அந்த போட்டோவை நெனச்சாலே.. இதெல்லாம் தோணும்.. நடிகை ஸ்ரீரஞ்சனி ஓப்பன் டாக்..!

தமிழ் சினிமாவில் நிறைய திரைப்படங்களிலும் சீரியல்களிலும் நடித்து பிரபலமாக இருந்தவர் நடிகை ஸ்ரீரஞ்சனி. இவரது பெயரே பலருக்கும் தெரியாது என்றாலும் கூட இவரது முகம் பலரும் அறிந்த முகமாக இருக்கும்.

ஆங்கிலோ இந்தியனான இவர் மகாராஷ்டிராவை சேர்ந்தவராவார் அங்கிருந்து தமிழ் சினிமாவில் வாய்ப்பை பெற்று 50க்கும் அதிகமான திரைப்படங்களில் நடித்திருக்கிறார் ஸ்ரீ ரஞ்சனி. அதிகபட்சம் இவருக்கு துணை கதாபாத்திரங்களில் நடிப்பதற்குதான் வாய்ப்பு கிடைக்கும்.

தமிழில் முதன்முதலாக அலைபாயுதே திரைப்படத்தில் துணை கதாபாத்திரமாக அறிமுகமானார் ஸ்ரீ ரஞ்சனி. அதனை தொடர்ந்து உதயா, செல்லமே, அந்நியன், பிரியசகி, சரவணா, திமிரு என்று அவர் நடித்த திரைப்படங்கள் எல்லாம் தமிழ் சினிமாவில் பெரும் வெற்றியை கொடுத்த திரைப்படங்களாகதான் இருந்தன.

நிறைய பட வாய்ப்பு:

அதிகபட்சம் அக்கா கதாபாத்திரத்தில் அல்லது அம்மா கதாபாத்திரத்தில் நடித்திருப்பார் ஸ்ரீ ரஞ்சனி. இதனால் அனைவருக்கும் பரிச்சயமான ஒரு முகமாக அவரது முகம் இருந்தாலும் அவரது பெயர் என்னவென்று யாரும் அவ்வளவாக தெரிந்து கொண்டிருக்க மாட்டார்கள்.

2000 இல் தொடங்கிய இவரது சினிமா பயணம் இப்போது வரை தொடர்ந்து சென்று கொண்டிருக்கிறது. 2024ல் கூட இவரது நடிப்பில் இரண்டு திரைப்படங்கள் வெளியாகி இருக்கின்றன. இப்போதெல்லாம் அதிகபட்சம் அம்மா கதாபாத்திரத்தில்தான் நடித்து வருகிறார் ஸ்ரீ ரஞ்சனி.

அதிகபட்சம் தமிழில் இருக்கும் பல முன்னணி நடிகர்களுக்கு அம்மாவாக நடித்து விட்டார். இதற்கு நடுவே நிறைய டிவி சீரியல்களிலும் நடித்திருக்கிறார். தற்சமயம் சன் டிவியில் ஒளிபரப்பாகி அதிக வரவேற்பை பெற்று வரும் இனியா சீரியலிலும் முக்கிய கதாபாத்திரத்தில் இவர் நடித்திருக்கிறார்.

ரஜினியுடன் போட்டோ:

இந்த நிலையில் ரஜினியுடன் புகைப்படம் எடுத்துக் கொண்ட அவரது அனுபவம் குறித்து அவர் ஒரு பேட்டியில் பேசியிருந்தார். அதில் கூறும் பொழுது ஒரு  படத்தில் நடிக்கும் பொழுது அந்த படபிடிப்பு தளத்திற்கு ரஜினி வந்திருந்தார்.

அவரோடு ஒரு போட்டோ எடுத்துக் கொள்ள வேண்டும் என்பது என்னுடைய வெகு நாள் கனவாக இருந்தது. அதனால் அன்று படப்பிடிப்பு துவங்கியது முதலே அவர்களுடன் எப்படியாவது போட்டோ எடுத்துக் கொள்ள வேண்டும் என்று யோசித்துக் கொண்டே இருந்தேன்.

இதனால் படப்பிடிப்பிலும் ஒழுங்காக நடிக்கவில்லை இதனை பார்த்த இயக்குனர் உங்களுக்கு ஏதாவது பிரச்சனையா மேடம் என்று கேட்டார். அப்பொழுது நான் ரஜினியுடன் போட்டோ எடுத்துக் கொள்ள வேண்டும் என்பதை அவரிடம் கூறினேன்.

அதற்கு அவர் இதை ரஜினி சாரிடம் சென்று கேட்டால் அவரே உங்களுக்கு போட்டோ எடுத்து கொடுத்து விடுவார்கள் என்று கூறியிருக்கிறார். இருந்தாலும் அவர் ரஜினியிடம் கேட்காமலேயே கடைசியில் படப்பிடிப்பு முடிந்து வீட்டிற்கும் கிளம்பி இருக்கிறார்.

அப்பொழுது அங்கு அமர்ந்து இருந்த ரஜினி இவரை பார்த்துவிட்டு அழைத்து இவருடன் போட்டோ எடுத்து கொடுத்து இருக்கிறார். இந்த விஷயத்தை பகிரும் ஸ்ரீ ரஞ்சனி கூறும்பொழுது அந்த போட்டோவை இப்போது பார்த்தால் கூட அந்த போட்டோ எடுப்பதற்காக எவ்வளவு கஷ்டப்பட்டேன் என்பதுதான் நினைவுக்கு வரும் என்று சிரித்துக் கொண்டே கூறுகிறார்.

புதுப்பேட்டை படத்துல நிஜமாவே அந்த உறுப்பில்.. ரகசியம் உடைத்த சினேகா..!

Comments are closed.
Exit mobile version