GOAT சினேகா கேரக்டரை தவற விட்டு நடிகை VP-க்கு போன் போட்டு சொன்ன விஷயம்..!

இயக்குனர் வெங்கட் பிரபு தன்னுடைய பேட்டி ஒன்றில் தி கிரேட்டஸ்ட் ஆப் ஆல் டைம் திரைப்படத்தில் நடிகை சினேகா கதாபாத்திரத்தில் நடிக்க இருந்த நடிகை படம் வெளியான பிறகு எனக்கு போன் செய்து சொன்ன விஷயம் என்று ஒரு விஷயத்தை போட்டு உடைத்து இருக்கிறார்.

நடிகர் விஜய் நடிப்பில் உருவாகியுள்ள தி கிரேட்டஸ்ட் ஆஃப் ஆல் டைம் திரைப்படம் ரசிகர்களை கவர்ந்திருக்கின்றது. படத்தில் சில தொய்வுகள் இருந்தாலும் ஒட்டுமொத்தமாக படம் புது அனுபவமாக இருக்கிறது.

நடிகர் விஜய்க்கு பிளாக்பஸ்டர் திரைப்படமாக அமைந்திருக்கிறது. நடிகர் விஜய் அரசியல் அறிவிப்பை வெளியிட்ட பிறகு வெளியாக கூடிய முதல் திரைப்படம் பிளாக்பஸ்டர் ஹிட் அடித்து இருக்கிறது.

இது விஜய் ரசிகர்களுக்கும் மிகப் பெரிய கொண்டாட்டமாக மாறி இருக்கிறது. மறுபக்கம் மோசமான விமர்சனங்களை தெரிவிக்கும் சிலரும் இருக்கத்தான் செய்கிறார்கள்.

ஆனால் இதெல்லாம் கடந்து கோட் திரைப்படம் நல்ல வசூலை பெற்றிருக்கிறது. கட்டாயம் 500 கோடி என்ற வசூலை எளிமையாக கலந்து விடும் கோட் என்று கூறுகிறார்கள்.

இது ஒரு பக்கம் இருக்க இந்த திரைப்படத்தில் நடிகர் விஜய்க்கு ஜோடியாக நடிகை சினேகா நடித்திருந்தார். இந்த கதாபாத்திரத்தில் அற்புதமாக நடித்திருந்தார் நடிகை சினேகா என்றும் இவருடைய சென்டிமென்ட் காட்சிகள் படத்திற்கு வலு சேர்த்திருக்கின்ற என்றும் விமர்சனங்கள் எழுந்தன.

நடிகை சினேகாவின் நடிப்புக்கு வரவேற்பு எழுந்தது. இந்நிலையில், இந்த கதாபாத்திரத்தில் முதலில் நடிக்க இருந்தது நடிகை சினேகா கிடையாது நடிகை நயன்தாரா தான் என்ற ரகசியத்தை உடைத்து இருக்கிறார் இயக்குனர் வெங்கட் பிரபு.

படம் வெளியான பிறகு படத்தை முழுதாக பார்த்த நடிகை நயன்தாரா இந்த கதாபாத்திரத்திற்கு சினேகாவை தவிர வேறு எந்த நடிகையும் பொருந்தமாக இருந்திருக்க மாட்டார்.

உங்களுடைய தேர்வு மிகச் சரியாக இருந்திருக்கிறது. நடிகை சினேகா இந்த கதாபாத்திரத்தில் அருமையாக நடித்திருக்கிறார் என்று சொன்னதாக இயக்குனர் வெங்கட் பிரபு சமீபத்திய பேட்டியில் பதிவு செய்திருக்கிறார்.

புதுப்பேட்டை படத்துல நிஜமாவே அந்த உறுப்பில்.. ரகசியம் உடைத்த சினேகா..!

Comments are closed.
Exit mobile version