சோபிதா நாகசைதன்யா கல்யாணம் சந்தேகம்தான் போல… சமந்தா செய்த அதே தப்பை செய்ய போறாங்களா..!

தமிழ் சினிமாவில் மிகப் பிரபலமான ஒரு சில நடிகைகளில் மிக முக்கியமானவர் நடிகை சமந்தா. பெரும்பாலும் சமந்தா நடிக்கும் திரைப்படங்களுக்கு என்று தனிப்பட்ட ரசிகர்கள் இருந்து வருகின்றனர். தமிழ் சினிமாவில்தான் முதன்முதலாக கதாநாயகியாக அறிமுகமானார் நடிகை சமந்தா.

சென்னையை சேர்ந்த சமந்தாவிற்கு இளம் வயதில் இருந்தே கதாநாயகி ஆக வேண்டும் என்கிற ஆசை இருந்தது. இந்த நிலையில் சமந்தா பானா காத்தாடி என்கிற திரைப்படத்தில் கதாநாயகியாக நடித்தார். அதேசமயம் மாஸ்கோவின் காவேரி என்கிற திரைப்படத்திலும் இவர் நடித்தார்.

சோபிதா நாகசைதன்யா கல்யாணம்

எனவே இரண்டுமே அவர்களுக்கு முதல் படம் என்றுதான் கூற வேண்டும் இந்த படங்கள் வெளியான பிறகு சமந்தாவிற்கு மார்க்கெட் பெரிதாக கிடைக்கும் என்று அவர் எதிர்பார்த்தார். ஆனால் அப்படி எதுவும் நிகழவில்லை.

இந்த நிலையில் தெலுங்கு சினிமாதான் அவரை தூக்கி விட்டது என்று கூறலாம். இயக்குனர் ராஜமௌலி இயக்கிய நான் ஈ திரைப்படத்தில் கதாநாயகியாக நடித்தார் சமந்தா. அப்பொழுது சமந்தாவிற்கு வரவேற்பு அதிகரிக்க துவங்கியது.

அதனை தொடர்ந்து தமிழ் தெலுங்கு என்று இரண்டு மொழிகளிலும் நான் ஈ திரைப்படம் பெரும் வெற்றியை கொடுத்தது. எனவே இரண்டிலுமே சமந்தாவிற்கும் வரவேற்புகள் கிடைக்க துவங்கியது. தமிழில் ரசிகர்களை வசீகரிக்கும் வகையில் சமந்தா நடித்த திரைப்படம் என்றால் அது நீதானே என் பொன்வசந்தம் திரைப்படம்.

சமந்தாவுக்கு கிடைத்த வரவேற்பு

அந்த திரைப்படத்தில் சமந்தாவை பார்த்து அவருக்கு ரசிகர் ஆனவர்கள் எக்கச்சக்கம் என்று கூறலாம். தெலுங்கு நடிகர் நாகசெய்தன்யாவை காதலித்து திருமணம் செய்து கொண்டார் சமந்தா.

இது ஒரு பக்கம் சமந்தா ரசிகர்களுக்கு கவலையாக இருந்தாலும் எல்லா நடிகையும் ஒரு காலத்தில் திருமணம் செய்து கொள்ள வேண்டும்தானே என்பதால் அதை விட்டுவிட்டனர். மேலும் சமந்தா திருமணத்திற்கு பின்பும் சினிமாவில் நடித்து வந்தார்.

அதே தப்பை செய்ய போறாங்களா

இந்த நிலையில் திருமணமான சில வருடங்களிலேயே நாக சைதன்யாவும் சமந்தாவும் பிரிந்து விட்டனர். இதற்கு என்ன காரணம் என்று கேட்கும் பொழுது பல வகையான காரணம் கூறப்பட்டது. அதில் முக்கியமானதாக அதிக மக்களால் பேசப்பட்ட விஷயம் என்னவென்றால் நாகா அர்ஜுனாவே அவரது மனைவியை திருமணம் செய்த பிறகு அவரை நடிக்க கூடாது என்று கூறிவிட்டார்.

அதே கண்டிஷனை சமந்தாவிற்கும் போட்டனர். ஆனால் சமந்தா அதற்கு ஒப்புக்கொள்ளவில்லை. அதனால்தான் விவாகரத்து ஆனது என்று கூறப்பட்டது. இந்த நிலையில் விவாகரத்திற்கு பிறகு தற்சமயம் நடிகை சோபிதாவை திருமணம் செய்ய இருக்கிறார் நாகசைதன்யா. சோபிதா திருமணத்திற்கு பிறகு நடிக்க மாட்டார் என்றெல்லாம் பேச்சுகள் இருந்து வந்தது. ஆனால் அதற்கு மாற்றாக தற்சமயம் ஜோபிதா டான் திரைப்படத்தின் அடுத்த பாகத்தில் நடிக்கவிருக்கிறார்.

பாலிவுட்டில் ஷாருக்கான் நடிப்பில் பெரும் வெற்றியை கொடுத்த படம் டான் அதன் அடுத்த பாகம் அடுத்து இயக்கப்பட இருக்கிறது அந்த படத்தில் ஒரு கவர்ச்சி கதாபாத்திரத்தில் சோபிதா நடிக்க இருப்பதாக கூறப்படுகிறது. இதுக்குறித்து அவரிடம் படக்குழு பேச்சுவார்த்தை நடத்திவருகின்றன என்று ஒரு பக்கம் பேச்சுக்கள் இருந்து வருகின்றன.

இப்படி நடக்கும் நிலையில் சோபிதா திருமணம் நடக்க வாய்ப்புகாள் குறைவுதான் என கூறப்படுகிறது.

புதுப்பேட்டை படத்துல நிஜமாவே அந்த உறுப்பில்.. ரகசியம் உடைத்த சினேகா..!

Comments are closed.
Exit mobile version