எல்லாம் பணம் படுத்தும் பாடு.. அப்படி நடிக்க மாட்டேன்.. கறார் காட்டிய சினேகா.. கடைசியில் நடந்த கொடுமை..!

நடிகை சினேகா நடிகருக்கு தனியாக நடிக்க மாட்டேன் என மறுத்து தற்போது அதே நடிகருக்கு அம்மாவாக நடித்துள்ள கொடுமை அரங்கேறி இருக்கிறது. இது குறித்து ரசிகர்கல் பலரும் தங்களின் கலாய் கருத்துக்களை பதிவிட்டு வருகின்றனர்.

அந்த நடிகர் வேறு யாருமில்லை. நடிகர் விஜய் தான். நடிகர் விஜய் வாரிசு திரைப்படத்தில் ஹீரோவாக நடித்திருந்தார். இந்த திரைப்படத்தில் நடிகை சங்கீதா விஜயின் அண்ணியாக தெலுங்கு நடிகர் ஸ்ரீகாந்த்துக்கு மனைவியாக நடித்திருப்பார்.

இந்த கதாபாத்தரத்தில் முதன் முதலில் நடிக்க இருந்தவர் நடிகை சினேகா தான். இவர் தெலுங்கு நடிகர் ஸ்ரீகாந்த்துக்கு ஜோடியாக சில தெலுங்கு திரைப்படங்களில் நடித்திருக்கிறார் என்றாலும் கூட நடிகர் விஜய்க்கு அண்ணி என்ற கதாபாத்திரத்தில் என்னால் நடிக்க முடியாது என அந்த நேரத்தில் தவிர்த்தார்.

ஆனால், தற்போது வெளியாகி வசூலில் சக்கை போடு போட்டுக் கொண்டிருக்கும் தி கிரேட்டஸ்ட் ஆப் ஆல் டைம் திரைப்படத்தில் நடிகர் விஜய்க்கு அம்மா கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார். எல்லாம் பணம் படுத்தும் பாடு என கருத்துக்களை பதிவிட்டு வந்தனர்.

விஜய்க்கு அண்ணியாக நடிக்க மறுத்து தற்போது அம்மாவாக நடித்திருக்கும் நடிகை சினேகா குறித்து பேச்சுக்கள் எழுந்திருக்கின்றன.

அதே சமயம் நடிகர் விஜய்க்கு அம்மா என்றாலும் கூட இந்த படத்தில் அப்பா நடிகர் விஜய்க்கு ஜோடியே நடிகை சினேகா தான் அதன் அடிப்படையில் தான் அவர் இந்த கோட் திரைப்படத்தில் நடிக்கப ஒப்புக்கொண்டிருக்கிறார்.

இவருடைய கதாபாத்திரத்திற்கும் படத்தில் நல்ல ஸ்கோப் இருந்தது. இதுவும் இந்த படத்தை சினேகா ஒப்புக் கொள்வதற்கு ஒரு காரணமாக இருந்திருக்கிறது என கூறுகிறார்கள் விவரம் அறிந்த வட்டாரங்கள்.

வசீகரா திரைப்படத்தில் நடிகர் விஜய்க்கு ஜோடியாக நடித்திருப்பார் நடிகை சினேகா. கோட் படத்தின் ஒரு காட்சியில் வசீகரா படத்தில் இடம்பெற்ற புகைப்படம் ஒன்றையும் வீட்டில் மாட்டி வைத்திருப்பார் இயக்குனர் வெங்கட் பிரபு.

இதனை கவனித்த ரசிகர்கள் நடிகர் விஜய்க்கு காந்தி என்ற பெயர் வைத்ததற்கு பதிலாக பூபதி என்றும் சினேகாவின் அனுராதா என்ற பெயருக்கு பதிலாக பிரியா என்றும் பெயர் வைத்திருந்தால் சரியாக இருந்திருக்கும் என கூறி வருகின்றனர்.

புதுப்பேட்டை படத்துல நிஜமாவே அந்த உறுப்பில்.. ரகசியம் உடைத்த சினேகா..!

Comments are closed.
Exit mobile version