“வெயிலுக்கு முகத்துக்கு போட வேண்டிய கூல் பேக்..!” – நீங்களும் போடுங்க பாஸ்..!

அனலாக இருக்கும் வெயிலுக்கு இதமாக உங்கள் முகத்தை வைத்துக்கொள்ள கூல் பேக் பயன்படுத்தினாலே போதும். உங்கள் முகம் மட்டுமல்லாமல் சருமங்களில் வெயில் காரணமாக ஏற்படுகின்ற பாதிப்புகளில் இருந்து உங்களை தற்காத்துக் கொள்ள முடியும்.

cool pack

வெயில் காலத்தில் சருமத்தில் இருக்கும் நீர் சத்தை இழந்து வறண்டு போகக் கூடிய சருமத்தை நீங்கள் கூலாக வைத்துக்கொள்ள வீட்டில் இருக்கும் மூன்று பொருட்களை பயன்படுத்தி உங்கள் சருமத்திற்கு தேவையான ஈரப்பதத்தை தருவதோடு மட்டுமல்லாமல் முகத்திற்கு தேவையான பளபளப்பையும் ஏற்படுத்திக்கொள்ள முடியும்.

மேலும் கோடையில் முகப்பரு அதிகரித்து முகமானது எண்ணெய் வழியக்கூடிய நிலையில் இருக்கும். இதனை தடை செய்ய நீங்கள் உங்கள் சருமத்தில் இருக்கக்கூடிய சருமத்துளைகளை சரியாக பராமரிப்பதின் மூலம் முகப்பரு மற்றும் சரும வெடிப்புகள் ஏற்படாமல் இருக்கும்.

cool pack

அது மட்டுமல்லாமல் முகத்தில் ஏற்படக்கூடிய சுருக்கங்கள்,கருப்பு புள்ளிகள், சூரிய ஒளியின் தாக்கத்தினால் ஏற்படும் புற ஊதா கதிர்களின் மூலம் நமது சருமங்களில் ஏற்படுகின்ற பாதிப்புகளை தடை செய்ய வெள்ளரிக்காய், கற்றாழை மற்றும் புதினா இந்த மூன்றும் போதும்.இதனை நீங்கள் பேஸ் பேக்காக பயன்படுத்துவதன் மூலம் முக அழகை பெறுவதோடு வெயிலின் தாக்கத்தால் ஏற்படும் பாதிப்புகளையும் நீங்கள் தடுத்து விடலாம்.

இதற்காக நீங்கள் வெள்ளரிக்காய் அரைத்துண்டு, கற்றாழை ஜெல் 2 ஸ்பூன் இவை இரண்டையும் நன்கு அரைத்துக் கொண்டு அதனோடு சிறிதளவு புதினாவையும் சேர்த்து அரைத்து பிறகு இதில் தயிரை சேர்த்து நன்கு குழைத்து பேஸ்ட் பதத்திற்கு வந்த பிறகு உங்கள் முகத்தில் பூசி விடுங்கள்.

cool pack

இதனை அடுத்து அரை மணி நேரம் கழித்து உங்கள் முகம் உலர்ந்த  பிறகு நீங்கள் குளிர்ந்த நீரின் மூலம் முகத்தை கழுவ வேண்டும். இவ்வாறு வாரத்தில் இரண்டு முறை நீங்கள் செய்வதின் மூலம் உங்கள் முகம் குளிர்ச்சி அடைவதோடு மட்டுமல்லாமல் பொலிவாகி கரும்புள்ளிகள், முகத்தில் இருக்கும் மருக்கள், முகப்பருக்கள் போன்றவை எளிதில் நீங்கும்.

மேற்கூறிய இந்த மூன்று பொருட்களையும் இந்த கோடையில் நீங்கள் பயன்படுத்திப் பாருங்கள். கட்டாயம் உங்கள் சருமத்தில் ஏற்படும் மாற்றத்தை நீங்களே உணர்வீர்கள்.

cool pack

வெள்ளரிக்காய் உங்கள் சருமத்திற்கு மிகச்சிறந்த ஹைட்ரேட்டராக விளங்குவதால் உங்கள் சருமத்தில் இருக்கக்கூடிய ஈரப்பதத்தை தக்க வைத்துக் கொள்ள உதவுவதோடு மட்டுமல்லாமல் ஆலோவேரா உடலுக்கு குளிர்ச்சியை தரக்கூடிய மிகச்சிறந்த ஏஜென்ட் ஆக பணிபுரியும்.

Check Also

ப்பா…கேட்டதும் கிறுகிறுனு வருதே.. என்னது 50 வினாடிக்கு இம்புட்டு சம்பளமா? – யாருமா.. அந்த நடிகை..

திரை உலகில் கோடிக்கணக்கில் சம்பளமாக வாங்குகின்ற நடிகர் நடிகைகளை பற்றி உங்களுக்கு சொல்ல தேவை இல்லை. அந்த வகையில் தளபதி …