தன்னைப் பற்றி பரவிய விவாகரத்து தகவலுக்கு பதிலடி கொடுக்கும் விதமாக நடிகை சினேகா சில புகைப்படங்களை வெளியிட்டு இருக்கிறார். கவர்ச்சியான உடையணிந்து கொண்டு தன்னுடைய கணவருடன் நெருக்கமாக இருக்கும் புகைப்படங்களை வெளியிட்டு தன்னை பற்றி வதந்தி பரப்பியவர்களுக்கு பதிலடி கொடுத்து இருக்கிறார்.
ரசிகர்களால் புன்னகை அரசி என்று அழைக்கப்படும் நடிகை சினேகா அடிக்கடி தன்னுடைய இணையப் பக்கத்தில் கவர்ச்சியான புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார்.
கடந்த 2011-ம் ஆண்டு நடிகர் பிரசன்னாவை திருமணம் செய்து கொண்ட நடிகை சினேகா தற்போது இரண்டு குழந்தைகளுக்கு தாயாக மாறியிருக்கிறார். தொடர்ந்து மீண்டும் சினிமாவில் நடிக்க முயற்சி செய்து வரும் இவர் தன்னுடைய உடல் எடையை குறைத்து மீண்டும் பழைய லுக்கிற்கு மாறியிருக்கிறார்.
அதேபோல இவருக்கு பட வாய்ப்புகள் தொடர்ந்து வந்து கொண்டிருக்கின்றன. மேலும் நடித்தால் ஹீரோயிகத்தான் நடிப்பேன் என்று இல்லாமல் குணச்சித்திர வேடங்கள் கிடைத்தாலும் சரி கதைக்கு வலு சேர்க்க கூடிய சிறிய கதாபாத்திரமாக இருந்தாலும் சரி நடிப்பது என்ற முடிவில் இருக்கிறார் நடிகை சினேகா.
சமீபத்தில் இவர் தன்னுடைய கணவரை விவாகரத்து செய்ய போகிறார் என்று தகவல்கள் இணையத்தில் தீயாக பரவியது. இதுகுறித்து, நடிகை சினேகா எந்த பதிலும் கூறாமல் இருந்தார்.
இந்நிலையில் தன்னுடைய கணவருடன் நெருக்கமாக ரொமான்ஸ் செய்யும் புகைப்படங்களை வெளியிட்டு தன்னை பற்றி பரவிய வதந்தி செய்திகளுக்கு பதிலடி கொடுத்திருக்கிறார் நடிகை சினேகா. இந்த புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது.