சீரியல் ஹீரோவாகும் சினேகன்..! ஹீரோயின் யாருன்னு தெரிஞ்சா ஷாக் ஆகிடுவீங்க..!

தமிழ் சினிமாவில் பாடலாசிரியராக பல்வேறு திரைப்படங்களுக்கு எண்ணற்ற பாடல்களை எழுதி இருப்பவர்தான் கவிஞர் சினேகன்.

பல பாடல்களை எடுத்துப் பார்த்தால் இந்த பாடல் இவர் எழுதியதா? என்று யோசிக்கும் அளவுக்கு அவ்வளவு மிகச் சிறந்த பாடல்களையும் சூப்பர் ஹிட் அடித்த பல பாடல்களையும் எழுதியுள்ளார்.

பாடலாசிரியர் சினேகன்:

கவிஞர் சினேகன் பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டதன் மூலமாக தான் மக்கள் மத்தியில் மிகப்பெரிய அளவில் பிரபலமாகி இருந்தார் .

முதன் முதலில் இவரது திரைப்பயணம் 1997 ஆம் ஆண்டு புத்தம் புது பூவே திரைப்படத்தில் தான் ஆரம்பித்தது .

அதை எடுத்து பாண்டவர் பூமி திரைப்படத்தில் சூப்பர் ஹிட் பாடல்களை எழுதி கவிஞர் சினேகன் மக்கள் மனதில் மிகப்பெரிய இடத்தை பிடித்தார். அப்பவும் அது அவர் எழுதியது என்று பலருக்கும் தெரியாமல் இருந்தது.

மிகவும் ஏழ்மையான விவசாய குடும்பத்தில் பிறந்து வளர்ந்த சினேகனுக்கு கூட பிறந்தவர்கள் மொத்தம் 6 சகோதரர்கள். மேலும் ஒரு சகோதரியும் இருக்கிறார்.

கிராமத்திலிருந்து பறந்து வளர்ந்த சினேகனுக்கு எழுத்தின் மீது மிகுந்த ஆர்வம் இருந்ததால் திரைத்துறையில் கவிஞராக பல்வேறு பாடல்களை எழுதி பிரபலமான பாடலாசிரியராக இந்த இடத்தைப் பிடித்திருக்கிறார் .

சினேகன் எழுதிய பாடல்கள்:

இவர் கவிஞர் வைரமுத்துவிடம் உதவியாளராக பணியாற்றி பாடல் எழுதும் நேக்குகளை கற்றுத் தெரிந்து முதன்முதலில் புத்தம் புது பூவே திரைப்படத்தில் பாடல் ஆசிரியராக அறிமுகமானார்.

மேலும், இவர் யோகி என்ற திரைப்படத்தில் நடிகராகவும் அறிமுகமாகி இருந்தார். ஆனால் இவருக்கு நடிப்பு ஒர்க் அவுட் ஆகவில்லை.

மௌனம் பேசியதே, ஏப்ரல் மாதத்தில், பகவதி, சாமி, கோவில், புதுக்கோட்டையில் இருந்து சரவணன், ஆட்டோகிராப் ,பேரழகன், மன்மதன், ராம் இப்படி பல்வேறு திரைப்படங்களுக்கு பல சூப்பர் ஹிட் பாடல்களை எழுதி இருக்கிறார் சினேகன்.

கமலஹாசன் தொகுத்து வழங்கிய பிக் பாஸ் நிகழ்ச்சியின் முதல் சீசனில் போட்டியாளராக கலந்து கொண்ட சினேகன் அந்த அந்த நிகழ்ச்சியில் தனது நேர்மையான குணத்தால் எல்லோரது கவனத்தையும் ஈர்த்தார்.

இவர் தமிழ் நடிகை ஆன கன்னிகாவை காதலித்து திருமணம் செய்து கொண்டார். பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு பிறகு நடைபெற்ற இவர்கள் திருமணத்திற்கு கமல்ஹாசன் வருகை தந்து அவரது கையால் தாலி எடுத்துக் கொடுத்துதான் சினேகனுக்கு திருமணம் நடந்தது.

சமூக வலைதளத்தில் ஆக்டிவாக தங்களது ரொமான்டிக்கான புகைப்படங்கள் வீடியோக்கள் வெளியிட்டு ரசிகர்களின் கவனத்தை ஈர்த்து வருவது குறிப்பிடத்தக்கது.

சீரியல் ஹீரோவாக சினேகன்:

இந்த நிலையில் நடிகர் சினேகன் பாடல் ஆசிரியராக இருந்து தற்போது சீரியலில் கதாநாயகனாக அறிமுகமாக இருக்கிறார் என்ற தகவல் வெளியாகியிருக்கிறது.

மேலும், அவருக்கு ஜோடியாக பிரபல செய்தி வாசிப்பாளியான அனிதா சம்பத் தான் நடிக்கப் போகிறார் என்றும் கூறப்படுகிறது.

ஏற்கனவே செய்தி வாசிப்பாளினியாக மிகப்பெரிய அளவில் பிரபலமாகி தனக்கென தனி ரசிகர்கள் பட்டாளத்தை வைத்திருக்கும் அனிதா சம்பத்தும் பிக் பாஸ் நிகழ்ச்சியில் போட்டியாளராக கலந்து கொண்டு பிரபலமானது குறிப்பிடத்தக்கது.

இவர்கள் இருவரும் இணைந்து கலைஞர் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாக உள்ள சீரியலில் நடிக்க இருக்கிறார்கள்.

இந்த சீரியலை யாரடி நீ மோகினி மற்றும் நினைத்தாலே இனிக்கும் போன்ற சீரியல்களை இயக்கிய பிரியன் என்பவர் இயக்க உள்ளதாக கூறப்படுகிறது. எனவே விரைவில் இது குறித்து அதிகாரப்பூர்வ தகவல் வெளியாகலாம்.

புதுப்பேட்டை படத்துல நிஜமாவே அந்த உறுப்பில்.. ரகசியம் உடைத்த சினேகா..!

Comments are closed.
Exit mobile version