குடும்பம் செழிக்க.. பெண்கள் கடைபிடிக்க வேண்டிய விஷயங்கள்..! – மாற்றம் நிச்சயம்..!

வீட்டை கட்டிக் காக்க கூடிய பெண்கள் பூஜை, வாஸ்து போன்ற விஷயங்களில் கூடுதல் கவனத்தை செலுத்துவதின் மூலம் வீட்டில் செல்வத்தை மேம்படுத்துவதோடு ஆரோக்கியத்தையும் அதிகரிக்க முடியும் என்று சாஸ்திரங்கள் கூறியுள்ளது.

அந்த வரிசையில் தினசரி வாழ்க்கையில் பெண்கள் கடைபிடிக்க வேண்டிய முக்கியமான சில ஆன்மீக குறிப்புகளை எந்த கட்டுரையில் காணலாம்.

பெண்கள் கட்டாயம் கடைபிடிக்க வேண்டிய ஆன்மீக குறிப்புகள்:

வீட்டில் அஷ்ட ஐஸ்வர்யங்கள் தங்க வேண்டுமென்றால் அதற்கு மகாலட்சுமியை நாம் வரவேற்க வேண்டும் அந்த விதத்தில் மகாலட்சுமியை வரவேற்க வாசலில் கோலம் இடும்போது தெற்கு பார்த்து கோலம் இடக்கூடாது.

அதுபோல் வாசலில் நீர் தெளிக்கும் போது தண்ணீரில் கொஞ்சம் போல் மஞ்சள், சாணம் கலந்து தெளித்தால் மனம் மகிழ்ந்து அஷ்டலட்சுமி நமது வீட்டில் வாசம் செய்வாள்.

கர்ப்பமாக இருக்கக்கூடிய பெண்கள் உக்கிரமாக இருக்கக்கூடிய கடவுள்களை வழிபடுவதோ அல்லது அந்த கோயிலுக்கு செல்வதோ அவசியம் இல்லை. மேலும் அவர்கள்  விரதம் இருப்பதை கட்டாயம் தவிர்க்க வேண்டும்.

திருமணம் ஆன சுமங்கலி பெண்கள் குங்குமத்தை இரண்டு புருவங்களுக்கு மத்தியிலும் உச்சம் தலையிலும் இட்டுக் கொள்வது மிகவும் சிறப்பு வாய்ந்ததாகும். திருமணம் ஆகாத பெண்கள் உச்சந்தலையில் குங்குமம் வைத்துக் கொள்ள வேண்டிய அவசியம் இல்லை.

 இன்று திருமணம் ஆன பெண்கள் விரல் முழுவதும் கால்களில் மெட்டியை போட்டுக் கொள்கிறார்கள் அது மிகவும் தவறு. மேலும் பெண்கள் ஒரே விரலில் மட்டுமே மெட்டியை அணிய வேண்டும் பல விரல்களில் அணிந்து கொள்வதால் அது உங்களின் ஆரோக்கியம் மற்றும் கணவனின் வளர்ச்சியை பாதிப்பை ஏற்படுத்தும்.

இதுபோலவே கோயிலுக்கு செல்லும்போது பெண்களுக்கு கொடுக்கும் துளசியை தலையில் வைத்து கொள்ளக்கூடாது. வாயில் இட்டு உண்டு நீரினை பருக வேண்டும்.

அது போல கடவுளை வணங்கி விட்டு நமஸ்காரம் செய்யும் போது பின்னங்கால்கள் இரண்டையும் சேர்த்துக் கொண்டு முன் நெற்றி தரையில் படுமாறு மண்டியிட்டு வணங்க வேண்டும். மார்பு பகுதி மண்ணில் படக்கூடாது.

 மேலும் பெண்கள் வெள்ளி செவ்வாய்க்கிழமை அன்று தலைக்கு குளித்தல் மிகவும் சிறப்பானதாகும். இது தேவையற்ற எதிர்மறை ஆற்றல்களை குறைத்து உங்களுக்கு தேவையான நேர்மறை ஆற்றல்களை உங்களுக்கு அள்ளிக் கொடுக்கும்.

 எப்போதுமே சூரிய உதயத்திற்கு முன்பு எழக்கூடிய பெண்களின் வீட்டில் அஷ்ட ஐஸ்வர்யங்கள் பொங்கி பொழியும் வாழ்வில் வெற்றிகள் அடுக்கடுக்காக வந்து சேரும்.

புதுப்பேட்டை படத்துல நிஜமாவே அந்த உறுப்பில்.. ரகசியம் உடைத்த சினேகா..!

Comments are closed.
Tamizhakam