விலைமாது கதாபாத்திரத்தில் சிறப்பாக நடித்தது யார்..? கேள்விக்கு ரசிகர்கள் கொடுத்த பதிலை பாருங்க..!

நாய் வேஷம் போட்டால் குரைத்துதான் ஆகணும், குரங்குக்கு வாழ்க்கைபட்டால் மரத்துக்கு மரம் தாவித்தான் ஆகணும் என்று பழமொழி சொல்வார்கள். அந்த வகையில் சினிமாவில் நடிக்க வந்துவிட்டால் ராஜா வேஷமும் கிடைக்கும். பிச்சைக்காரன் வேடமும் நடித்துதான் ஆக வேண்டும்.

புன்னகை அரசி சினேகா

தமிழ் சினிமாவில் ஹோம்லி லுக்கில் நடித்து ரசிகர்கள் மத்தியில் பெரிய வரவேற்பை பெற்றவர் நடிகை சினேகா. கேஆர் விஜயாவுக்கு பிறகு, இவருக்கு தான் புன்னகை அரசி என்ற பட்டத்தை சினிமா ரசிகர்கள் வழங்கினார்கள்.

துவக்கத்தில் கதாநாயகியாக இருந்தாலும் படத்தில் சின்ன ரோல்களில், பெரிய அளவில் கவனிக்கப்படாத நிலையில்தான் நடித்து வந்தார் சினேகா. ஆனால் ஆட்டோகிராப் படத்தில் சினேகாவுக்கு நல்ல ஒரு கேரக்டரை கொடுத்து அவரது நடிப்பை பேச வைத்தவர் இயக்குனர் சேரன்.

புதுப்பேட்டை படத்தில்…

அதன்பிறகு வசூல் ராஜா எம்பிபிஎஸ் படத்தில் கமலுக்கு ஜோடியாக நடித்தார். வசீகரா படத்தில் விஜய்க்கு ஜோடியாக நடித்தார். அஜீத், பிரசாந்த், தனுஷ், பிரசன்னா, சுந்தர் சி போன்றவர்களுக்கும் ஜோடியாக நடித்தார்.

இதில் செல்வராகவன் இயக்கத்தில் தனுஷ் நடித்த புதுப்பேட்டை படத்தில் சினேகா விலைமாது கேரக்டரில் நடித்திருப்பார். இதில் சில படுக்கையறை காட்சிகளில் சினேகா நடிப்பை பார்த்து ரசிகர்கள் அசந்து விட்டனர். ஹோம்லி லுக்கில் நடித்த சினேகாவை, இப்படி ஒரு கேரக்டரில் நடிக்க வைத்து விட்டாரே செல்வராகவன் என்று அதிருப்தியடைந்தவர்களும் உண்டு.

இதையும் படியுங்கள்: வடிவேலுவால் கசக்கி பிழியப்பட்ட நடிகைகள்.. இந்த நடிகையுமா..? பிரபல நடிகர் வெளியிட்ட பகீர் தகவல்..!

விலைமாது கதாபாத்திரத்தில்…

இந்நிலையில், சமீபத்தில் youtube பக்கம் ஒன்றின் சார்பாக ரசிகர்களிடம் விலைமாது கதாபாத்திரத்தில் சிறப்பாக நடித்தது யார் என்ற கேள்வி முன் வைக்கப்பட்டிருந்தது.

நான்கு பேரில் யார்?

அதில் புதுப்பேட்டை படத்தில் நடித்த நடிகை சினேகா, வானம் படத்தில் நடித்த நடிகை அனுஷ்கா, தனம் படத்தில் நடித்த நடிகை சங்கீதா, டார்ச் லைட் படத்தில் நடித்த நடிகை சதா ஆகியோர் ஆகிய நான்கு பேரில் யார் சிறப்பாக தங்களுடைய கதாபாத்திரத்தை நடித்தது என்ற கேள்வி எழுப்பப்பட்டிருந்தது.

இதையும் படியுங்கள்: அனைவரின் முன்பும் ரஜினியை அப்படி அழைத்த குஷ்பூ.. பதறிப்போன பிரபு..! பலரும் அறியாத ரகசியம்..!

இதற்கு பெரும்பாலான ரசிகர்கள் நடிகை சினேகா இந்த கதாபாத்திரத்தில் சிறப்பாக நடித்திருப்பதாக வாக்களித்து இருக்கின்றனர்.

ரசிகர்கள் பதில்

விலைமாது கதாபாத்திரத்தில் சிறப்பாக நடித்தது யார் என்ற கேள்விக்கு ரசிகர்கள் கொடுத்த பதில் சினேகா என்பதற்கு காரணம், பல படங்களில் குடும்பப் பாங்கான ஒரு பெண்ணாக அமைதியாக நடித்துவிட்டு, அதுபோன்ற ஒரு கேரக்டரிலும் தைரியமாக நடித்த சினேகாவுக்கு கிடைத்த பாராட்டாக தான் அது இருக்கிறது.

புதுப்பேட்டை படத்துல நிஜமாவே அந்த உறுப்பில்.. ரகசியம் உடைத்த சினேகா..!

Comments are closed.
Exit mobile version