மாசத்துல ஒரு நாள் இப்படி வாழ்ந்த போதும்.. சினேகன் வீட்டில் கன்னிகா என்ன செய்கிறார் பாருங்க..!

தமிழ் சினிமாவில் சில படைப்பாளிகள் மட்டுமே உணர்வு மிக்க ஆளுமை மிக்க படைப்பாளிகளாக தன் படைப்புகள் மூலம் வெளிப்படுத்துகின்றனர். சினிமா காட்டும் ஆடம்பரத்திலும் ஆரவாரத்திலும் தன்னை இழந்து விடாமல் ஒரு கவிஞன், ஒரு கலைஞன் தன்னை நிலை நிறுத்திக் கொள்வதே சினிமாவில் பெரும்பாடாக இருக்கிறது.

சினேகன்

அந்த வகையில் நல்ல பாடல்களை கொடுத்து தமிழ் சினிமாவில் சிறந்த கவிஞராக பாராட்டு பெற்றவர் கவிஞர் சினேகன். இவர் மிக நல்ல பாடல்களை தமிழ் சினிமாவில் தந்திருக்கிறார்.

ஆனால் விஜய் டிவியில் பிக் பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்றதன் வாயிலாக மட்டுமே இவர் மக்கள் மத்தியில் பெரிய அளவில் பிரபலத்தை பெற்றார் என்பது குறிப்பிடத்தக்கது.

சினேகன், கன்னிகா என்ற சீரியல் நடிகையை காதலித்து திருமணம் செய்து கொண்டார். இருவரும் சந்தோசமாக வாழ்ந்து வருகிறார்கள்.

இந்நிலையில் கவிஞர் சினேகன் வீட்டில் ஒரு தரமான சம்பவம், சமீபத்தில் நடந்திருக்கிறது.

கூட்டு குடும்பங்கள்

கூட்டுக் குடும்பங்கள் என்றால், இன்றைய அவசர யுகத்தில் அப்படி ஒரு வாழ்க்கை வாழும் முறை இருக்கிறதா என்று கேட்கும் அளவுக்கு தான் கூட்டு குடும்ப வாழ்க்கை முறை இருந்து வருகிறது. சில ஊர்களில், பழமை மாறாத கிராமங்களில் மட்டுமே கூட்டுக் குடும்பங்கள் காணப்படுகின்றன.

கூட்டு குடும்ப வாழ்க்கை என்பது ஒரு பெரிய ஆலமரத்தின் கீழ் வாழ்வது போன்ற ஒரு அற்புதமான விஷயம். அப்படி பலதரப்பட்ட மனிதர்களுடன், உறவுகளுடன் வாழும் போது, குழந்தைகளின் புத்திசாலித்தனம் வளர்கிறது.

கூட்டுக் குடும்பத்தின் மூலம் பலதரப்பட்ட விஷயங்களை, அனுசரிக்கும் முறைகளை, விட்டுக் கொடுத்து வாழும் முறைகளை குழந்தைகள் கற்றுக் கொள்கின்றனர். கூட்டு குடும்பத்தில் தான் குழந்தைகள் அந்தந்த வயதுக்கான வாழ்க்கை முறைகளை, விஷயங்களை தெரிந்து கொள்கின்றனர்.

தனிமையில்…

ஆனால் இன்று அப்பா அம்மா மட்டுமே இருக்கக்கூடிய ஒரு குடும்பத்தில், பெற்றோர் வேலைக்கு சென்றுவிடும் பட்சத்தில் குழந்தைகள் தனிமையில் வாடுகின்றனர். பெரும்பாலான நேரங்களில் அவர்கள் வீடுகளில் தனியாக இருக்க நேரிடுகிறது. தனிமையில்தான் அவர்கள் வளர்கிறார்கள் என்பதே கசப்பான உண்மை.

அதுமட்டுமின்றி செல்போன் தான் குழந்தைகளின் உலகம் என்று மாறிவிட்டது. குழந்தைகள் செல்போன்களை பார்த்து நேரத்தை போக்குகின்றனர். உறவுகளின் அருமைகளை விட்டு விலகுகின்றனர்.

ஒன்றாக வாழ்ந்த வாழ்க்கை

அந்த காலத்தில் கூட்டுக் குடும்பமாக இருந்தவர்கள், ஒரே அறையில் 10க்கும் மேற்பட்டவர்கள் படுத்து தூங்கி காலையில் எழுந்தனர். ஒன்றாக அமர்ந்து சாப்பிட்டனர். ஒன்றாக அமர்ந்து குடும்ப விஷயங்களை பேசினர்.

எல்லோரும் ஒன்றாகவே வாழ்ந்த வாழ்க்கை, ஒரு பெரிய சந்தோசத்தையும், ஆத்ம திருப்தியையும் தந்தது.

சினேகன் வீட்டில் நடந்த சம்பவம்

இப்படிப்பட்ட சூழலில் குடும்பத்தினர் அனைவரும் ஒன்றாக படுத்து உறங்கும் காலமும், செல்போன் இல்லாத காலமும் இப்போது கிடைத்தால் எப்படி இருக்கும் என்பதை கவிஞர் சினேகன் வீட்டில் அது போன்ற ஒரு சம்பவம் நடந்துள்ளது. அந்த வீடியோவை இன்பா என்ற சமூக தளவாசி வெளியிட்டு, மாசத்துல ஒரு நாள் இல்ல, வருடத்தில் ஒரு நாள், இந்த மாதிரி வாழுங்க, இன்பமான வாழ்க்கை, இதுக்கு எல்லாம் சான்ஸே இல்லாமல் போச்சு என குறிப்பிட்டுள்ளார்.

கன்னிகா

அந்த வீடியோவில், சினேகன் வீட்டிற்கு அவருடைய சொந்தக்காரர்கள் எல்லாம் வந்திருக்கின்றனர். கிட்டத்தட்ட 20 பேர் இருக்கிறார்கள். வீட்டு ஹாலில் வரிசையாக பாய்களை விரித்து, தலையணைகளை போடுகிறார்கள். சினேகன் மனைவி கனிகா அனைவரும் செல்போன்களையும் சேகரிக்கிறார். அதை ஒரு வேறு இடத்தில் வைத்து விடுகிறார். பிறகு அருகருகே அனைவரும் ஒன்றாக படுத்து தூங்குகின்றனர்.

மாசத்துல ஒரு நாள்…

இப்படிப்பட்ட வாழ்க்கை அனைவருக்கும் கிடைத்தால் மிகப்பெரிய சந்தோஷமாக இருக்கும் என்று இந்த வீடியோ மூலம் புகைப்படங்கள் மூலம், இன்பா என்கிற ஒரு பெண் தன் உணர்வை பகிர்ந்துள்ளார்.

மாசத்துல ஒரு நாள் இப்படி வாழ்ந்த போதும்.. சினேகன் வீட்டில் கன்னிகா செல்போன்களை சேகரித்த அந்த வீடியோ, இழந்த வாழ்க்கையை மீண்டும் சேகரித்த உணர்வை தருகிறது.

புதுப்பேட்டை படத்துல நிஜமாவே அந்த உறுப்பில்.. ரகசியம் உடைத்த சினேகா..!

Comments are closed.
Exit mobile version