தமிழ் சினிமாவில் சில படங்களில் நடித்தாலும் சில நடிகைகள் எப்போதுமே ரசிகர்களின் மனங்களை விட்டு மறைவது இல்லை. அவர்கள் வேறு மொழி படங்களில் நடிக்கச் சென்றாலும், அல்லது சினிமாவை விட்டு விலகியே போனாலும், ஏன் இந்த மண்ணுலகை விட்டு மறைந்தே போனாலும் ரசிகர்களின் மனங்களில் எப்போதுமே வாழ்கின்றனர்.
சௌந்தர்யா
அந்த வகையில், நடிகை சௌந்தர்யா, தன் அழகாலும் திறன்பட்ட நடிப்பாலும் இன்றும் ரசிகர்களின் மனதில் நல்ல நடிகையாக வாழ்ந்துக்கொண்டுதான் இருக்கிறார்,
பொன்னுமணி படத்தில் அறிமுகம்
இயக்குனர் ஆர்வி உதயகுமார் இயக்கத்தில், நவரச நாயகன் கார்த்திக் ஜோடியாக தமிழில் பொன்னுமணி என்ற படத்தில் அறிமுகமானார் நடிகை சௌந்தர்யா. தொடர்ந்து படையப்பா, அருணாச்சலம் போன்ற படங்களில் ரஜினிக்கும், காதலா காதலா படத்துக்கும் கமல்ஹாசனுக்கும், தவசி, சொக்கத்தங்கம் ஆகிய படங்களில் நடிகர் விஜயகாந்துக்கும் ஜோடியாக நடித்திருந்தார் சௌந்தர்யா.
கன்னடம், மலையாளம், தெலுங்கு என பிறமொழி படங்களிலும் நடித்தவர் சௌந்தர்யா. தமிழில் அவரை அறிமுகப்படுத்திய இயக்குனர் ஆர்வி உதயகுமார், மற்ற மொழி படங்களிலும் நடிக்க சௌந்தர்யாவை சிபாரிசு செய்தார்.
உறவினர் மகனுடன் திருமணம்
தமிழில் முன்னணி நடிகர்கள் ரஜினிகாந்த், கமல்ஹாசன், விஜயகாந்த், சத்யராஜ் போன்றவர்களுடன் நடித்து புகழ்பெற்ற சௌந்தர்யா, கர்நாடகாவை சேர்ந்தவர். தனது உறவினர் ஒருவரின் மகன் ரகு என்பவரை திருமணம் செய்துக்கொண்டார். கடந்த 2004ம் ஆண்டில் அவர் கர்ப்பமாகவும் இருந்தார்.
இதையும் படியுங்கள்: 17 வயதில் நடிகை ரம்யா கிருஷ்ணனை வேட்டையாடியது யாரு தெரியுமா..?
விமான விபத்து
அப்போது, பாரதிய ஜனதா கட்சியில் சேர்ந்திருந்த சௌந்தர்யா, தன் அண்ணன் அமர்நாத் உடன் கரீம் நகரில் இருந்து பெங்களூருவுக்கு ஹெலிகாப்டரில் பயணித்தார். அப்போது விமான விபத்து ஏற்பட்டது. இதில் சௌந்தர்யா, அவரது அண்ணன் அமர்நாத், ஹெலிகாப்டரை இயக்கிய விமானி உள்ளிட்ட அந்த விமானத்தில் பயணித்த அனைவருமே உயிரிழந்தனர்.
இந்த விமான விபத்தில் சௌந்தர்யா இறப்பதற்கு சில மணி நேரத்துக்கு முன்பு, தன்னை தமிழ் சினிமாவில் அறிமுகப்படுத்திய இயக்குனர் ஆர்வி உதயகுமாரிடம் போனில் அழைத்து பேசியிருக்கிறார்.
இயக்குனருக்கு நன்றி
அப்போது, சினிமாவில் அவர் நடிக்க வாய்ப்பளித்து உதவியதற்கு நன்றியை தெரிவித்த அவர், இந்த உதவியை காலம் உள்ளவரை நான் மறக்க மாட்டேன் என்று மிகவும் உணர்ச்சிப்பூர்வமாக பேசியிருக்கிறார். ஏன் சௌந்தர்யா இப்படி எல்லாம் பேசறே, என்னாச்சு உனக்கு என்றும் அவரிடம் ஆர்வி உதயகுமார் கேட்டிருக்கிறார்.
இதையும் படியுங்கள்:தன் மகன் இறப்பதற்கு 10 நிமிடம் முன்பு காமெடி நடிகர் விவேக் என்ன செய்தார் தெரியுமா..?
ஆனால் இப்படி பேசிவிட்டு விமானத்தில் புறப்பட்டுச் சென்ற சௌந்தர்யா, விமான விபத்தில் உயிரிழந்துள்ளார்.
அவரது பயணம்
ஹெலிகாப்டர் விபத்தில் இறப்பதற்கு 2 மணி நேரம் முன்பு சௌந்தர்யா தன்னை அறிமுகப்படுத்திய இயக்குனர் ஆர்வி உதயகுமாருக்கு நன்றி சொல்லி மனப்பூர்வமாக அழுதிருக்கிறார். அவரது பயணம் இறுதிகட்டத்தை நெருங்கி விட்டதை அவர் உணர்ந்துதான் இதை செய்திருப்பார்.