சூர்யா ஜோதிகா காதல்.. மறைமுகமாக தாக்கிய மாமனார்..! என்ன இப்படி சொல்லிட்டாறு..!

திரை உலகில் எண்ணற்ற நட்சத்திர தம்பதிகள் இருக்கிறார்கள். இவர்கள் தங்களோடு இணைந்து நடித்த நடிகைகளையே காதலித்து திருமணம் செய்து கொள்கிறார்கள். அந்த வகையில் நட்சத்திர தம்பதிகளாக திகழும் சூர்யா மற்றும் ஜோதிகா பற்றி சொல்ல வேண்டிய அவசியம் இல்லை.

காக்க காக்க திரைப்படத்தில் நடிக்கும் போது ஜோதிகாவிற்கும் சூர்யாவிற்கும் இடையே காதல் ஏற்பட்டு பல்வேறு இடர்பாடுகளுக்கு பின்பு பெற்றோர்கள் சம்மதத்தை பெற்று திருமணம் செய்து கொண்ட விஷயங்கள் இணையங்களில் வெளி வந்திருந்தது.

நடிகர் சூர்யா ஜோதிகா காதல்..

தமிழ் திரையுலகில் முன்னணி நடிகர்களில் ஒருவராக விளங்கும் சூர்யா பற்றி அதிக அளவு சொல்ல வேண்டாம். ஆரம்பத்தில் இவர் நடித்த சில படங்கள் தோல்வியை தந்தாலும் நந்தா, பிதாமகன் என தொடர்ந்து வந்த படங்களில் தனது அசாத்திய நடிப்பு திறனை வெளிப்படுத்தி இன்று முன்னணி நடிகராக உயர்ந்திருக்கிறார்.

வாரிசு நடிகரான இவரது அப்பா நடிகர் சிவகுமார் கலாச்சாரம் கட்டுப்பாடு என்று ஊறியவர். அந்த வகையில் ஆரம்பத்தில் தனது மகன் காதலுக்கு எதிர்ப்பு தெரிவித்து இருக்கிறார் என்ற விஷயம் இணையங்களில் வைரஸ் ஆகி உள்ளது.

இதற்குக் காரணம் நான்கு ஆண்டுகளுக்கு மேல் காதலித்து பெற்றோர்கள் சம்மதத்தோடு இருவரும் திருமணம் செய்து கொண்ட நிலையில் தற்போது ஆசைக்கு ஒரு பெண் ஆசைக்கு ஒரு மகன் என்று இரண்டு குழந்தைகளை பெற்றிருக்கிறார்கள். மேலும் திருமணத்திற்கு பிறகு நடிகை ஜோதிகாவும் திரைப்படங்களில் நடிக்க ஆரம்பித்து விட்டார்.

மறைமுகமாக தாக்கிய மாமனார்..

அப்படி நடிகர் சூர்யா மற்றும் ஜோதிகா காதலித்த சமயத்தில் ஆரம்ப நாட்களில் இவரது காதலை நடிகர் சிவக்குமார் ஏற்றுக்கொள்ளவில்லை. அதனை அடுத்து நான்கு ஆண்டுகளுக்கு பிறகு தான் ஏற்றுக்கொண்டு திருமணம் செய்ய ஒப்புக்கொண்டதாக சொல்லப்படுகிறது.

இதனை அடுத்து இந்த கருத்திற்கு முற்றுப்புள்ளி வைக்கக்கூடிய வகையில் அண்மை பேட்டி ஒன்று நடிகர் சிவகுமார் நடிகர் சூர்யா மற்றும் ஜோதிகாவின் காதலை வேண்டாம் எனக் கூறி எதிர்த்தாரா என்பது பற்றிய விஷயத்தை பகிர்ந்து இருக்கிறார்.

அப்படி என்ன சொன்னார் தெரியுமா?

அந்த விஷயத்தைப் பற்றி நடிகர் சிவகுமார் பேசும்போது தான் சினிமாவில் உச்சகட்ட நட்சத்திரமாக இருந்தபோது 100 படங்களுக்கு மேல் காதல் படத்தில் மட்டுமே நடித்திருக்கிறேன் ஆனால் அதில் வரும் நூறு நடிகைகளையும் நான் காதலிக்கவில்லை.

 

எனினும் எனது மகன் ஒரு நடிகையை காதலிக்கிறான் என்ற விஷயத்தை கேள்வி பட்ட போது எனக்கு வேடிக்கையாக தான் இருந்ததே ஒழிய நான் அவர்களின் காதலை எதிர்க்கவில்லை மாறாக சந்தோஷமாக அவர்கள் இருக்க வேண்டும் என்று தான் நினைத்தேன்.

இன்னும் எத்தனை காலம்தான் இதை புரிந்து கொள்ளாமல் அனைவரும் இது குறித்து மறைமுகமாக பேசுவார்களோ தெரியவில்லை என்று பேசியதை அடுத்து இந்த செய்தி சூர்யா மற்றும் ஜோதிகாவின் ரசிகர்களின் உள்ளத்தில் இடத்தைப் பிடித்ததோடு சிவக்குமார் பற்றிய மாமனார் சிந்தனையை தகர்த்தெறிந்தது.

இந்த விஷயம் தற்போது இணையத்தில் வேகமாக பரவி வருவதோடு மட்டுமல்லாமல் ரசிகர்களின் மத்தியில் பேசும் பொருளாக மாறி உள்ளது என கூறலாம்.

புதுப்பேட்டை படத்துல நிஜமாவே அந்த உறுப்பில்.. ரகசியம் உடைத்த சினேகா..!

Comments are closed.
Exit mobile version