விலை மாதுவின் வீட்டில் “சிவக்குமார் & சன்ஸ்” காலண்டர்..! – ஜெய் பீம் பாணியில் பதிலடி கொடுத்த மோகன் ஜி..!

இயக்குனர் மோகன் ஜி தான் இயக்கிய பகாசசூரன் திரைப்படத்தில் நடிகர் சூர்யாவின் குடும்பத்தை கேவலமாக சித்தரித்து இருக்கிறார் என்ற குற்றச்சாட்டு எழுந்திருந்திருக்கிறது.

இது சார்ந்த புகைப்படங்கள் மற்றும் வீடியோ காட்சிகள் இணையத்தில் வைரலாகி பெரும் பரபரப்பை கிளப்பி விட்டு இருக்கிறது. இதற்கு முன்னதாக நடிகர் சூர்யா நடிப்பில் வெளியான ஜெய் பீம் திரைப்படத்தை உண்மை சம்பவத்தை அடிப்படையாகக் கொண்ட திரைப்படம் எனக்கூறி படத்தை எடுத்தனர்.

ஆனால், வேறு மதத்தைச் சேர்ந்த ஒரு காவல்துறை அதிகாரியை இந்து மதத்தைச் சேர்ந்தவர் போல சித்தரித்து அதிலும் குறிப்பாக குறிப்பிட்ட சாதியை சேர்ந்தவர் என்பது போல சித்தரித்து படத்தை வெளியிட்டிருந்தனர். இது மிகப்பெரிய சர்ச்சையை ஏற்படுத்தியது.

குறிப்பாக காவல்துறை அதிகாரி வீட்டில் இருந்த அக்னி கலசம் கொண்ட காலண்டர் மிகப்பெரிய அதிர்வலைகளை ஏற்படுத்தியது. இதனால் பாமக தலைவர் ராமதாஸ் மற்றும் அன்புமணி ராமதாஸ் ஆகியோர் தங்களுடைய கண்டன குரல்களை பதிவு செய்தனர்.

இவர்களுக்கு, பதில் கொடுக்கிறேன் என்று அன்புமணி ராமதாஸை பகடி செய்யும் விதமான புரிதலுக்கு நன்றி என்று ஒரு பதிலை அறிக்கையாக வெளியிட்டு குசும்பு செய்தார் நடிகர் சூர்யா. இது மிகப்பெரிய சர்ச்சையை ஏற்படுத்தியது.

அதன் பிறகு நடிகர் சூர்யாவின் திரைப்படங்கள் கொங்கு மண்டலத்தில் மிகப்பெரிய வீழ்ச்சியை சந்திக்கும் என எதிர்பார்க்கப்பட்டது. அதற்கேற்றார் போல ஜெய் பீம் திரைப்படத்திற்கு பிறகு இவர் நடிப்பில் வெளியான எதற்கும் துணிந்தவன் திரைப்படம் திரையிட்ட நாளிலேயே திரையரங்கு பல திரையரங்கில் இருந்து தூக்கப்பட்டது.

இந்த சர்ச்சைகள் தற்போது ஒரு வழியாக அடங்கி இருக்கும் நிலையில் சமீபத்தில் இயக்குனர் மோகன் ஜி இயக்கத்தில் வெளியான ஒரு திரைப்படத்தில் அதே காலண்டரை கொண்டு பதிலடி கொடுத்திருக்கிறார் மோகன் ஜி என்று தகவல்கள் வெளியாகி இருக்கின்றது.

அதாவது பகாசூரன் திரைப்படத்தில் இடம் பெற்ற ஒரு காட்சியில் விலை மாதுவின் வீட்டில் “சிவக்குமார் & சன்ஸ்” என்ற பெயரை தாங்கிய ஒரு காலண்டர் ஒன்று தொங்க விடப்பட்டிருக்கிறது.

நடிகர் சூர்யாவின் குசும்புக்கு பதிலடி கொடுக்கும் விதமாக மோகன் ஜி இதனை செய்திருக்கிறார் என்று குற்றச்சாட்டுகள் வைத்து வருகிறார்கள். மறுபக்கம் முல்லை முல்லால் தான் எடுக்க வேண்டும். எனவே காலண்டர் மூலம் ஒரு சமுதாயத்தை இழிவுபடுத்த நினைத்த சூர்யாவிற்கு இது சரியான பதிலடி என்றும் மோகன் ஜியின் இந்த செயலுக்கு பாராட்டுகளும், அதே சமயம் எதிர்ப்புகளும் எழுந்து வருவதை சமூக ஊடகங்களில் பார்க்க முடிகிறது.

Check Also

ப்பா…கேட்டதும் கிறுகிறுனு வருதே.. என்னது 50 வினாடிக்கு இம்புட்டு சம்பளமா? – யாருமா.. அந்த நடிகை..

திரை உலகில் கோடிக்கணக்கில் சம்பளமாக வாங்குகின்ற நடிகர் நடிகைகளை பற்றி உங்களுக்கு சொல்ல தேவை இல்லை. அந்த வகையில் தளபதி …