குட் பேட் அக்லி.. படத்தில் அஜித்துக்கு வில்லன் யாருன்னு பாருங்க..! வைரலாகும் ஷூட்டிங் ஸ்பாட் போட்டோஸ்..!

தமிழில் 2015 ஆம் ஆண்டு வெளியான திரிஷா இல்லனா நயன்தாரா திரைப்படம் மூலமாக தமிழ் சினிமாவில் இயக்குனராக அறிமுகமானவர் இயக்குனர் ஆதிக் ரவிச்சந்திரன். முதல் திரைப்படத்திலேயே அதிகமான சர்ச்சைக்கு உள்ளான ஒரு இயக்குனராக ஆதிக் ரவிச்சந்திரன் இருந்தார்.

அதற்கு பிறகு அவர் இயக்கிய அன்பானவன் அசராதவன் அடங்காதவன் என்கிற சிம்பு திரைப்படமும் பெரும் பரபரப்பிற்கு உள்ளானது. சர்ச்சையை ஏற்படுத்தும் படமாகதான் அதுவும் இருந்தது. ஆனால் 2023இல் இவரது இயக்கத்தில் வெளிவந்த மார்க் ஆண்டனி திரைப்படம் பெரும் வெற்றியை கொடுத்தது.

குட் பேட் அக்லி

எதிர்பார்த்ததை விடவும் அந்த படம் பெரிய வசூலை கொடுத்தது. அதனை தொடர்ந்து அஜித்தை வைத்து திரைப்படம் இயக்கும் வாய்ப்பை பெற்றார் ஆதிக் ரவிச்சந்திரன். தற்சமயம் அஜித்தை வைத்து குட்பேட் அக்லி என்கிற திரைப்படத்தை இயக்கி வருகிறார் ஆதிக் ரவிச்சந்திரன். இந்த திரைப்படத்தில் அஜித் 3 வேடங்களில் நடிக்கிறார்.

விஜய் எப்படி கோட் திரைப்படத்தில் மூன்று வேடங்களில் நடித்து வருகிறாரோ அதேபோல அஜித்தும் இந்த திரைப்படத்தில் மூன்று வேடங்களில் நடித்து வருகிறார். இதிலும் ஒரு இளமை கால அஜித் கதாபாத்திரம் இருப்பதாக கூறப்படுகிறது.

படத்தில் அஜித்துக்கு வில்லன்

இந்த திரைப்படத்திற்கு இப்போது முதல் ரசிகர்கள் மத்தியில் அதிக வரவேற்பு இருந்து வருகிறது. படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியான பொழுது படம் சிறப்பானதாக இருக்கும் என்று ரசிகர்கள் முடிவு செய்துவிட்டனர்.

ரொம்ப காலமாகவே ஒரு காமெடியான கதாபாத்திரத்தில் அஜித் நடிக்கவில்லை. இந்த நிலையில் இந்த திரைப்படத்தில் ஒரு கதாபாத்திரம் முழுக்க முழுக்க காமெடியான கதாபாத்திரமாக இருப்பதாக பேச்சுக்கள் இருக்கின்றன.

மார்க் ஆண்டனி திரைப்படத்திலேயே ஆதிக் ரவிச்சந்திரனுக்கு காமெடி காட்சிகள் எல்லாம் நன்றாகவே ஒர்க் அவுட் ஆகி இருந்தன. எனவே இந்த திரைப்படமும் கண்டிப்பாக அவருக்கு நல்ல வரவேற்பை பெற்றுத்தரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

வைரலாகும் ஷூட்டிங் ஸ்பாட் போட்டோஸ்

தற்சமயம் விடாமுயற்சி படபிடிப்பில் இருக்கும் அஜித் சீக்கிரமாக அதை முடித்துவிட்டு இந்த வருட இறுதிக்குள் குட் பேட் அக்லி திரைப்படத்தின் படப்பிடிப்பை முடித்து விடுவார் என்றும் கூறப்படுகிறது. இந்த நிலையில் இந்த திரைப்படத்தில் யார் வில்லனாக இருப்பார்கள் என்று ஒரு ஒரு பக்கம் கேள்விகள் இருந்து வருகிறது.

இந்த நிலையில் இந்த திரைப்படத்தில் எஸ்.ஜே சூர்யா வில்லனாக நடிப்பதாக கூறப்படுகிறது. எஸ் ஜே சூர்யா ஏற்கனவே மார்க் ஆண்டனி திரைப்படத்திலேயே நல்ல வரவேற்பு பெற்றார். மேலும் அஜித்தை வைத்து தனது முதல் திரைப்படமான வாலி படத்தை இயக்கி எஸ்.ஜே சூர்யா தமிழ் சினிமாவிற்கு அறிமுகமானார். அதனால் அஜித்திற்கும் எஸ்.ஜே சூர்யாவிற்கும் இடையே நல்ல நட்பு உண்டு என்றாலும் கூட இதுவரை இவர்கள் இருவரும் இணைந்து நடித்தது கிடையாது எனவே அவர் வில்லனாக நடிக்கிறார் என்பது கூடுதல் வரவேற்பை ஏற்படுத்தி இருக்கிறது.

புதுப்பேட்டை படத்துல நிஜமாவே அந்த உறுப்பில்.. ரகசியம் உடைத்த சினேகா..!

Comments are closed.
Exit mobile version