சினேகாவின் மகனா இது..? அம்மாவிற்கு இணையாக எப்படி வளந்துட்டார் பாருங்க…!

தமிழ் சினிமாவில் டீசண்டாக நடித்து வரும் ஒரு சில நடிகைகளில் மிக முக்கியமானவர் நடிகை சினேகா. புன்னகைக்கரசி என்று பலராலும் அழைக்கப்படுபவர் சினேகா.

தமிழ் சினிமாவில் அப்போதைய காலகட்டங்களில் கவர்ச்சி என்பது மிக அதிகமாக இருந்தது. பெரும்பாலும் கவர்ச்சி காட்டும் நடிகைகளுக்கு வரவேற்பு இருக்கும் என்கிற பேச்சு அப்போது முதல் இப்போது வரை தமிழ் சினிமாவில் இருந்து கொண்டுதான் இருக்கிறது.

ஆனால் அந்த காலகட்டங்களிலேயே கவர்ச்சி இல்லாமலேயே ரசிகர்களை ரசிக்க வைக்க முடியும் என்பதை தனது நடிப்பின் மூலம் நிரூபித்தவர்தான் நடிகை சினேகா. பெரும்பாலும் சினேகா நடிக்கும் திரைப்படங்களில் புடவை கட்டிக்கொண்டோ அல்லது பாவாடை தாவணியில்லோ அல்லது சுடிதார் போட்டு கொண்டோதான் வருவார்.

டீசண்டான அறிமுகம்:

ஆனால் அப்படியும் கூட அவரை ரசித்த ரசிகர்கள் தொடர்ந்து அவருக்காகவே திரைப்படங்களை பார்க்க துவங்கினர். இதனால் சினேகாவிற்கு தமிழ் சினிமாவில் தொடர்ந்து வரவேற்பு கிடைத்தது. விஜய், சிம்பு, தனுஷ் என்று பல பிரபலங்களுடன் நடித்த நடிகையாக சினேகா இருக்கிறார்.

சினேகா தமிழ் சினிமாவில் அறிமுகமான காலகட்டத்தில் சூர்யா அஜித் மாதிரியான நடிகர்கள் வரவேற்பு பெற்றவர்களாக இருந்தனர். ஆனால் அதற்கு அடுத்த தலைமுறையை சேர்ந்த சிம்பு தனுஷ் போன்றவர்கள் எல்லாம் சினிமாவிற்குள் தாமதமாக அறிமுகமானவர்கள்.

இருந்தாலும் கூட அவர்களும் நடிகை சினேகாவை கதாநாயகியாக வைத்து படம் நடித்திருக்கிறார்கள் எனும்பொழுது சினேகாவிற்கு எவ்வளவு பெரிய மார்க்கெட் இருந்திருக்கும் என்பது தெரிகிறது.

திருமணத்திற்கு பிந்தைய வாழ்க்கை:

திருமணத்திற்கு பிறகு அதிகமாக திரைப்படங்களில் நடிப்பதை குறைத்துக் கொண்டார் சினேகா. தொடர்ந்து இல்லத்தரசியாக இருந்து வந்த சினேகா ஒரு சில திரைப்படங்களில் மட்டும் நடித்து வந்தார். பொதுவாக திருமணத்திற்கு பிறகு கணவன் நடிக்க வேண்டாம் என்று கூறியதால்தான் பெரும்பாலும் நடிகைகள் நடிக்காமல் இருப்பார்கள்.

ஆனால் பிரசன்னாவைப் பொறுத்தவரை அவர் சினேகாவை நடிக்க வேண்டாம் என்று கூறியது கிடையாது. பட்டாஸ் திரைப்படத்தில் நடிக்கும் பொழுதெல்லாம் சினேகாவிற்கு ஏற்கனவே திருமணம் ஆகி தான் இருந்தது.

திருமணமாகி பல ஆண்டுகளான நிலையில் தற்சமயம் சினேகாவின் மகன் குறித்த போட்டோ ஒன்றை வெளியிட்டு இருக்கிறார் சினேகா.

அதில் அவரது மகன் இவ்வளவு வளர்ந்திருக்கிறாரா என்று பலரும் ஆச்சரியப்படும் வகையில் பெரிய ஆளாக இருக்கிறார் அவரது மகன். இன்னும் கொஞ்ச நாட்களில் அவர் திரைத்துறையில் கதாநாயகனாக நடித்தாலும் ஆச்சரியப்படுவதற்கு இல்லை என்கின்றனர் நெட்டிசன்கள்

புதுப்பேட்டை படத்துல நிஜமாவே அந்த உறுப்பில்.. ரகசியம் உடைத்த சினேகா..!

Comments are closed.
Exit mobile version