“நானே இதை பண்ணேன்..” சூர்யா ஜோதிகா காதலுக்கு எதிர்ப்பு குறித்து சிவகுமார் ஓப்பன் டாக்..!

நடிகர் சிவகுமார் பற்றி அதிக அளவு சொல்ல வேண்டிய அவசியம் இல்லை இவரின் மூத்த மகன் நடிகர் சூர்யா தமிழ் தற்போது முன்னணி நடிகராக வளர்ந்திருக்கிறார் ஆரம்ப காலங்களில் சில திரைப்படங்களில் தனது நடிப்பை சிறப்பாக வெளிப்படுத்தாமல் இருந்தார்.

இதனை அடுத்து நந்தா திரைப்படம் தன்னுடைய திரையுலக வாழ்க்கைக்கு திருப்புமுனையாக அமைந்திருந்தது. இதனை அடுத்து பிதாமகன் படத்தில் தனது சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தி ரசிகர்களின் எண்ணிக்கையை அதிகரித்துக் கொண்டார்.

நானே இதை பண்ணினேன்..

திரையுலகில் நட்சத்திர ஜோடிகளுக்கு பஞ்சமில்லை.அந்த வரிசையில் வாலி திரைப்படத்தில் அறிமுகமான ஜோதிகா தன்னுடைய தன்னுடைய சிறப்பான எக்ஸ்பிரஷன் நடிப்பின் மூலம் ரசிகர்களின் மனதில் தனக்கு என்று ஒரு இடத்தை பிடித்துக் கொண்டார்.

இவரின் துள்ளலான இளமையும் அசத்ததான நடனமும் ரசிகர்களின் மத்தியில் இவரை ஒரு கனவு கன்னியாகவே உலாவ விட்டது இதனை அடுத்து இவர் தமிழில் பல முன்னணி நடிகர்களோடு இணைந்து நடித்த பிறகு நடிகர் சூர்யாவுடன் காக்க காக்க திரைப்படத்தில் இணைந்து நடித்தார்.

இந்த படத்தில் இவர்களது கெமிஸ்ட்ரி மிக அருமையாக ஒர்க் அவுட் ஆகி இருப்பதாக ரசிகர்கள் பலரும் கருத்துக்களை தெரிவித்த நிலையில் உண்மையிலேயே அவர்கள் காதலித்து வந்தது வெளிவந்தது.

சூர்யா ஜோதிகா காதலுக்கு எதிர்ப்பு..

இதனை அடுத்து நடிகர் சிவகுமார் சூர்யாவின் காதலுக்கு கடுமையாக எதிர்ப்பு தெரிவித்து வருகிறார் பல ஆண்டுகள் காதலித்த பிறகு தான் இவர் திருமணத்திற்கு ஒப்புக்கொண்டார் என்று இணையங்களில் பல்வேறு வகையான விஷயங்கள் கசிந்துள்ளது.

இந்த சூழ்நிலையில் நடிகர் சிவகுமார் சமீபத்திய பேட்டி ஒன்றில் கலந்து கொண்டார் அதில் சூர்யா ஜோதிகாவின் காதலை நீங்கள் முதலில் எதிர்த்தீர்கள் என்றும் அதன் பிறகு பெருந்தன்மையுடன் ஏற்றுக் கொண்டீர்கள் என்றும் கூறுகிறார்கள் உண்மையில் நடந்தது என்ன என்று கேள்வி எழுப்பப்பட்டது.

இதற்கு பதில் அளித்த நடிகை நடிகர் சிவகுமார் அது என்னவென்றால் நான் ஒரு 100 படங்களில் பல்வேறு ஹீரோயின்களை காதலிப்பது போல நடித்திருக்கிறேன் படங்களில் காதலுக்கு ஆதரவாக காதலை கொண்டாடும் நபராக நடித்திருக்கிறேன்.

சிவக்குமார் ஓப்பன் டாப்..

அப்படியெல்லாம் ஒரு 100 நடிகைகளுடன் காதலிப்பது போல் நடித்துவிட்டு கேவலம் என்னுடைய மகன் ஒரே ஒரு நடிகையை காதலிக்கிறான் என்பதற்காக அதனை நான் எதிர்த்தால் நான் என்ன ஜென்மம் இதனை ஊர் உலகம் ஒப்புக் கொள்ளுமா?

நான் சூர்யா ஜோதிகா காதலை எல்லாம் எதிர்க்கவில்லை நான்காண்டுகள் காதலித்தார்கள் மகிழ்ச்சியாக திருமணம் செய்து வைத்தேன் நான் சூர்யா ஜோதிகா காதலை எதிர்த்தேன் என்பதில் எந்த அர்த்தமும் கிடையாது அதில் உண்மையவும் கிடையாது என பேசி இருக்கிறார் நடிகர் சிவகுமார். 

இதனை அடுத்து இந்த விஷயமானது தற்போது இணையங்களில் வைரலாக பரவி வருவதோடு சிவக்குமார் போன்ற ஒரு மனித காதலுக்கு தடையாக ஒருபோதும் இருக்க மாட்டார் அதை புரிந்து கொள்ளாமல் இணையங்கள் பல்வேறு வகையான விமர்சனங்களை வைப்பது தவறு என்பதை சுட்டிக்காட்டி இருக்கிறார்கள்.

புதுப்பேட்டை படத்துல நிஜமாவே அந்த உறுப்பில்.. ரகசியம் உடைத்த சினேகா..!

Comments are closed.
Exit mobile version