ஆடை குறித்து எழுந்த விமர்சனம்.. புன்னகையரசி சினேகா எடுத்த அதிரடி முடிவு..!

சினிமாவில் நடிக்கும் நடிகர், நடிகைளுக்கு ஒரு வித்தியாசமான உணர்வு இருக்கும். அதாவது அவர்கள் தன்னைத்தானே முன்னிலைப்படுத்தி கொள்வார்கள். தன்னை மையப்படுத்தி தான் இந்த உலகமே இயங்குவதாக கற்பனையாக நம்புவார்கள்.

இந்த உலகத்தில் அவர்கள் எது செய்தாலும் அவர்களை இந்த உலகமே உற்று நோக்கும், எப்போதும் கவனித்துக் கொண்டே இருக்கும் என்ற ஒரு புகழ் மயக்கத்தில் வாழ்ந்து கொண்டிருப்பார்கள்.
சில நடிகர், நடிகைகளுக்கு இது போன்ற ஒரு மோசமான ஒரு உணர்வு இருந்து வருகிறது.

அதாவது அவர்களைப் பொறுத்தவரை அவர்கள்தான் மக்களால் எப்போதும் கவனிக்கப்பட வேண்டியவர்களாக நினைக்கின்றனர். அதனால் அவர்கள் செய்கிற மிக சாதாரண விஷயங்களை கூட சரித்திர சம்பவங்களாக பேட்டிகளில் கூறி வருகின்றனர்.

சினேகா

நடிகை சினேகா, தமிழ் சினிமாவில் புன்னகை அரசி என்று வர்ணிக்கப்படும் ஒரு அழகான நடிகையாக இருக்கிறார். தமிழ், தெலுங்கு, மலையாளம் என பல மொழி படங்களில் நடித்தவர். பல முன்னணி நடிகர்களுடன் நடித்த டாப் ஹீரோயின் என்பதும் குறிப்பிடத்தக்கது.

வார பத்திரிகை ஒன்றில் வந்த சினேகாவின் அட்டை படத்தை பார்த்து மணிரத்னத்திடம் உதவி இயக்குனராக இருந்த சுசி கணேஷ், அவர் இயக்கிய விரும்புகிறேன் என்ற படத்தில் கதாநாயகியாக அறிமுகப்படுத்தினார்.

இந்த படத்தில் பிரசாந்த் ஜோடியாக சினேகா நடித்திருந்தார். முதல் படத்திலேயே அவரது எளிமையான வசீகர அழகு ரசிகர்களுக்கு மிகவும் பிடித்துப் போனது.

நிறைய கிசுகிசுக்கள்

தொடர்ந்து பல வெற்றிப் படங்களில் நடிக்கும் வாய்ப்பு பெற்றார். அதே நேரத்தில் பல முறை கிசுகிசுகளிலும் அவர் சிக்கினார். குறிப்பாக நடிகர் ஸ்ரீகாந்தை சினேகா திருமணம் செய்து கொள்ளப் போவதாகவும் கிசுகிசு பரவியது.

சினிமாவில் பல சர்ச்சைகளை கடந்து வந்த நடிகை சினேகா, புதுப்பேட்டை படத்தில் விலைமாது கேரக்டரில் நடித்தார். அது ஒரு விதத்தில் சர்ச்சையை கிளப்பினாலும், அவரது நடிப்பு அந்த படத்தில் மிகச் சிறப்பாக இருந்தது.

பிரசன்னாவுடன் காதல்

அச்சமுண்டு அச்சமுண்டு என்ற படத்தில் நடித்த போது நடிகர் பிரசன்னாவுடன் சினேகாவுக்கு காதல் ஏற்பட்டு, இருவரும் திருமணம் செய்து கொண்டனர். இப்போது இந்த நட்சத்திர தம்பதிக்கு ஒரு மகனும், ஒரு மகளும் உள்ளனர்.

இப்போது நடிகர் விஜய் நடிப்பில் உருவான வெங்கட் பிரபு இயக்கிய கோட் படத்தில் நடித்துள்ளார். இதில் அப்பா, மகன் என்ற இரண்டு கேரக்டர்களில் விஜய் நடிக்கிறார். இதில் அப்பா கேரக்டர் விஜய்க்கு ஜோடியாக சினேகா நடித்துள்ளார். வசீகரா படத்துக்கு பிறகு இந்த படத்தின் விஜயுடன் அவர் ஜோடி சேர்ந்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

பழைய பேட்டி

இந்நிலையில் சமீபத்தில் நடிகை சினேகா அளித்த பழைய பேட்டி ஒன்று இணையத்தில் ட்ரெண்டாகி வருகிறது.

அந்த பேட்டியில் சினேகா கூறியிருப்பதாவது, ஒருமுறை பிரபல பத்திரிகை ஒன்றில் அடிக்கடி சினேகா ஒரே உடையை அணிகிறார். அவருக்கு அணிவதற்கு வேறு ஆடைகளே இல்லையா என்று கூறியிருந்தார்கள்.

ஒருமுறை தான் அதை அணிவேன்

நான் அணியும் ஆடைகள் குறித்து நிறைய விமர்சனங்கள் வந்து கொண்டே இருந்தது. இதனாலேயே நான் ஒருமுறை அணிந்த உடையை மீண்டும் அணிய மாட்டேன். ஒரு உடையை ஒரு முறை அணிந்து விட்டால், அதை தெரிந்தவர்களுக்கோ அல்லது நண்பர்களுக்கோ கொடுத்து விடுவேன் என்று சினேகா கூறியிருக்கிறார்.

இதை பார்த்து ரசிகர்கள் இதெல்லாம் ஒரு விஷயமா என்று கிண்டலடித்து வருகின்றனர்

அதிரடி முடிவு

ஆடை குறித்து எழுந்த விமர்சனத்தால், புன்னகையரசி சினேகா எடுத்த அதிரடி முடிவை பார்த்து, பரவாயில்லை இதுவும் கூட நல்ல ஒரு உதவும் கு்ணம் தான் என்றும் பாராட்டுகின்றனர்.

புதுப்பேட்டை படத்துல நிஜமாவே அந்த உறுப்பில்.. ரகசியம் உடைத்த சினேகா..!

Comments are closed.
Exit mobile version