வீரியமான விந்து உற்பத்தியை அதிகரிக்க இத அதிகமா சாப்பிடுங்க.

பொதுவாக ஒருவருக்கு பிள்ளைப் பேறு இல்லை என்றால் அதற்கு பெண்களைத் தான் நாம் பெருமளவில் குற்றம் கூறுவோம். ஆனால் ஆண்களும் இதில் பங்கு உள்ளது என்பதை நாம் புரிந்து கொள்ள வேண்டும். வீரியமற்ற விந்தணு  போதுமான அளவு விந்தணு எண்ணிக்கை இல்லாமல் இருத்தல் போன்றவை கூட பிள்ளை பேறு இல்லாமைக்கு காரணமாக அமையலாம்.

 

இயற்கை முறையில் விந்துக்களை வீரியமாக மாற்ற கீழே கொடுக்கப்பட்டுள்ள பொருட்களை தங்கள் உணவில் அடிக்கடி சேர்த்துக் கொண்டாலே போதும்  எண்ணி மூன்று மாதத்திற்குள் நீங்கள் அப்பா  ஆக அச்சாரம்  போட்டு விடுவீர்கள்.

சீக்கிரமே அப்பா ஆக இத சாப்பிடுங்க:

அன்றாட உணவில் பயன்படுத்தும் பூண்டு இதில் வைட்டமின் பி அதிக அளவு இருப்பதால் இனப்பெருக்கத்தில் ஈடுபடுவதற்கான உணர்வை தூண்டி கருவுறுதலுக்கு வழி செய்யும்.

நம்ம ஆளு பாக்யராஜ் கூறியதுபோல முருங்கைக்காய் முருங்கைக் கீரையும் தொடர்ந்து 48 நாட்கள் சாப்பிட்டு வர தாம்பத்திய உறவில் நாட்டம் அதிகரிக்கும் விந்துக்கள் வீரியம் அடையும் ஆண்மை பெருகும்.

நாம் அன்றாடம் பயன்படுத்தும் தக்காளியில் உள்ள லைகோபைன் மற்றும் கரோட்டினாய்டு விந்தணுக்களை அதிகளவு உற்பத்தி செய்வதோடு  ஆரோக்கியமான விந்துக்களை தரும் எனவே ஆண்கள் அனைவருமே ஒரு டம்ளர் தக்காளி சாறு தினமும் அருந்துவது மிகவும் சிறப்பானது.

திருமணம் முடிந்த கையோடு மணமக்களுக்கு பாலும் பழமும் எதற்கு கொடுத்தார்கள் பழத்தில் அதிக அளவு வைட்டமின் பி1 வைட்டமின் ஏ வைட்டமின் சி மற்றும் புரோட்டீன்கள் உள்ளது. இதில் உள்ள ப்ரோமெலைன் என்னும் நொதிப்பொருள் உடல் உறவில் ஈடுபடுவதற்கான உணர்ச்சியை அதிகரிக்கும்.  குறிப்பாக  செவ்வாழையை எடுத்துக்கொள்ளும்போது மிக எளிதில் பிள்ளை பேறு கிடைக்கும்.

பெண்களுக்கு உற்ற துணை சதா வேரி கிழங்கு என்றும் ஆண்களுக்கு சரியான துணை அமுக்குரா கிழங்கு என்பது மூலிகை பழமொழி. அமுக்குரா கிழங்கு உடன் ஏலக்காய், சுக்கு, மிளகு,திப்பிலி, கிராம்பு இவற்றுடன் பனங்கற்கண்டு கலந்து அமுக்கரா சூரணம் தயாரிக்கப்படுகிறது. இதை அருந்தும் போது ஆண்களுக்கு கூடுதல் வீரியம் கிடைப்பதால் இதனை இந்திய வயாக்ரா என்று கூட நாம் கூறலாம்.

Check Also

ப்பா…கேட்டதும் கிறுகிறுனு வருதே.. என்னது 50 வினாடிக்கு இம்புட்டு சம்பளமா? – யாருமா.. அந்த நடிகை..

திரை உலகில் கோடிக்கணக்கில் சம்பளமாக வாங்குகின்ற நடிகர் நடிகைகளை பற்றி உங்களுக்கு சொல்ல தேவை இல்லை. அந்த வகையில் தளபதி …