இந்த காலத்தில் பெற்றெடுத்த பிள்ளைகளே தந்தையை பார்ப்பதை பாரமாக நினைக்கக்கூடிய காலகட்டத்தில் மதுரையைச் சேர்ந்த நடிகர் சூரி சமீபத்திய பேட்டி ஒன்றில் தனது மாமனார் இறப்பு குறித்து பேசிய பேச்சு பலரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.
தனது தந்தை மரணம் அடைந்ததை அடுத்து தன்னுடைய மாமனாரின் மறைவுக்காக தான் மனம் விட்டு அண்மை பேட்டி ஒன்றில் சூரி பேசி பரபரப்பை கிளப்பிவிட்டார்.
நடிகர் சூரி..
தமிழ் திரை உலகில் நகைச்சுவை நடிகராக களம் இறங்கிய இவர் தற்போது ஹீரோவாக வளர்ந்து ரசிகர்களின் மத்தியில் தனக்கு என்று ஒரு அடையாளத்தை ஏற்படுத்திக் கொண்டார்.
தமிழ் திரை உலகில் வெண்ணிலா கபடி குழு என்ற திரைப்படத்தின் மூலம் அறிமுகமானதை அடுத்து இந்த படத்தில் இவர் பரோட்டா சாப்பிட்டதை பார்த்து அந்த காட்சியைப் பற்றி இன்றும் பேசும் ரசிகர்கள் அதிகமாக உள்ளதால் தான் இவரை பரோட்டா சூரி என்று அன்போடு அழைக்கிறார்கள்.
இந்நிலையில் மதுரையைச் சேர்ந்த சூரி தன் குடும்பத்தார் பற்றி பல இடங்களில் பேசி இருப்பார். ஆனால் தன் மாமனார் குறித்து எந்த ஒரு இடத்திலும் இது வரை எந்த தகவலையும் பதிவு செய்யாத சூரி அண்மை பேட்டியில் தனது மாமனார் பற்றி பேசிய பேச்சானது வைரல் ஆகிவிட்டது.
கார் இருந்தும் நோ யூஸ்..
மேலும் இவர் தன் மாமனார் மிகவும் எளிமையான குணம் படைத்தவர் என்று சொன்னதோடு தன் மனைவி கர்ப்பமாக இருந்த சமயத்தில் தனது மாமனார் தனக்கு பக்கபலமாக இருந்த விஷயங்களை பற்றி பெருமையோடும் நெகிழ்ச்சியோடு சொல்லி இருந்தார்.
நான் எவ்வளவு பெரிய அளவு பணத்தைக் கொண்டு இருந்தாலும் என்னுடைய ஆடம்பர வாழ்க்கையை ஒரு நாளும் தனது மாமனார் விரும்பியதில்லை என்றும் மதுரையில் இருந்து சென்னைக்கு வேலை விஷயமாக வந்தாலும் வீட்டில் குளித்து விட்டு அரசு பஸ்ஸில் கிளம்பி சென்று விடுவார்.
என் வீட்டில் இருக்கும் காரை கூட அவர் யூஸ் பண்ணியது இல்லை. இதனை அடுத்து நான் பலமுறை சொல்லியும் அவர் காரை எடுத்துக் கொண்டு செல்ல மாட்டார். அவ்வளவு வைராக்கியமான மனிதராக திகழ்ந்தவர் என்று சொல்லி இருக்கிறார்.
இதனை அடுத்து கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு எதற்கும் துணிந்தவன் படத்தில் நடித்துக் கொண்டிருந்த சமயத்தில் எனது மாமனாருக்கு லேசாக நெஞ்சுவலி ஏற்பட்டுள்ளது.
மாமனார் குறித்து நெகிழ்ச்சியான பேச்சு..
இதுகுறித்து சூரியின் மனைவி சூரியிடம் சொன்ன நிலையில் லேசான நெஞ்சுவலி தானே என்று அவர் ஆஸ்பத்திரி செல்வதற்கு மறுத்து விட்ட நிலையில் ஊருக்கு போக முடிவு செய்துவிட்டார்.
அப்போது நெஞ்சுவலியோடு பஸ்ஸில் பயணம் செய்வது கஷ்டமாக இருக்கும் என்பதால் தன் மகளிடம் சொல்லி மருமகனின் காரை கேட்டிருக்கிறார். இதனை அடுத்து சூரி ஓகே சொல்ல காரில் கிளம்பிய அவர் திருச்சி அருகில் சென்ற போது வலி அதிகமாக டிரைவரை மதுரைக்கு வேகமாக போகச் சொல்லி இருக்கிறார்.
அந்த டிரைவரும் வண்டியை வேகமாக ஓட்டி மதுரையில் சூரிக்கு தெரிந்த மீனாட்சி மிஷன் ஸ்பெஷாலிட்டி ஹாஸ்பிட்டலுக்கு கொண்டு செல்கிறேன் என்று சொன்னதை அடுத்தும் கேட்காமல் சின்ன மருத்துவமனைக்கு சென்று இருக்கிறார்.
இதனை அடுத்து நடிகர் சூரியின் டிரைவர் மீனாட்சி மிஷன் மருத்துவமனையில் போய் செக்கப் செய்து கொள்ளலாம் என்று பல முறை சொல்லி அந்த மருத்துவமனைக்கு அழைத்துச் சென்று சேர்த்து விட்டார்.
அங்கு சென்று பின் 20 நிமிடங்களில் அவர் இறந்து விட்டதாக கூறியதை அடுத்து தன் தந்தையின் மறைவுக்கு பின்னால் மாமனாரை நினைத்து மனம் வருந்தி கண்ணீர் விட்டதாக பேட்டியில் சொல்லிய விஷயம் ரசிகர்களின் மத்தியில் தீயாய் பரவி வருகிறது.
இதனை அடுத்து இணையத்தில் இந்த விஷயமானது வைரலாக மாறி பேசும் பொருள் ஆக்கிவிட்டது.