ஸ்ரீலீலா : சமீப காலமாக சினிமாவில் மருத்துவம் படித்த நடிகைகளின் வரவு அதிகரித்து வருகிறது. நடிகைகள் சாய் பல்லவி உள்ளிட்ட சில நடிகைகள் மருத்துவம் படித்து மகத்துவம் பார்க்காமல் நடிப்பில் கவனம் செலுத்துகிறார்கள்.
அந்த வகையில் தற்போது மருத்துவம் படித்துக் கொண்டிருக்கும் மாணவியாக இருக்கும் நடிகர் ஸ்ரீலீலா சினிமாவில் ஹீரோயினாக கலக்கி வருகிறார். தெலுங்கு கன்னட ரசிகர்களைத் தனது அழகாலும் நடன அசைவுகளாலும் தன்னுடைய சுருக்குப் பையில் கட்டிப் போட்டிருக்கிறார் அம்மணி.
இவருடைய சொந்த ஊர் பெங்களூருவாகும். பிறந்து வளர்ந்ததெல்லாம் அங்கேதான். எம்பிபிஎஸ் மருத்துவப் படிப்பை மேற்கொண்டு இருக்கும் நிலையில் விரைவில் மருத்துவராக போகிறார்.
இது குறித்து அவர் பேசியபோது எங்கள் குடும்பத்தில் எல்லாருமே அதிகம் படித்தவர்கள் அம்மாவும் அப்பாவும் மருத்துவர்கள் சிறுவயது முதலே அவரை போல மருத்துவராக வேண்டும் என்பது தன்னுடைய கனவு வீட்டில் உள்ளவர்களுக்கும் உறவினர்களுக்கும் உறவினர்களும் தந்த ஊக்கம் தான் நான் மருத்துவ படிப்பை தேர்வு செய்ய காரணம்.
எனக்கும் தனிப்பட்ட முறையில் மருத்துவம் என்பது மிகவும். பிடித்த ஒரு படிப்பு அதனாலேயே மருத்துவப் படிப்பை சேர்ந்து படித்து வருகிறேன். ஒரே நேரத்தில் படிப்பு மற்றும் சினிமாவில் நடிப்பது இரண்டையும் செய்வதற்கு எனக்கு கடினமாக தெரியவில்லை.
ஏனென்றால், இரண்டுமே எனக்கு மிகவும் பிடித்த விஷயங்கள் என்று கூறுகிறார். இந்நிலையில், இவருடைய சமீபத்திய புகைப்படங்கள் சில இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது. இதனை பார்த்த ரசிகர்கள் கேமராமேன் குடுத்து வச்சவன் என்று தங்களுடைய கருத்துக்களை பதிவு செய்துவருகின்றனர்.