” சர்க்கரை கட்டுக்குள் இருக்கனுமா?|” நீரிழிவு நோயாளிகளுக்கு ஏற்ற..! – வெந்தய தோசை…!!

 இந்தியாவை பொறுத்தவரை சர்க்கரை நோயாளிகளின் எண்ணிக்கை ஆண்டுக்கு ஆண்டு அதிகரித்து வருகிறது. அவர்கள் குறிப்பிட்ட  குறிப்பிட்ட பொருளை உணவில் சேர்த்துக் கொள்வதின் மூலம் ரத்தத்தில் இருக்கும் சர்க்கரையின் அளவை கட்டுக்கோப்பாக வைத்துக் கொள்ளலாம். அந்த வகையில் வெந்தய தோசை – யில் இருக்கக்கூடிய ஆற்றலானது ரத்தத்தில் இருக்கக்கூடிய சர்க்கரையின் அளவை கட்டுக்கோப்பாக வைத்துக்கொள்ள உதவுகிறது.

 எனவே நீங்கள் உங்கள் உணவில் அதிக அளவு வெந்தயத்தை சேர்த்துக் கொள்வது அவசியம். தினமும் இரவு அல்லது காலை நேரத்திலோ நீங்கள் உங்கள் உணவில் வெந்தய தோசையை எடுத்துக் கொண்டால் உங்களுக்கு உணவே மருந்தாகவும் மாறிவிடும் அப்படி சிறப்புமிக்க ரத்தத்தை கட்டுப்படுத்தக்கூடிய வெந்தய தோசையை எப்படி செய்யலாம் என்பதை பார்க்கலாம்.

வெந்தய தோசையை செய்ய  தேவையான பொருட்கள்

  1. அரை கிலோ இட்லி அரிசி
  2. 150 கிராம் வெந்தயம்
  3. 50 கிராம் உளுத்தம் பருப்பு
  4. தேவையான அளவு உப்பு

 செய்முறை

 இட்லிக்கு மாவை அரைப்பது போல மேற்கூறிய பொருட்கள் அனைத்தையும் ஒன்றாக  ஒரு பாத்திரத்தில் போட்டு குறைந்தது மூன்று மணி முதல் 3:30 மணி நேரம் வரை ஊற வைத்துக் கொள்ளுங்கள்.

 பிறகு இந்தக் கலவையை நீங்கள் உங்கள் கிரைண்டரில் போட்டு நன்கு அறைத்து எடுத்துக் கொள்ளலாம். இல்லையென்றால் மிக்ஸி ஜாரில் போட்டு மைய அடித்து எடுத்துக் கொள்ளவும்.

 மேலும் அரைத்து முடித்து இந்த மாவினை ஒரு பாத்திரத்தில் வைத்து குறைந்தபட்சம் 5 மணி நேரமாவது அப்படியே விட்டுவிடுங்கள்.

 பிறகு நீங்கள் உங்கள் தோசை கல்லில் எப்போதும் தோசை ஊற்றுவது போல தோசை ஊற்றி எடுத்தால் போதுமானது. உங்களது வெந்தய தோசை தற்போது ரெடியாகிவிட்டது.

இந்த தோசைக்கு பருப்பு துவையல் அல்லது தக்காளி சட்னியை சைடிஷ் ஆக வைத்து சாப்பிடலாம். சர்க்கரை நோயாளிகள் இந்த வெந்தய தோசையை செய்து சாப்பிடுவதின் மூலம் கட்டாயம் சர்க்கரையின் அளவு எகிறாமல் அப்படியே கண்ட்ரோலில் இருக்கும்.

புதுப்பேட்டை படத்துல நிஜமாவே அந்த உறுப்பில்.. ரகசியம் உடைத்த சினேகா..!

Comments are closed.
Tamizhakam