‘விடுதலை’ படத்தை தொடர்ந்து 3 படங்களில் ஹீரோவாக ‘கமிட்’ ஆன சூரி

வெண்ணிலா கபடிக்குழு படத்தில் நடிகர் சூரி, 50 பரோட்டா சாப்பிடும் காட்சி மூலம் தமிழ் சினிமா ரசிகர்கள் மத்தியில் பிரபலமானவர். இதையடுத்து நடித்த படங்களில் பரோட்டா சூரி என்றே அடையாளப்படுத்தப்பட்டார்.

 

எனினும் அடுத்தடுத்த படங்களில், காமெடி நடிப்புடன் நல்ல குணச்சித்திர நடிப்பையும் சூரி வழங்கியதால், ரசிகர்களின் மனதை கவர்ந்தார். வடிவேலு, சந்தானம் போல, ஒரு கட்டத்தில் காமெடி நடிப்புக்கு சூரி என்ற அளவுக்கு, முன்னணி நட்சத்திரமாக முன்னேறினார்.
இதையடுத்து ரஜினி, விஜய். அஜீத், தனுஷ், சிவகார்த்திகேயன் உள்ளிட்ட முன்னணி நடிகர்களின் படங்களில் நடித்து, தமிழ் சினிமாவில் தனக்கென ஒரு இடத்தை பிடித்தார்.

இந்நிலையில், இயக்குநர் வெற்றிமாறன் இயக்கத்தில், ‘விடுதலை’ என்ற படத்தில், போலீஸ் கேரக்டரில் சூரி, தற்போது நடித்து வருகிறார்.

மற்ற சில காமெடி படங்களில், சூரியை ஹீரோவாக நடிக்க சிலர் அணுகிய நிலையில், அவர் அந்த படங்களில் நடிக்க மறுத்து விட்டார். மற்ற ஹீரோக்கள் படத்திலும், காமெடி கேரக்டரில் நடித்து வரும் நிலையில், தனியாக காமெடி கேரக்டரில் கதாநாயகனாக நடிக்க வேண்டிய அவசியம் இல்லை என்று, அந்த வாய்ப்புகளை மறுத்தார்.
ஆனால், வெற்றிமாறன் இயக்கத்தில், சில காட்சிகளிலாவது நடித்துவிட வேண்டும் என ஆசைப்பட்ட சூரிக்கு, அவரது படத்தில் ஹீரோவாக நடிக்கும் வாய்ப்பு கிடைத்ததை, மிகப்பெரிய அதிர்ஷ்டமாக சூரி கூறுகிறார்.

 

மேலும், எனக்குள் இருந்த இன்னொரு நடிகனை எனக்கு முன்பு கண்டுபிடித்தவர் வெற்றிமாறன்தான் என, நேர்காணல்களில் பெருமையாக சொல்லி வருகிறார்.
தற்போது சூரி, வெற்றிமாறன் இயக்கத்தில் விடுதலை படத்தில் நடித்து வரும் நிலையில், அடுத்தடுத்து 3 படங்களில் ஹீரோவாக நடிக்க, கமிட் ஆகியுள்ளார்.

சிவகார்த்திகேயன் தயாரிக்கும், ‘கூழாங்கல்’ படத்தின் இயக்குநர் வினோத்ராஜ் இயக்கும் ‘கொட்டுக்காளி’ என்ற படத்திலும், விக்ரம் சுகுமாரன் இயக்கும் மற்றொரு படத்திலும், இயக்குநர் அமீர் இயக்கும் ஒரு படத்திலும் என, 3 படங்களில் அவர் நடிக்க ஒப்பந்தம் ஆகி இருப்பதாக, தகவல்கள் வெளியாகி உள்ளது.
காமெடி நடிப்பில் அசத்திய சூரி, ஹீரோவாக நடித்தும், ரசிகர்களின் மனதில் இடம்பிடித்து விடுவார் என்பதில் சந்தேகமே இல்லை.

Check Also

ப்பா…கேட்டதும் கிறுகிறுனு வருதே.. என்னது 50 வினாடிக்கு இம்புட்டு சம்பளமா? – யாருமா.. அந்த நடிகை..

திரை உலகில் கோடிக்கணக்கில் சம்பளமாக வாங்குகின்ற நடிகர் நடிகைகளை பற்றி உங்களுக்கு சொல்ல தேவை இல்லை. அந்த வகையில் தளபதி …