அடப்பாவி.. கணவர் பிரசன்னாவின் செயலை பார்த்து அதிர்ந்து போன புன்னகையரசி சினேகா..!

தமிழ் சினிமாவில் புன்னகை அரசி சினேகா, பல வெற்றிப்படங்களில் நடித்தவர். கமல், அர்ஜூன், விஜய், அஜீத்குமார், தனுஷ், சியான் விக்ரம், சூர்யா என முன்னணி நடிகர்களுடன் நடித்தவர்.

தமிழில் மட்டுமின்றி தெலுங்கு, கன்னடம், மலையாளம் என பிற மொழிகளிலும் முன்னணி நடிகர்களுடன் பல ஹிட் படங்களில் நடித்தவர்.

நடிகை கேஆர் விஜயாவை புன்னகை அரசி என்று அழைப்பார்கள். ஏனென்றால் அவர் சிரித்தால் மிக அழகாக இருக்கும்.

அதே போல் நடிகை சினேகா சிரித்தாலும் மிக அழகாக இருப்பதால் அதே புன்னகை அரசி பட்டப் பெயர் சினேகாவுக்கு மாறிவிட்டது.

சினேகா

குறிப்பாக தனுஷ் உடன் புதுப்பேட்டை படத்தில் விலைமாது கேரக்டரில் சினேகா நடித்திருந்தது, ரசிகர்கள் மத்தியில் பயங்கரமான ஆச்சரியத்தை ஏற்படுத்தியது.

ஏனெனில் அப்போது சினேகா முக்கிய முன்னணி நடிகையாக பெரிய ஸ்டார் ஹீரோக்களுடன் நடித்துக்கொண்டு இருந்தார். எனினும் துணிச்சலாக இந்த கேரக்டரில் இயக்குநர் செல்வராகவன் அவரை நடிக்க வைத்தார்.

அதே போல் நான் அவன் இல்லை, பாண்டி, போஸ் போன்ற படங்களிலும் சினேகா கவர்ச்சியாக நடித்திருந்தார்.

நடிகர் ஸ்ரீகாந்துடன் பார்த்திபன் கனவு, போஸ், ஏப்ரல் மாதத்தில் போன்ற படங்களில் நடித்த வகையில், இருவருக்கும் நெருக்கம் ஏற்பட்டது. இதனால் ஸ்ரீகாந்த் – சினேகா காதலிப்பதாகவும் விரைவில் திருமணம் நடக்கும் என்றும் தகவல் பரவியது.

காதல் திருமணம்…

ஆனால் ஸ்ரீகாந்த், வேறு ஒருவரை திருமணம் செய்துக்கொள்ள, தன்னுடன் அச்சமுண்டு அச்சமுண்டு படத்தில் நடித்த நடிகர் பிரசன்னாவை, சினேகா காதல் திருமணம் செய்துக்கொண்டார்.

திருமணத்துக்கு பிறகும் சினிமாவில் நடித்து வரும் சினேகாவுக்கு, முன்பு போல நிறைய படங்களில் நடிக்க வாய்ப்பு வருவதில்லை. எனினும் சில படங்களில் நடித்து வருகிறார்.

விளம்பரங்களில்…

அதே வேளையில் நிறைய விளம்பரங்களில் சினேகா நடிக்கிறார். சில விளம்பரங்களில் சினேகாவும், பிரசன்னாவும் கணவன், மனைவியாகவே நடித்துள்ளனர்.

பிடித்த நடிகை…

சமீபத்திய மேடை நிகழ்ச்சி ஒன்றில் நடிகர் பிரசன்னாவிடம் தொகுப்பாளினி உங்களுக்கு பிடித்த நடிகை யார்..? என்று கேள்வி எழுப்பினார். அப்பொழுது நடிகை சினேகாவும் உடன் இருந்தார்.

நடிகர் பிரசன்னா சினேகா பெயரை தான் கூறுவார் என்று பலரும் எதிர்பார்த்தார்கள். நடிகை சினேகாவும் அதையே தான் எதிர்பார்த்திருக்கிறார்.

ஆனால் நடிகர் பிரசன்னா தமன்னா-வை தான் பிடிக்கும் என கூறினார். இதனை கேட்ட நடிகை சினேகா அடப்பாவி என்று மேடையிலேயே வாயை பிளந்த காட்சிகள் இணையத்தில் வைரலாகி வருகின்றது.

புதுப்பேட்டை படத்துல நிஜமாவே அந்த உறுப்பில்.. ரகசியம் உடைத்த சினேகா..!

Comments are closed.
Exit mobile version