உங்கள் வீட்டில் இருக்கும் பழ மரங்களில் அணில் தொல்லையா? இத செஞ்சு பாருங்க அணில் பழத்துக்கு பக்கமே வராது..!

வீட்டு தோட்டங்களை வைத்து இருப்பவர்கள் சிறிது இடம் அதிகமாக இருக்கக்கூடிய வேளைகளில் பழ மரங்களையும் நட்டு வைத்திருப்பார்கள். குறிப்பாக கொய்யா மரம் இல்லாத வீடுகளே இல்லை என்று கூறும் அளவுக்கு இடம் வைத்திருப்பவர்கள் கொய்யா மரத்தை கட்டாயம் வைத்திருப்பார்கள்.

 அப்படி அந்த கொய்யா மரம் நன்கு வளர்ந்து பூக்களும் கொத்துக்கொத்தாய் பூத்து, பிஞ்சுகள் பிடித்து அந்தப் பிஞ்சுகள், பழமாக மாறக்கூடிய தருவாயில் எங்கிருந்து வந்ததோ அணில்கள் என்று தெரியாமல் அத்துணை பழங்களையும் அணில்கள் தின்று சென்று விடக் கூடிய சூழ்நிலையில் நீங்கள் பழங்களே கிடைக்கவில்லை என்று ஏங்குகிறீர்களா.

 அப்படி என்றால் உங்கள் வீட்டு கொய்யா பழத்தை இனி நீங்கள் மட்டுமே உண்ணக்கூடிய சூழ்நிலையை மிக எளிதில் உருவாக்கக்கூடிய ஒரு வழி உள்ளது.

 இந்த வழியை நீங்கள் ஃபாலோ செய்வதன் மூலம் எந்த ஒரு கொய்யா பழத்தையும் அணில் தொட்டு கூடி பார்க்காது.. அவ்வளவு ஏன் அந்த பழத்தின் அருகே கூட செல்லாது. அட அது என்ன வழி என்று நீங்கள் யோசிப்பது நன்கு தெரிகிறது.

 மிக எளிய பாதுகாப்பான வழி தான் இது. இதனால் அணில்களுக்கோ மற்ற உயிரினங்களுக்கோ எந்தவிதமான பாதிப்பும் ஏற்படாது. உங்கள் வீட்டில் இருக்கக்கூடிய பூண்டை ஒரு கைப்பிடி அளவு எடுத்துக் கொண்டு அதை நன்கு அரைத்து ஒரு லிட்டர் நீரில் கலந்து விடுங்கள்.

 பின்பு இந்த கலவையை கொய்யா மரம் முழுவதும் அடித்து விடுங்கள். குறிப்பாக காய்கள் பூக்கள் இருக்கும் பகுதியில் நன்கு தெளித்து விடுங்கள்.

நீங்கள் அப்படி செய்துவிட்டால் கட்டாயம் அணில் இந்த கொய்யா மரத்தின் பக்கத்தில் கூடி வராது. இதுபோல செய்வதினால் உங்கள் செடிகளுக்கும் எந்த பாதிப்பும் இருக்காது.

 நீங்கள் நினைத்தபடி கொய்யாப்பழங்களை எளிதில் பறித்து நீங்கள் சுவைக்க முடியும். எனவே பழங்களை பாதுகாப்பதற்காக நீங்கள் இவ்வாறு செய்யலாம்.

Check Also

உள்ளாடை மாற்றும் காட்சி.. அவர் செய்த காரியம்.. பதறிய ஸ்ரீதேவி..!

நடிகை ஸ்ரீதேவி விருதுநகர் மாவட்டம் மீனம்பட்டியில் பிறந்து இந்திய திரை உலகில் ஒரு புகழ்பெற்ற நடிகையாக விளங்கியவர். இவர் 1969-இல் …