“வீட்டில் அமைதி செல்வம் கிடைக்க உதவும் ஆன்மீக டிப்ஸ்..!” ஃபலோ பண்ணி பாருங்க..!!

வீட்டில் அமைதி சந்தோசம் நிலவ வேண்டுமென்றால் நேர்மறை ஆற்றல்கள் அதிகரிக்க வேண்டும் அந்த நேர்மறை ஆற்றல்களை அதிகரிப்பதற்கு ஆன்மீகம் ஒன்றுதான் சிறந்த வழி.

இதனால் தான் எண்ணம் போல் வாழ்வு என்று முன்னோர்கள் சொல்லி இருக்கிறார்கள்.  நாம் எதை எண்ணுகிறோமோ அது போலவே உருவாகும்  என்பதை உணர்ந்து கொண்டு நாம் நடப்பது அவசியம்.

அதிகாலையில் எழுந்திருந்து ஆண்டவனை வணங்கி ஒவ்வொரு செயலையும் செய்யும்போது அந்த செயலில் தங்கு தடை இல்லாத நிலை ஏற்படும். எனவே இறைவழிபாட்டில் ஆழ்ந்த கவனத்தை செலுத்துவது வீட்டுக்கும் மட்டுமல்ல மனதிற்கும் நன்மை பயக்கும்.

 எப்போதும் இறை எண்ணத்தில் இருக்கும் போது நம்மிடம் இருக்கும் தீயவை அனைத்தும் விலகி விட்டு மனம் தூய்மையாக மாறிவிடும் இதன் மூலம் குடும்பத்தில் அமைதி மகிழ்ச்சி நிலவும்.

மனதில் நல்ல சிந்தனைகளை வளர்ப்பதோடு மற்றவர்களுக்கு விட்டுத் தரக்கூடிய மனப்பான்மையையும் ஏற்படுத்தி தரக்கூடிய ஆன்மீகத்தை ஒவ்வொருவரும் இளம் வயதிலிருந்தே கடைப்பிடிக்க ஆரம்பித்து விட்டால் மகிழ்ச்சிக்கு எல்லையே இருக்காது.

பணத்தின் மேல் பற்றுக் கொள்ளாமல் உறவுகளின் மேல் பற்றை ஏற்படுத்தக்கூடிய எந்த ஆன்மீகமானது அனைவரையும் ஒன்றாக இணைக்க கூடிய ஒரு பாலமாக இருப்பதால் தான் அன்பே சிவம் என்று கூறுகிறோம்.

 விதியை வெல்லவும் மதி வழியாக நாம் எதையும் பெறவும் ஆன்ம விதியை கட்டுப்படுத்தாமல் தக்க பயிற்சியை மேற்கொள்ளும் போது உங்கள் வீட்டில் அமைதி செல்வம் கிடைக்கும்.

 மகிழ்ச்சி என்பது மனிதனுக்குள் இருப்பதே ஒழிய வேறு வெளி பகுதிகளில் இருப்பதில்லை என்பதை உணர்த்துவது தான் ஆன்மீகம். ஞானம் இருக்கும் இடத்தில் ஈகோ போன்ற பிரச்சனைகள் ஏற்படாது. எனவே ஆன்மீகத்தை புத்தியை செலுத்தினால் அமைதி ஏற்படும்.

 நிகழ்காலத்திற்காக வாழ்வதோடு எதிர்காலத்திற்காக கவலைப்படாமல் இருக்க நீங்கள் திடமான நம்பிக்கையை இறைவன் இடம் வைக்க வேண்டும். மேலும் உங்கள் குழந்தைகளுக்கும் தியானம் யோகா போன்றவற்றைக் கற்றுக் கொடுப்பதன் மூலம் ஆரோக்கியமான வாழ்வை வீட்டில் ஏற்படுத்த முடியும்.

புதுப்பேட்டை படத்துல நிஜமாவே அந்த உறுப்பில்.. ரகசியம் உடைத்த சினேகா..!

Comments are closed.
Exit mobile version