உடம்பு சிலிர்திடுச்சு.. குஷி பட அட்வான்ஸை வாங்கி எஸ்.ஜே.சூரியா செய்த செயல்.. வியந்த ரசிகர்கள்..!

தமிழ் திரை உலகில் தற்போது நடிப்பு அசுரனாக அவதாரம் எடுத்திருக்கும் எஸ் ஜே சூர்யா ஆரம்பகாலத்தில் இயக்குனராக திகழ்ந்தவர்.

இதனை அடுத்து நடிக்க ஆரம்பித்த இவர் ஹீரோவாக, ஆன்டி ஹீரோவாக தனது பன்முக திறமையை வெளிப்படுத்துகிறார்.

அந்த வகையில் தற்போது ரசிகர்களின் மத்தியில் பெருத்த வரவேற்பை பெற்றிருக்கக் கூடிய இவர் ஆரம்ப காலத்தில் குஷி படத்தை இயக்கும் போது ஏற்பட்ட அனுபவங்களை பற்றி தற்போது இவரோடு இணைந்து பணியாற்றிய இயக்குனர்களில் ஒருவர் சில விஷயங்களை பகிர்ந்திருக்கிறார்.

உடம்பு சிலிர்திடுச்சு..

எஸ் ஜே சூர்யா இயக்கிய குஷி படம் பற்றி அதிக அளவு பகிர வேண்டிய அவசியம் இல்லை. அன்று மக்கள் மத்தியில் பெருத்த வரவேற்பை பெற்றுள்ளதோடு மட்டுமல்லாமல் வசூலை வாரி தந்த படங்களில் ஒன்றாக இந்த படம் திகழ்கிறது.

அந்த படத்தை எடுக்க தயாரிப்பாளர்களோடு ஒப்பந்தம் போட்ட நிலையில் இவருக்கு அட்வான்ஸாக பல லட்சங்கள் கொடுக்கப்பட்டு இருந்தது. முதல் முதலாக பல லட்சங்களை பெறுபவர்கள் அந்த பணத்தை சேர்த்து வைக்கவோ அல்லது குடும்பத்தாரிடம் கொடுக்க போது தான் ஆசைப்படுவார்கள்.

எஸ் ஜே சூர்யா செய்த செயலானது தன்னை வியப்பில் தள்ளியதாக எதிர்நீச்சல் சீரியலில் நடித்த மாரிமுத்து பேசிய வீடியோவானது தற்போது இணையங்களில் வைரலாக பரவி வருகிறது.

குஷி பட அட்வான்ஸ் வாங்கிய எஸ் ஜே சூர்யா..

எதிர்நீச்சல் சீரியலில் பக்காவாக தனது நடிப்பை வெளிப்படுத்திய மாரிமுத்து அண்மையில் இறந்து போன விஷயம் உங்களுக்கு தெரிந்திருக்கும்.

எனினும் அவர் இருந்த போது எஸ்.ஜே சூர்யா தனது முதல் சம்பளத்தில் அசிஸ்டன்ட் டைரக்டர்களுக்கு என்ன செய்தார் என்ற கருத்தை பகிர்ந்து இருக்கிறார்.

மேலும் அந்த வீடியோவில் குஷி படத்துக்காக எஸ் ஜே சூர்யா வாங்கிய முதல் சம்பளத்தில் இருந்து அசிஸ்டன்ட் டைரக்டர்களுக்கு பைக்கை வாங்கி கொடுத்து அனைவரையும் ஆச்சிரியத்தில் தள்ளியதாக சொல்லி ரசிகர்கள் அனைவரையும் வியப்பில் தள்ளினார்.

அது மட்டுமல்லாமல் எந்த காலத்தில் முதல் முதலில் பெறக்கூடிய சம்பளத்தை எப்படி எல்லாம் செலவு செய்ய வேண்டும். 

அத்துடன் குடும்பத்தாருக்கு கொடுக்க வேண்டும் என்று இருக்கக் கூடிய மனிதர்களின் முன்னிலையில் தான் வாங்கிய முதல் சம்பளத்தை அடுத்தவர்களோடு பகிர்ந்து கொண்டு அவர்களுக்கும் உதவ வேண்டும் என்று நினைப்பது எளிதான விஷயமல்ல.

எஸ் ஜே சூர்யாவிற்கு அது போன்ற ஒரு பரந்த மனது இருந்ததால் தான் உதவி இயக்குனர்கள் சைக்கிளில் வந்து கஷ்டப்படக் கூடாது என்ற உயர்ந்த எண்ணத்தில் பைக் வாங்கி கொடுத்தார் என்று பேசி இருக்கிறார்.

என்ன செய்தார் தெரியுமா?

தற்போது இணையங்களில் வைரலாக மாறி வருவதோடு மட்டுமல்லாமல் ஃபஸ்ட் சேலரியில் கிடைத்த அட்வான்ஸை பகிர்ந்து கொண்டதை பற்றி மகிழ்ச்சியோடு எஸ் ஜே சூரியாவின் மனதை எண்ணி ரசிகர்கள் பலரும் பாராட்டி வருகிறார்கள்.

இது போன்ற உயர்ந்த எண்ணம் இருப்பதால் தான் இன்று திரையுலகில் தனக்கு என்று ஒரு இடத்தை பிடித்துக் கொண்டு இருக்கிறார் என்ற விஷயத்தை வலியுறுத்தி சொல்லி வரும் ரசிகர்கள் அவருக்கு வாழ்த்துக்களை சொல்லி இருக்கிறார்கள்.

மேலும் இந்த விஷயத்தை அவர்கள் நண்பர்களுக்கு ஷேர் செய்து இணையத்தில் அதிகளவு பார்க்கப்படும் விஷயங்களில் ஒன்றாக மாற்றி விட்டார்கள்.

புதுப்பேட்டை படத்துல நிஜமாவே அந்த உறுப்பில்.. ரகசியம் உடைத்த சினேகா..!

Comments are closed.
Exit mobile version