இமானால் டேமேஜ் ஆன சிவகார்த்திகேயன்..!  நான் அதை பண்ணலைங்க. பேரை காப்பாத்த SK எடுத்த முயற்சி..!.

சினிமாவில் தொடர்ந்து வெற்றி படங்களாக கொடுத்து வரும் நடிகர்களில் முக்கியமானவர் நடிகர் சிவகார்த்திகேயன். ஒரு காலகட்டங்களில் நடிகர்களை பேட்டி எடுத்து வந்த சிவகார்த்திகேயன் இப்பொழுது தமிழ் சினிமாவில் உள்ள பல நடிகர்களை விட அதிக சம்பளம் வாங்கும் நடிகராக வளர்ந்து வந்திருக்கிறார்.

சிவகார்த்திகேயனின் வளர்ச்சி என்பது மிடில் கிளாஸ் இளைஞர்கள் பலரது கனவு என்றுதான் கூற வேண்டும். சாதாரண குடும்பத்தில் பிறந்து ஒரு டிவி சேனலில் வேலை பார்த்து சினிமாவில் இவ்வளவு பெரிய உச்சத்தை தொட்டு பலருக்கும் உதாரணமாக இருந்து வருகிறார் சிவகார்த்திகேயன்.

சினிமாவில் பெரும் வளர்ச்சி:

ஒரு பேட்டியில் ஜெயம் ரவி கூறும் போது கூட சிவகார்த்திகேயன் தொகுப்பாளராக இருந்தபோது என்னை பேட்டி எடுத்து இருக்கிறார் இப்பொழுது அவர் என்னைவிட அதிக சம்பளம் வாங்குகிறார் என்று கூறினாராம்.

அந்த அளவிற்கான ஒரு வளர்ச்சியை சிவகார்த்திகேயன் தமிழ் சினிமாவில் பெற்று இருக்கிறார். பொதுவாக சிவகார்த்திகேயன் குறித்து தமிழ் சினிமாவில் அவதூறு விஷயங்கள் என்று பெரிதாக எதுவும் வந்ததே கிடையாது.

வந்த ஒரே விஷயம் இமான் மனைவி குறித்து வெளியான விஷயம் தான் இமான் சில காலங்களுக்கு முன்பு ஒரு பேட்டி ஒன்றை அளிக்கும்போது அதில் சிவகார்த்திகேயன் குறித்து ஒரு விஷயத்தை கூறியிருந்தார்.  சிவகார்த்திகேயன் நடித்த திரைப்படங்களுக்கு தொடர்ந்து இசையமைத்து வந்தவர் இசையமைப்பாளர் டி. இமான்.

இமான் பிரச்சனை:

அப்படிப்பட்டவர் திடீரென அவருக்கு இசையமைப்பதை நிறுத்திவிட்டார் இந்த நிலையில் அவரிடம் ஏன் இப்பொழுது எல்லாம் சிவகார்த்திகேயன் படங்களுக்கு இசையமைப்பதில்லை என்று கேட்கப்பட்டது. அதற்கு பதில் அளித்த இமான் சிவகார்த்திகேயன் செய்த துரோகத்திற்கு இனி என் வாழ்நாளில் அவரது படங்களுக்கு இசையமைக்க மாட்டேன்.

அவரால்தான் எனது குடும்பமே பிரிந்தது. எனது பிள்ளைகள் வளர்ந்த பிறகு உண்மையை தெரிந்து கொள்வார்கள் என்று பேசுகின்றார். அதனை தொடர்ந்து சிவகார்த்திகேயனுக்கும் இமான் மனைவிக்கும் உறவு இருந்தது. அதனால்தான் அவர்கள் இருவரும் விவாகரத்து பெற்று பிரிந்து விட்டனர் என்று பேச்சுக்கள் வர துவங்கின.

இது அயலான் படம் வெளியான சமயத்தில் ஏற்பட்டதால் படத்தின் வசூலில் அது பாதிப்பை ஏற்படுத்தியது. இந்த நிலையில் சமீபத்தில் சிவகார்த்திகேயனுக்கு மூன்றாவது குழந்தை பிறந்திருந்தது. அந்த குழந்தைக்கு பெயர் வைக்கும் விழாவை புகைப்படம் எடுத்து வெளியிட்டு இருந்தார் சிவகார்த்திகேயன்.

சிவகார்த்திகேயன் குறித்து இமான் கூறிய எதிர்மறையான விஷயங்களை மறைக்கதான் இதை செய்கிறார் என்று அப்பொழுது பேச்சுக்கள் இருந்தன இது குறித்து பத்திரிகையாளர் செய்யாறு பாலு கூறும் பொழுது உண்மையிலேயே பேமிலி ஆடியன்ஸை ரசிகர்களாக வைத்திருக்கும் நடிகர்களுக்கு இந்த மாதிரியான குடும்ப புகைப்படங்கள் என்பது பெரும் பலமாக அமைகிறது.

அதனால்தான் அஜித் மாதிரியான நடிகர்கள் அடிக்கடி தங்களது குடும்ப புகைப்படங்களை இணையத்தில் வெளியிடுகின்றனர் என்று அவர் கூறியிருந்தார்

புதுப்பேட்டை படத்துல நிஜமாவே அந்த உறுப்பில்.. ரகசியம் உடைத்த சினேகா..!

Comments are closed.
Exit mobile version