“இந்த இடுப்புக்கு ஈடு இணையே இல்ல…” – இணையத்தை தவிக்க வைத்த பொன்னியின் செல்வன் நடிகை..!

பொன்னியின் செல்வன் படம் மூலம் அறிமுகமானவர் சோபிதா துலிபாலா. இயக்குநர் மணிரத்னம் இயக்கிய பொன்னியின் செல்வன் பாகம் 1ல், குந்தவை த்ரிஷாவின் தோழியாக, வானதி கேரக்டரில் இவர் நடித்திருந்தார். வரும் 28 ம் தேதி ரிலீஸ் ஆக உள்ள பொன்னியி்ன் செல்வன் 2ம் பாகத்திலும் இவர் இருக்கிறார்.

தமிழ் படங்களுக்கு தான் சோபிதா துலிபாலா அறிமுகமே தவிர இந்தி, மலையாளம், தெலுங்கு படங்களில் ஏற்கனவே நடித்திருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது. 2013 ல் பெமினா மிஸ் இந்தியா போட்டியில், பெமினா மிஸ் இந்தியா எர்த் 2013 பட்டம் வென்றவர். மாடலிங் துறையில் இருந்தவர். பரதநாட்டியம் மற்றும் குச்சுப்புடி நடனங்களில் பயிற்சி பெற்ற பாரம்பரிய நடனக் கலைஞர் இவர் என்பது குறிப்பிடத்தக்கது.

தமிழில் இவர் அறிமுகமான பொன்னியின் செல்வன் படத்தில், முதல் பாகத்தில் சில காட்சிகளே வந்தாலும், ரசிகர்கள் மத்தியில் இவருக்கு நல்ல அறிமுகத்தை தந்திருக்கிறது.
ஏனெனில், இந்த படம், நட்சத்திர கூட்டம் நிறைந்தது. விக்ரம், கார்த்தி, ஜெயம் ரவி, ஜெயராம், சரத்குமார், பிரபு, விக்ரம் பிரபு, பார்த்திபன், ரகுமான், ஐஸ்வர்யாராய், த்ரிஷா என, எல்லா நடிகர். நடிகைகளுமே, மிக பிரபலமான நட்சத்திரங்கள். தமிழ் சினிமாவில் இத்தனை நடிகர்களும் ஒரே படத்தில் நடிப்பது இதுவே முதல் முறை.

பொன்னியின் செல்வன் படம் இரண்டாம் பாகத்தின் ஆடியோ மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா சமிீபத்தில் நடந்தது. இதில் வெளிர்நிற இளம்சிவப்பு ஜார்ஜெட் புடவையில் வந்த சோபிதா துலிபாலா, மற்றவர்களின் கவனத்தை அதிகமாக ஈர்த்தார்.பொ்ன்னியின் செல்வன் வெற்றியை தொடர்ந்து, தமிழில் பல பட வாய்ப்புகள் துலிபாலாவை தேடி வர வாய்ப்புள்ளது.

அதே வேளையில், சோபிதா துலிபாலாவும் சமூக வலைதள பக்கங்களில் ஆர்வமாக இருக்கிறார். தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில், அடிக்கடி தனது அழகிய, கவர்ச்சி படங்களை வெளியிட்டு ரசிகர்களை உஷ்ணம் ஏற்றி வருகிறார். அந்த வகையில், சமீபத்தில் மஞ்சள் நிற புடவையில், இவரது ஹாட் புகைப்படங்களை பார்த்த ரசிகர்கள், எகிறி போய் உள்ளனர். வெயில் நேரத்தில், குளிரும் தென்றலாய் தனது, உடல் அவயங்களை காட்டி துலிபாலா பதிவிட்டு இருக்கும் புகைப்படங்கள், வைரலாக பரவி வருகின்றன.

எனவே, தமிழ் சினிமாவில் முன்னணி இயக்குநரின் அறிமுகம் தந்த பொன்னியின் செல்வன் படத்துடன், இன்ஸ்டாகிராம் தரும் ரசிகர்களின் வரவேற்பும், இந்த ஆண்டு புதிய பட வாய்ப்புகளை அதிகமாக பெற்றுத்தரும் நம்பிக்கையில் உற்சாகமாக தெரிகிறார் சோபிதா துலிபாலா.

Check Also

ப்பா…கேட்டதும் கிறுகிறுனு வருதே.. என்னது 50 வினாடிக்கு இம்புட்டு சம்பளமா? – யாருமா.. அந்த நடிகை..

திரை உலகில் கோடிக்கணக்கில் சம்பளமாக வாங்குகின்ற நடிகர் நடிகைகளை பற்றி உங்களுக்கு சொல்ல தேவை இல்லை. அந்த வகையில் தளபதி …