எந்த பெண் தன்னை அசிங்கப்படுத்தியதற்காக சிவக்குமார் நடிப்பதை நிறுத்தினார் தெரியுமா..?

தமிழ் சினிமாவில் மூத்த நடிகராக மதிக்கப்படுபவர் நடிகர் சிவக்குமார். இவர் இன்றைய முன்னணி நடிகர்கள் சூர்யா, கார்த்தி ஆகியோரின் தந்தை என்பது குறிப்பிடத்தக்கது.

சிவக்குமார்

கடந்த 1970களில் தமிழ் சினிமாவில் மிக முக்கிய முன்னணி நடிகராக இருந்தவர் சிவக்குமார். அப்போது ஜாம்பவான்களாக இருந்த எம்ஜிஆர் சிவாஜி ஆகியோருடன் பல படங்களில் சிவக்குமார் நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

அந்த காலகட்டத்தில் திறமை இருந்தால் மட்டுமே சினிமாவில் நடிக்க முடியும், சினிமாவில் நடிக்க வாய்ப்பு கிடைக்கும் என்ற நிலையில், தன் அபார நடிப்புத் திறமையால் சினிமாத் துறைக்கு வந்தவர் தான் சிவக்குமார்.

திறமையால் வந்தவர்

இப்போது போல் வாரிசு நடிகராக தயாரிப்பாளர் மகன், நடிகர் மகன், இயக்குனர் மகன் என்ற போர்வையில் நடிகர் சிவக்குமார் தமிழ் சினிமாவுக்குள் வரவில்லை. திறமையால் வந்தவர். ஆனால் இவரது மகன்கள் சூர்யா கார்த்தி இருவருமே சிவக்குமார் மகன்கள் என்று அடையாளத்தில்தான் தமிழ் சினிமாவுக்குள் வந்தனர் என்பதும் கவனிக்கத்தக்கது.

முருகன் வேடத்தில்…

சிவக்குமார் நடித்துக் கொண்டிருந்த ஆரம்ப காலகட்டத்தில், பெரும்பாலும் முருகன் வேடம் கெட்டப் என்றால், அதற்கு சிவகுமார் தான் மிக பொருத்தமாக இருப்பார். வீரபாண்டி கட்டபிரபாண்டிய கட்டபொம்மன், சிவபெருமான் உருவங்களை நினைத்தால் சிவாஜி கணேசன் நினைவுக்கு வருகிறாரோ, அதேபோல் முருகன் கெட்டப்பை நினைத்தால் அடுத்த வினாடி சிவக்குமார் முகம் ரசிகர்களுக்கு ஞாபகத்துக்கு வந்துவிடும்.

கடந்த 1970 களில் அசாத்திய நடிப்பு திறமையால், முன்னணி நடிகராக இருந்த சிவக்குமார் பல வெற்றி படங்களில் நடித்தார். ஆனால் ஒரு கட்டத்துக்கு பிறகு அதாவது 1990க்கு பிறகு சிவக்குமாருக்கு போதிய நடிப்பு வாய்ப்புகள் இல்லை.

வாய்ப்பு இல்லை

அதற்கு முன்பு வரை, அப்பா, அண்ணன் போன்ற குணச்சித்திர கேரக்டரில் நடித்து வந்த அவருக்கு, 1990க்கு பிறகு சினிமாவில் நடிக்க வாய்ப்பு இல்லாததால் அப்படியே டிவி சீரியல் பக்கம் சென்றார்.

ராதிகா கணவராக நடித்தார்

அப்போது சீரியலிலும் அப்பா, அண்ணன் இதுபோன்ற கேரக்டர்களில் சிவக்குமார் நடித்தார். குறிப்பாக ராதிகாவுக்கு கணவராக சித்தி என்ற சீரியலில் சிவக்குமார் நடித்த அதிக ரசிகர்களின் கவனத்தை ஈர்த்தார்.

இந்நிலையில், கடந்த 2015ஆம் ஆண்டில் நடந்த ஒரு சீரியல் ஷூட்டிங்கில், மிகவும் உணர்ச்சிபூர்வமான காட்சியில் சிவக்குமார் நடித்து பேசிக் கொண்டிருந்தார். அந்தக் காட்சி படம் பிடிக்கப்பட்டுள்ளது.

அப்போது சிவக்குமார் குரல் தழுதழுத்து பேசிக் கொண்டிருந்ததை பார்த்து அங்கு செட்டில் இருந்த இளம்நடிகை சிவக்குமாரை கிண்டலடிப்பது போல் பயங்கரமாக சிரித்து விட்டார்.

உனக்கு அறிவு இருக்கா?

அதை பார்த்து டென்ஷனான நடிகர் சிவக்குமார், கொஞ்சமாவது உனக்கு அறிவு இருக்கா, இப்படி நான் முக்கியமான சீன்ல நடிச்சிட்டு இருக்கேன். இப்படி சிரிக்கிறயே என திட்டியிருக்கிறார்.

டப்பிங்கில் சரி செய்துக்கலாம்

அதை பார்த்த அந்த சீரியல் டைரக்டர், என்ன சார் பெருசா தப்பு நடந்து போச்சு? அந்த பொண்ணு சிரித்தால் அதுல என்ன தப்பு இருக்கு. அப்படியே ஏதாவது டிஸ்டர்ப் ஆகி இருந்தாலும், நாம் டப்பிங்கில் அதை சரி செய்து கொள்ளலாம் போங்க என்று கடுப்பாக கூறியிருக்கிறார்.

மதிப்பு, மரியாதை இல்லை

அப்போதுதான் சிவகுமாருக்கு ஒன்று தெளிவாக புரிந்து இருக்கிறது. நான் இத்தனை ஆண்டுகால சினிமாவில் நடித்த வயது கூட அந்த பெண்ணுக்கு இல்லை. அந்த சீரியல் நடிகைக்கு முன்னால் என்னை மரியாதையில்லாமல் இப்படி டைரக்டர் எடுத்தெறிந்து பேசுகிறார் என்றால், இந்த நடிப்புத் துறையில் இப்போது சீனியர் நடிகர்களுக்கு மரியாதையோ மதிப்போ இல்லை என்பதை புரிந்து கொள்கிறார்.

அதன்பிறகு சிவக்குமார், இனிமேல் நான் சினிமாவில், சீரியலில் எதிலும் நடிக்க மாட்டேன். நான் இனிமேல் நடிப்பு பக்கமே வரமாட்டேன் என்ற முடிவெடுத்த நடிகர் சிவக்குமார் இன்றுவரை, பல ஆண்டுகளுக்கு மேலாக சினிமாவில் நடிக்காமல் இருக்கிறார்.

நடிப்பதையே நிறுத்திவிட்டார்

சீரியலில் நடித்த ஒரு இளம் பெண் தன்னை அசிங்கப்படுத்தியதற்காக சிவக்குமார் நடிப்பதை நிறுத்தியிருக்கிறார் என்பதை அறிந்த தமிழ் சினிமா ரசிகர்கள், அதிர்ச்சியில் உள்ளனர்.

புதுப்பேட்டை படத்துல நிஜமாவே அந்த உறுப்பில்.. ரகசியம் உடைத்த சினேகா..!

Comments are closed.
Exit mobile version