முதல் திருமணத்தை நிறுத்திய சினேகா.. இது தான் காரணமா.. ரகசியம் உடைத்த பிரபல நடிகர்..!

நடிகை சினேகா, தமிழில் விரும்புகிறேன் படம் மூலம் அறிமுகமானார். தொடர்ந்து தமிழில் பல படங்களில் நடித்து ரசிகர்களின் மனதில் இடம்பிடித்தார்.

ஆனந்தம், என்னவளே, பம்மல் கே சம்பந்தம், வசீகரா, வசூல்ராஜா எம்பிபிஎஸ், ஆட்டோகிராப், ஜனா, பார்த்திபன் கனவு, உன்னை நினைத்து, பிரிவோம் சந்திப்போம் போன்ற பல படங்களில் நடித்து முன்னணி நடிகையாக உயர்ந்தார்.

சினேகா

தமிழில் மட்டுமின்றி தெலுங்கு, கன்னடம், மலையாளம் என பிற மொழி படங்களிலும் நடித்து சினேகா சினிமா துறையில் முக்கிய நடிகையாக மாறினார். அவருக்கு புன்னகை அரசி என்ற பட்டப் பெயரும் கிடைத்தது.

தமிழில் தொடர்ந்து நடித்து வந்த நிலையில், ஸ்ரீகாந்துக்கும் சினேகாவுக்கும் காதல் என்ற தகவல் பரவியது. போஸ், ஏப்ரல் மாதத்தில், பார்த்திபன் கனவு போன்ற படங்களில் அவர்கள் ஜோடியாக நடித்ததால் இருவரும் காதலித்து வருகின்றனர் என்று கூறப்பட்டது.

ஆனால் அச்சமுண்டு, அச்சமுண்டு என்ற படத்தில் நடித்த போது, நடிகர் பிரசன்னா மீது, சினேகாவுக்கு காதல் ஏற்பட்டு இருவரும் பெற்றோர்கள் சம்மதத்துடன் திருமணம் செய்துக்கொண்டனர்.

இவர்களது திருமண விழாவில் திரை பிரபலங்கள் பலரும் பங்கேற்று மணமக்களை வாழ்த்தினர்.

அதிக விளம்பரங்களில்…

திருமணத்துக்கு பிறகும் தொடர்ந்து படங்களில் நடித்து வரும் சினேகா, டிவி சேனல்கள் நடத்தும் நிகழ்ச்சிகளிலும் விருந்தினராக பங்கேற்கிறார். கேம் ஷோக்களில் நடுவராக கலந்துக்கொண்டு போட்டியாளர்களை தேர்வு செய்கிறார்.

இப்போது அதிகமான விளம்பர படங்களில் நடிக்கும் நடிகைகளில் ஒருவராக சினேகா இருக்கிறார். நடுத்தர வயதில் அழகான மனைவி, அழகான தாய் என்றால், அந்த விளம்பரத்தில் சினேகா இருக்கிறார்.

 

ஜவுளிக்கடைகள், வீட்டு உபயோகப் பொருட்கள் என பல விளம்பரங்களில் சினேகா நடிக்கிறார்.

சினேகாலயா சில்க்ஸ்…

இப்போது சினேகாலயா சில்க்ஸ் என்ற புதிய ஜவுளிக்கடையை சினேகா துவங்கி இருக்கிறார். கடந்த 12ம் தேதி இந்த துணிக்கடை திறப்பு விழா நடைபெற்றது.

அங்கு ஜவுளி எடுக்க செல்பவர்கள் சினேகா இருந்தால் நேரில் பார்க்கலாம். வாய்ப்பிருந்தால் அவருடன் செல்பி எடுக்கவும் வாய்ப்புள்ளது.

சினேகா – பிரசன்னா இருவருக்கும் திருமணமாகி பல ஆண்டுகள் ஆன நிலையில், மகன் மகள் இருக்கின்றனர்.

இந்நிலையில் சினேகாவின் முதல் திருமணம் குறித்த ஒரு தகவலை பத்திரிகையாளர் மற்றும் நடிகர் பயில்வான் ரங்கநாதன், சமீபத்திய நேர்காணல் ஒன்றில் கூறியிருக்கிறார்.

தெலுங்கு பட தயாரிப்பாளர்…

நடிகர் பிரசன்னாவை சினேகா காதலித்து திருமணம் செய்துக்கொண்டார். அதற்கு சில ஆண்டுகளுக்கு முன்பே, தெலுங்கு பட தயாரிப்பாளர் நாக் ரவி என்பவருடன், சினேகாவுக்கு திருமண நிச்சயதார்த்தம் நடந்தது.

நிச்சயதார்த்தம்

அதில் இருவரும் மோதிரமும் மாற்றிக்கொண்டனர். ஆனால் நிச்சயதார்த்தம் நடந்த இரண்டு மாதங்களிலேயே கருத்து வேறுபாடு காரணமாக இருவரும் பிரிந்து விட்டனர். அதன்பிறகுதான் பிரசன்னாவை, சினேகாவை திருமணம் செய்துக்கொண்டார் என கூறியிருக்கிறார் பயில்வான் ரங்கநாதன்.

கருத்து வேறுபாடு காரணமாக, தெலுங்கு பட தயாரிப்பாளருடன் நடக்க இருந்த முதல் திருமணத்தை நிறுத்தியிருக்கிறார் சினேகா. பலரும் அறியாத இந்த ரகசியத்தை இப்போது உடைத்திருக்கிறார் பிரபல நடிகரான பயில்வான் ரங்கநாதன்.

புதுப்பேட்டை படத்துல நிஜமாவே அந்த உறுப்பில்.. ரகசியம் உடைத்த சினேகா..!

Comments are closed.
Exit mobile version