இருக்கிறார்கள்.வரும் அக்டோபர் 21ஆம் தேதி திரையரங்குகளில் இந்தப் படத்தை பார்க்கலாம்.
தற்போது இந்தப் படமானது தமிழ் மற்றும் தெலுங்கு என இரண்டு மொழிகளில் உருவாகியுள்ளது. இந்த படத்தில் சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக உக்ரைன் நாட்டை சேர்ந்த மரியா ரியாபோஷப்பிகா நடித்துள்ளார்.
இந்த படத்தில் சத்யராஜ், பிரேம்ஜி உள்ளிட்ட பல நடிகர்கள் நடித்துள்ள இந்த படம் மாபெரும் வெற்றியை தரும் என்று அனைவரும் எதிர்பார்க்கிறார்கள்.
இதனை அடுத்து நடிகர் சிவகார்த்திகேயன் சமூக வலைதளத்தின் மூலம் ரசிகர்களுடன் உரையாடி அவர்களின் கேள்விக்கு மிக நேர்த்தியான முறையில் பதிலளித்திருக்கிறார்.
அப்போது ஒரு ரசிகர் வருங்காலத்தில் இந்தி, மலையாளம் இயக்குனர்களை தேர்வு செய்தீர்களா? என்ற கேள்வியை எழுப்பியிருக்கிறார்.
இதற்கு பதிலளித்த சிவகார்த்திகேயன் கண்டிப்பாக எல்லா மொழி இயக்குனரிடம் பணிபுரிவேன் என்று நினைக்கிறேன் என்று கூறியிருக்கிறார்.
மேலும் பலரை சந்தித்து இது நிமித்தமாக உரையாடி வருகிறோம். எல்லோரும் பல ஐடியா உடன் வருகிறார்கள் என்று கூறியிருப்பது இவர் தன்னை பான் இந்திய நடிகராக தன்னை உயர்த்திக் கொள்ள முயற்சி செய்து வருகிறார் என்பதை உணர்த்தி விட்டது.
ஏற்கனவே சின்ன குழந்தைகள் முதல் சிவகார்த்திகேயனை விரும்புவதால் நிச்சியமாக சிவகார்த்திகேயன் பான் இந்திய நடிகராக உயர்வார் என்று அவரது ரசிகர்கள் அவருக்கு அட்வான்ஸாக வாழ்த்துக்கள் தெரிவித்திருக்கிறார்கள்.
விரைவில் வரும் பான் இந்திய நடிகராக நாம் சிவகார்த்திகேயனை பார்க்கலாம் என்பது அவர் பேசி இருக்க கூடிய பேச்சில் இருந்து தெரிகிறது.
எப்படிப்பட்ட கதை அம்சத்தை இவர் பான் இந்திய திரைப்படத்துக்காக தேர்ந்தெடுப்பார் என்பது பற்றி ரசிகர்கள் இப்போது பட்டிமன்றம் நடத்த ஆரம்பித்துவிட்டார்கள்.
இதற்கான விடையை மிக விரைவில் சிவகார்த்திகேயன் அளிப்பார் என்ற நம்பிக்கையில் ரசிகர்கள் தற்போது பிஸியாக தீபாவளியை கொண்டாட தயாராகி விட்டார்கள்.