வைர மோதிரம்.. நிச்சயதார்தத்துடன் நின்று போன திருமணம்..! சினேகாவின் முதல் கணவர் யார் தெரியுமா..?

தமிழ் சினிமாவில் புன்னகைக்கரசி என்று அனைவராலும் அழைக்கப்படும் நடிகையாக சினேகா இருந்து வருகிறார். ஆரம்ப காலகட்டங்களில் சினேகா மலையாள சினிமாவில்தான் முயற்சி செய்து வந்தார். தமிழ்நாட்டை சேர்ந்தவராக இருந்தாலும் சினேகாவின் இளமை காலங்களில் அவர் கேரளாவில்தான் செட்டிலாகி இருந்தார்.

அதனால் அப்பொழுது ஒரு கிளப்பிற்கு இரவு செல்லும் பொழுது அங்கு சினிமா பிராபலங்களிடம் அறிமுகமான சினேகாவிற்கு அதன் மூலமாக சினிமாவில் வாய்ப்பு கிடைத்தது. தொடர்ந்து மலையாளத்தில் அவர் நடித்த திரைப்படம் பெரிதாக அவருக்கு வரவேற்பை பெற்று தரவில்லை.

அதனை தொடர்ந்து தமிழில் என்னவளே திரைப்படத்தில் முதன்முதலாக அறிமுகமானார் நடிகை சினேகா. அதற்குப் பிறகு தமிழில் ஆனந்தம் திரைப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடிப்பதற்கு அவருக்கு வாய்ப்பு கிடைத்தது.

சினேகாவுக்கு வந்த வாய்ப்பு:

அதற்குப் பிறகு தமிழில் நிறைய திரைப்படங்களில் வாய்ப்பை பெற்றார் நடிகை சினேகா. அப்படி அவர் நடித்த திரைப்படங்களில் உன்னை நினைத்து, புன்னகை தேசம் மாதிரியான திரைப்படங்கள் அப்போது அதிக வசூல் படைத்த திரைப்படங்கள் ஆகும்.

சினேகாவிற்கு பெரிதாக கிசுகிசுக்கள் என்று இருந்தது கிடையாது. ஒரு சில கிசுகிசுக்கள் இருந்தாலும் அவையும் மக்கள் மத்தியில் பிரபலமானது கிடையாது. சினேகா மிக தாமதமாகதான் திருமணம் செய்து கொண்டார். அதுவரை தமிழ் சினிமாவில் தொடர்ந்து நடித்து வந்து கொண்டிருந்தார்.

நடிகர் பிரசன்னாவை காதலித்து திருமணம் செய்து கொண்டார் சினேகா. அதற்கு முன்பு திரையில் மற்ற நடிகர்களை இவர் காதலித்ததாக பேச்சுக்கள் இருந்தது கிடையாது. இந்த நிலையில் திருமணத்திற்கு முன்பே அவருக்கு ஒரு தயாரிப்பாளருடன் நிச்சயதார்த்தம் நடந்தது என்று கூறுகிறார் பயில்வான் ரங்கநாதன்.

முன்பே நடந்த நிச்சயதார்த்தம்:

நாக் ரவி என்கிற அந்த தயாரிப்பாளருக்கு முதலில் நடிகை சினேகா மீது காதல் இருந்ததாக கூறப்படுகிறது. இதனை அடுத்து அவர் சினேகாவுடன் நிச்சயதார்த்தம் செய்திருக்கிறார். இருவரும் வைரம் மோதிரமும் மாற்றி இருக்கின்றனர்.

அதற்குப் பிறகு இவர்கள் இருவருக்கும் இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டுள்ளது. பொதுவாகவே நிச்சயதார்த்தம் நடந்தாலே பாதி கல்யாணம் முடிந்து விட்டதாக பேச்சுக்கள் இருக்கும். அந்த நிலையில் சினேகா கண்டிப்பாக நாக் ரவியைதான் திருமணம் செய்து கொள்ளப் போகிறார் என்று அப்பொழுது வலுவான பேச்சுக்கள் இருந்து வந்தன.

இருந்தாலும் நிச்சயதார்த்தத்திற்கு பிறகு ஏற்பட்ட கருத்து வேறுபாட்டால் அவரை விட்டு விலகி விட்டார் நடிகை சினேகா. அதற்குப் பிறகு காதலித்துதான் திருமணம் செய்து கொள்ள வேண்டும் என்கிற மனநிலைக்கு வந்துவிட்டார். அந்த நிலையில்தான் இவர் நடிகர் பிரசன்னாவை திருமணம் செய்து இருக்கிறார் என்று கூறப்படுகிறது.

புதுப்பேட்டை படத்துல நிஜமாவே அந்த உறுப்பில்.. ரகசியம் உடைத்த சினேகா..!

Comments are closed.
Exit mobile version