அழகே பொறாமைப்படும் பேரழகு… மங்களகரமாக அழகில் மனதை வசீகரிக்கும் நடிகை சினேகா!

ஹோம்லி நடிகையாக நல்ல வசீகர அழகை வைத்துக் கொண்டு தென்னிந்திய சின்னமா ரசிகர்களை கவர்ந்து இழுத்தவர் தான் நடிகை சினேகா .

இவர் தமிழ், தெலுங்கு, மலையாளம் உள்ளிட்ட பழமொழி திரைப்படங்களில் நடித்திருக்கிறார். குடும்பப் பாங்கான கதாபாத்திரத்திற்கு பக்காவாக பொருந்துவார் சினேகா.

நடிகை சினேகா:

லட்சணமான முகத்தோற்றத்துடன் நடிக்கும் திறனை கொண்ட இவர் மிகவும் தெளிவான உச்சரிப்புடன் தமிழ் பேசியதால் தமிழ் மக்கள் மனதில் மிகவும் சீக்கிரத்திலேயே பிரபலமாகிவிட்டார் .

இவர் மும்பையில் பிறந்து வளர்ந்து இருந்தாலும் தமிழ் சினிமாவில் நடித்ததன் மூலமாக தமிழ் பெண்ணாகவே பார்க்கப்பட்டு வந்துவிட்டார் .

2001 ஆம் ஆண்டில் இங்கே ஒரு நீலபக்ஷி என்ற ஒரு. மலையாளத் திரைப்படத்தில் நடித்த் நடிகையாக அறிமுகமானார்.

அதை அடுத்து தமிழ் சினிமாவில் என்னவளே என்ற திரைப்படத்தின் மூலமாக திரைத்துறையில் ஹீரோயினாக அறிமுகமானார்.

முதல் படத்திலேயே ரசிகர்களின் கவனத்தை ஈர்த்த சினேகாவுக்கு அடுத்தடுத்து திரைப்பட வாய்ப்புகள் கிடைத்துக் கொண்டே இருந்தது.

திரைப்படங்களில் நடித்துக் கொண்டே மாடல் அழகியாக பல்வேறு விளம்பர திரைப்படங்களில் நடித்து பிரபலமானார்.

சினேகாவின் படங்கள்:

அதுமட்டுமில்லாமல் வடிவழகித் தொழிலில் அதிக ஆர்வம் கொண்டிருந்த சினேகாவுக்கு விளம்பர படங்களில் நடிக்கும் வாய்ப்புகள் தேடி வந்தது.

அதன் மூலம் சரவணா ஸ்டோர்ஸ், ஹார்லிக்ஸ், ஆசீர்வாட் உள்ளிட்ட பல்வேறு பிரபலமான விளம்பரங்களில் நடித்து அதன் மூலம் கணிசமான வருமானத்தையும் சினேகா பெற்று வந்தார்.

இவர் பார்த்தாலே பரவசம், ஆனந்தம், வசீகரா, பம்மல் கே சம்பந்தம், கிங், ஆட்டோகிராப் ,ஜனா, புதுப்பேட்டை ,பிரிவோம் சந்திப்போம் உள்ளிட்ட பல்வேறு சூப்பர் ஹிட் திரைப்படங்களில் தமிழ் சினிமாவில் நடித்து பிரபலமான நடிகையாக இடத்தைப் பிடித்தார்.

சினேகா நட்சத்திர அந்தஸ்தை பிடித்து உச்சத்தில் இருந்தபோதே பிரபல நடிகரான பிரசன்னாவை கடந்த 2009 ஆம் ஆண்டு காதலித்து திருமணம் செய்து கொண்டார்.

இவர்கள் இருவரும் சேர்ந்து அச்சம் உண்டு அச்சம் உண்டு என்ற திரைப்படத்தில் நடித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

மங்களகரமாக தோற்றத்தில் சினேகா:

திருமணத்திற்கு பிறகு சினேகாவுக்கு ஒரு மகள் ஒரு மகன் என இரண்டு குழந்தைகள் பிறந்தனர் குழந்தை பிறப்புக்கு பிறகு சினிமா பக்கமே தலை காட்டாமல் சில ஆண்டுகள் வீட்டிலேயே இருந்துவிட்டார்.

சினேகாவுக்கும் மீண்டும் திரைப்பட வாய்ப்புகள் கிடைக்க தொடங்குகிறது. அதற்காக தனது உடல் எடையை குறைத்து மீண்டும் பழைய சினேகாவாக மாறி தற்போது திரைப்படங்களில் நடித்து வருகிறார் .

முன்னதாக தனுஷ் உடன் பட்டாசு திரைப்படத்தில் அவருக்கு ஜோடியாக நடித்து அறிமுகமானார். அதை அடுத்து தற்போது விஜய்க்கு ஜோடியாக கோட் திரைப்படத்தில் நடித்து வருகிறார் சினேகா.

இந்த நிலையில் நடிகை சினேகா வரலட்சுமி பூஜை தினத்தில் மங்களகரமாக அலங்காரம் செய்து கொண்டு எடுத்துக்கொண்ட புகைப்படங்களை தனது instagramல் வெளியிட அதை பார்த்த ரசிகர்கள் சினேகாவின் அழகில் மயங்கி அவரை ரசிக்கத் தொடங்கியுள்ளனர்.

புதுப்பேட்டை படத்துல நிஜமாவே அந்த உறுப்பில்.. ரகசியம் உடைத்த சினேகா..!

Comments are closed.
Exit mobile version