முதலில் தங்கச்சி சமந்தா… அடுத்த அக்கா சோபிதா… இவிங்க கல்யாண கூத்தை பாத்திங்களா..?

தமிழ் சினிமாவில் விவாகரத்து பெற்ற நடிகைகளில் முக்கியமானவர் நடிகை சமந்தா. சமந்தா சென்னையை சேர்ந்த பெண் ஆவார். ஆரம்பத்தில் மாஸ்கோவின் காவேரி, பானா காத்தாடி என்று தமிழில்தான் திரைப்படங்களில் நடித்து வந்தார்.

ஆனால் நான் ஈ திரைப்படத்தில் நடித்த பிறகு அவருக்கு தெலுங்கிலும் வாய்ப்புகள் கிடைக்க தொடங்கியது. தொடர்ந்து தெலுங்கு சினிமாவில் நடித்துக் கொண்டிருந்தபோது அவருக்கும் தெலுங்கு நடிகர் நாக சைதன்யாவிற்கும் இடையே காதல் ஏற்பட்டது. நாக சைதன்யா வீட்டில் இவர்கள் காதலை வீட்டில் ஒப்புக்கொண்ட பிறகு இருவரும் திருமணம் செய்து கொண்டனர்.

திருமணத்திற்கு பிறகும் பிரச்சனை:

திருமணத்திற்கு பிறகும் நடிகை சமந்தா நடித்து வந்தார். இது அவர்கள் இருவருக்கும் இடையே கருத்து வேறுபாடு ஏற்படுத்திய பிறகு விவாகரத்து வாங்கினார் சமந்தா. நாகார்ஜுனாவின் மனைவியான நடிகை அமலாவும் சினிமாவில் பிரபலமாகதான் இருந்தார்.

ஆனால் திருமணத்திற்கு பிறகு நடிக்கவில்லை. அதே மாதிரி சமந்தாவும் நடிக்க கூடாது என்று கூறி இருக்கின்றனர். ஆனால் சமந்தா அதற்கு ஒப்புக்கொள்ளவில்லை. 2017 ஆம் ஆண்டு சமந்தாவிற்கும் நாக சைதன்யாவிற்கும் திருமணம் நடந்தது.

பிறகு 2021 ஆம் ஆண்டு இருவரும் பிரிந்து விட்டனர். இந்த நிலையில் பொன்னியின் செல்வன் திரைப்படத்தில் நடித்த நடிகை சோபிதாவிற்கும் நாக சைதன்யாவிற்கும் இடையே காதல் ஏற்பட்டது. இது ஊடகங்களில் முன்பே கசிந்து இருந்தது.

மறு திருமணம்:

அதற்கு இவர்கள் இருவரும் மதிப்பு தெரிவிக்காமல் புன்னகையை மட்டும் பதிலாக கொடுத்திருந்தனர். இந்த நிலையில் இன்று அவர்கள் இருவருக்கும் நிச்சயதார்த்தம் நடந்தது. இதுதான் தற்சமயம் சமூக வலைதளங்களில் பேசப்படும் விஷயமாக இருக்கிறது.

நடிகர் நாகார்ஜுனா இந்த விஷயத்தை அவரது எக்ஸ் தளத்தில் அதிகார பூர்வமாகவே அறிவித்திருந்தார். தொடர்ந்து நடிகை சமந்தா அதிக கவர்ச்சியுடன் நடித்த தொடங்கினார். முக்கியமாக புஷ்பா திரைப்படத்தில் உச்ச பட்ச கவர்ச்சியில் நடனமாடியிருந்தது பலருக்கும் ஆச்சரியத்தை கொடுத்து இருந்தது.

சோபிதாவை பொருத்தவரை அவர் நடிகை ஆவதற்கு முன்பு மாடலிங் துறையில் இருந்தவர். அவர் 2013 ஆம் ஆண்டு ஃபெமினா மிஸ் இந்தியா சவுத் பட்டத்தை வென்றவர் சோபிதா. அதற்கு பிறகு 2016 ஆம் ஆண்டு முதல் திரைத்துறையில் கவனம் செலுத்தி வருகிறார்.

சோபியாவை பொருத்தவரை அவர்தான் வீட்டில் மூத்த பெண் ஆவார். இவரது தங்கையின் பெயரும் சமந்தா ஆகும் கடந்த வருடம் தான் இவருக்கு திருமணம் நடந்தது. தங்கையின் திருமணம் நடந்ததை அடுத்து தற்சமயம் காதலில் இருந்த சோபிதா அவரும் திருமணம் செய்ய முன்வந்துள்ளார். இந்த நிலையில் தனது தங்கையின் திருமணத்தின் போது எடுத்த புகைப்படத்தை சோபிதா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்து இருக்கிறார் ஊடகங்களிலும் அது பிரபலமாகி வருகிறது.

புதுப்பேட்டை படத்துல நிஜமாவே அந்த உறுப்பில்.. ரகசியம் உடைத்த சினேகா..!

Comments are closed.
Exit mobile version