இடும்பன் பற்றிய ரகசியங்கள் என்ன? – அறிந்து கொள்ளலாம் வாங்க..!

முருகன் என்றால் அழகன் என்று ஒரு பொருள் உண்டு என்பது அனைவருக்கும் நன்கு தெரியும். முருகனை வழிபடுவதற்கு முன்பு முருகன் இருக்கக்கூடிய பழனி மலையில் இருக்கும் இடும்பன் பற்றிய ரகசியங்கள் உங்களுக்கு தெரிந்திருப்பது அவசியமாகும்.

ஆனால் நிறைய பேருக்கு இடும்பன் யார் எப்படிப்பட்டவர் என்பது தெரிவதே இல்லை. பழனி மலையில் இருக்கும் முருகனை தரிசித்து செல்வதோடு நின்று விடுவார்கள்.மலைக்கு அருகில் இருக்கும் இடும்பன் மலைக்குச் சென்று யாரும் தரிசிப்பது இல்லை.

IDUMBAN

ஆனால் இடும்பனை வழிபட்டால் வாழ்க்கையில் ஏற்படும் இன்னல்கள் அனைத்தும் நீங்கும் என்பதை இனியாவது நீங்கள் புரிந்து கொள்ளுங்கள். ஏன் என்றால் இடும்பன் அகஸ்திய முனிவரின் சீடர்களில் ஒருவர் ஆவார்.

மேலும் அகஸ்தியர் ஒரு முறை தனது வழிபாட்டிற்காக கைலாயம் சென்றபோது அங்கு முருகனுக்காக கயில மலையில் இருக்கக்கூடிய சக்தி ரூபமான சிவகிரி மற்றும் சக்திகிரி என்னும் இரு மலைகளையும் கொண்டு வரும்படி இடும்பனிடம் கூறினார்.

IDUMBAN

இதனை அடுத்து அகஸ்தியரின் கட்டளையை ஏற்று இடும்பனும் கயிலை மலைக்கு சென்று அந்த இரண்டு மலைகளையும் காவிடியாக கட்டிக் கொண்டு வந்ததால் தான் முருகருக்கு காவடி எடுக்கக்கூடிய வழிபாடு முறை தோன்றியது.

மேலும் அந்த இரண்டு மலைகளையும் அவர் திருவாவினன் குடியில் நிலை பெறச் செய்ததாக கூறியிருக்கிறார்கள். அந்த சமயத்தில் முருகன் ராஜா வேடத்தில் வந்து இடுமனை ஓய்வு எடுக்க கூறிய பின்பு, இடும்பன் அந்த இரண்டு மலைகளையும் தூக்க முயன்ற போது அதை தூக்க முடியாமல் திணறினார்.

IDUMBAN

 அந்த சமயத்தில் சிறுவன் வேடத்தில் முருகப்பெருமான் மலையில் நின்றிருந்த போது அந்த சிறுவனை தாக்க முற்பட்ட இடும்பனை முருகப்பெருமான் தடுத்து கீழே தள்ளினார்.

இதனை அடுத்து இடும்பன் மனைவியுடன் சென்று முருகனிடம் வேண்ட முருகன் புரிந்து தனது காவல் தெய்வமாக நியமித்துக் கொண்டார். இதனை அடுத்து தான் காவடி எடுக்கக் கூடிய பழக்கம் ஏற்பட்டது.

IDUMBAN

எனவே பழனி மலைக்குச் செல்லும் பக்தர்கள் கட்டாயம் இடும்பனையும் தரிசித்து உங்கள் வாழ்க்கையில் ஏற்படும் துயரங்களை நீக்கிக் கொள்ளுங்கள்.

Check Also

ப்பா…கேட்டதும் கிறுகிறுனு வருதே.. என்னது 50 வினாடிக்கு இம்புட்டு சம்பளமா? – யாருமா.. அந்த நடிகை..

திரை உலகில் கோடிக்கணக்கில் சம்பளமாக வாங்குகின்ற நடிகர் நடிகைகளை பற்றி உங்களுக்கு சொல்ல தேவை இல்லை. அந்த வகையில் தளபதி …