உங்களுக்கு வயசே ஆகல.. இளம் நடிகைகளை ஓரம் கட்டும் புன்னகையரசி சினேகா..! வைரல் வீடியோ..!

தென்னிந்திய சினிமாவில் 2000 காலகட்டங்களில் நட்சத்திர நடிகையாக பலம் வந்து கொண்டிருந்தவர் தான் நடிகை சினேகா .

இவர் தமிழ் , தெலுங்கு, மலையாளம் உள்ளிட்ட பல்வேறு மொழி திரைப்படங்களில் பல வெற்றி திரைப்படங்களில் நடித்து நட்சத்திர நடிகையாக வலம் வந்து கொண்டிருந்தார் .

நடிகை சினேகா:

2001 ஆம் ஆண்டில் இங்கே ஒரு நீலபக்ஷி என்ற மலையாள திரைப்படத்தின் மூலமாக அறிமுகமான இவர் தமிழில் 2001 ஆம் ஆண்டில் வெளிவந்த என்னவளே திரைப்படத்தின் மூலமாக ஹீரோயினாக அறிமுகமானார்.

மும்பை சொந்த ஊராகக் கொண்டிருந்த சினேகா தமிழ் சினிமாவில் பல்வேறு வெற்றி திரைப்படங்களில் நடித்ததன் மூலமாக எல்லோருது கவனத்தையும் ஈர்த்தார்.

நல்ல தமிழ் உச்சரிப்புடன் தமிழ் பேசும் பெண்ணாக இவர் நடித்ததால் வெகு சீக்கிரத்திலேயே தமிழ் ரசிகர்களின் மனதை கவர்ந்து விட்டார்.

சினேகாவின் படங்கள்:

குறிப்பாக இவரது நடிப்பில் வெளிவந்த பார்த்தாலே பரவசம் , கிங் , பம்மல் கே சம்பந்தம் , வசீகரா, ஆட்டோகிராப் , புதுப்பேட்டை, பிரிவோம் சந்திப்போம் , சிலம்பாட்டம், உள்ளிட்ட பல்வேறு திரைப்படங்களில் நடித்துள்ளார்.

அவர் நடித்த பெரும்பாலான படங்கள் மாபெரும் வெற்றி திரைப்படங்களாக பார்க்கப்பட்டது. இதில் புதுப்பேட்டை திரைப்படத்தில் விலைமாது பெண்ணாக நடித்து பெரும் விமர்சனத்திற்கு உள்ளாகினார்.

இருந்தாலும் அந்த கேரக்டர் சினேகாவின் திறமையை வெளிப்படுத்தி காட்டியது. இதனிடையே நடிகை சினேகா பிரபல நடிகரான பிரசன்னாவுடன் காதல் வயப்பட்டு அவரை கடந்த 2009 ஆம் ஆண்டு திருமணம் செய்து கொண்டார்.

இவர்களுக்கு இரண்டு பிள்ளைகள் இருக்கும் சமயத்தில் திருமணம் குழந்தைக்கு பிறகு சினேகா திரைப்படங்களில் நடிக்காமல் இருந்து வந்தார்.

சினேகாவின் ரீ என்ட்ரி:

பின்னர் மீண்டும் பல வருடங்கள் கழித்து தற்போது ரீ என்ட்ரி கொடுத்து தொடர்ச்சியாக திரைப்படங்களில் நடித்த வருகிறார் .

இந்த நிலையில் விஜய்க்கு ஜோடியாக கோட் திரைப்படத்தில் சினேகா நடிக்கிறார். இதில் அப்பா விஜய்க்கு ஜோடியாக சினேகா நடிக்கிறார் .

மேலும் படம் முழுக்க சினேகாவின் கதாபாத்திரம் டிராவல் செய்யும் என அவரை பேட்டிகளில் கூறி இருந்தார்.

தற்போது 42 வயதாகும் சினேகா இன்னும் பார்ப்பதற்கு அதே இளமையான தோற்றத்தில் அழகு மாறாமல் அப்படியே இருந்து வருகிறார்.

ஜிம் workout வீடியோ:

அப்போது தன சமூக வலைதளங்களில் அழகழகான புகைப்படங்களை வெளியிடுவதை வாடிக்கையாக வைத்திருக்கிறார் .

உடல் எடை குறைத்து ஸ்லிம் தோற்றத்திற்கு மாறி தன்னுடைய எவர்கிரீன் அழகை அப்படியே மெயின்டன் செய்து வரும் சினேகா தற்போது ஜிம்மில் கடுமையாக ஒர்க்அவுட் செய்யும் வீடியோ ஒன்றை இணையத்தில் வெளியிட அது அனைவரது கவனத்தையும் ஈர்த்து இருக்கிறது.

இந்த வீடியோவை பார்த்த ரசிகர்கள் எல்லோரும் உங்களுக்கு வயசு ஆகல…இளம் நடிகைகளின் ஓரம் கட்டும் அளவுக்கு புன்னகை அரசி சினேகா அப்படியே இருக்காங்க என கூறி இந்த வீடியோவை ஷேர் செய்து வருகிறார்கள்.

புதுப்பேட்டை படத்துல நிஜமாவே அந்த உறுப்பில்.. ரகசியம் உடைத்த சினேகா..!

Comments are closed.
Exit mobile version