எஸ் ஜே சூர்யா – வின் வதந்தி எனும் வெப் தொடர் டிசம்பர் இரண்டில் வெளி வருதா?

ஆரம்ப காலத்தில் இயக்குனராக அறிமுகமான பின்னர் நடிகராக களம் கண்டவர் தான் எஸ் ஜே சூர்யா. இவர் இயக்கத்திலும் சரி நடிப்பிலும் சரி பல வெற்றி படங்களை கொடுத்ததின் மூலம் மக்கள் விரும்பும் இயக்குனர் மற்றும் நடிகர் என்று நாம் இவரை அழைக்கலாம்.

 திரைப்படத்தில் நடிப்பதோடு நின்று விடாமல் இவர் தற்போது வெப் தொடரிலும் நடிகராக அறிமுகமாக இருக்கிறார். இந்த வெப் தொடரின் பெயர் வதந்தி என்பதாகும்.

 இதனை புஷ்கர் மற்றும் காயத்ரி தயாரித்துள்ளார்கள் அறிமுக நாயகராக வெப் தொடரில் அறிமுகமாக போகும் எஸ்.ஜே சூர்யாவுடன் சஞ்சனா, லைலா, நாசர் விவேக் பிரசன்னா, ஸ்மிருதி வெங்கட் போன்ற பல நடிகர்கள் இந்த வெப்ட் அவர்களின் நடித்திருக்கிறார்கள்.

 மேலும் இந்த வெப் தொடரை ஆண்ட்ரூ லூயிஸ் இயக்கியிருக்கிறார். வரும் டிசம்பர் இரண்டாம் தேதி ஓ டி டி இல் இந்த தொடர் வெளியே வர உள்ளது.

இது குறிப்பிடத்தக்க விஷயம் என்னவென்றால் தமிழை தவிர தென்னிந்திய மொழிகள் மற்றும் ஹிந்திகளும் எந்த வெப் தொடரை நாம் பார்க்க முடியும்.

 இந்த வெப் தொடரை குறித்து புஷ்கர் மற்றும் காயத்ரி கூறும் போது இன்றைய ரசிகர்கள் தாங்கள் எதை பார்க்க விரும்புகிறார்கள் என்ற ஒரு தெளிவான சிந்தனை நமக்கு இருப்பதால் அவர்களுக்கான ஒரு வித்தியாசமான தனித்துவம் நிறைந்த மனதில் ஆழப் பதியக்கூடிய வகையில் இந்த கலையின் களம் இருக்கும் என்று கூறி இருக்கிறார்.

 அதுமட்டுமல்லாமல் இந்த தொடரில் எஸ் ஜே சூர்யா போலீஸ் அதிகாரியாக வலம் வருவார். மேலும் போலிஸ் அதிகாரியான இவரை சுற்றி ஒரு பொய் வலை பின்னப்பட்டிருக்கும் அந்த வலையில் இருந்து அவர் எப்படி தப்பித்து தன்னை விடுவித்து வருகிறார் என்பதை புதுமையான முறையில் இந்த கதை எடுத்துச் சொல்லும்.

இந்த கதையானது பார்ப்பவர்களை மகிழ்விப்பதோடு மட்டுமல்லாமல் இறுதியில் படம் முடிந்த பின்னால் அவர்களை சிந்திக்க வைக்க கூடிய ஒரு மிகச்சிறந்த வெப் தொடராக இருக்கும்.

 அத்தோடு எஸ் ஜே சூர்யா போன்ற மூத்த கலைஞர்களுடைய திறமையால் இது நிச்சயமாக ஒரு நல்ல நிலையில் எடுக்கப்பட்டு இருப்பதால் புதுமுகம் மற்றும் திறமை வாய்ந்த கலைஞர்களின் படைப்பாக இருப்பதால் இந்த தொடரின் இறுதி காட்சி வரை ரசிகர்கள் நிச்சயமாக இதை பார்ப்பதற்கான வாய்ப்புகள் அதிக அளவு இருக்கிறது.

 இதை அடுத்து ரசிகர்கள் அனைவரும் இந்த வெப் தொடரை காண்பதற்கான ஆவலர் தற்போது இருக்கிறார்கள்.

இன்று அதிகம் படிக்கப்பட்டவை


Comments are closed.
Tamizhakam