தமன்னா எல்லாம் ஓரமா போயிடனும்.. அரண்மனை பாடலுக்கு ஆட்டம் போட்ட ஸ்ரீதேவி அஷோக்..!

சின்னத்திரையில் பயணம் செய்யும் நடிகைகள் பெரிய திரையில் நடிக்க வாய்ப்பு கிடைத்து பெரிய நடிகைகளாக மாறுவது ஒன்றும் பெரிய விஷயம் இல்லை. அந்த வகையில் தமிழ் தொலைக்காட்சி சீரியல்களில் நடித்த ஸ்ரீதேவி அசோக் பற்றி பெரிய அறிமுகம் தேவையில்லை.

சின்னத்திரை சீரியல்களில் பக்குவமாக தனது நடிப்பை வெளிப்படுத்தியதை அடுத்து பெரிய திரையில் நடிக்கின்ற வாய்ப்பைப் பெற்ற இவர் அண்ணா பல்கலைக்கழகத்தில் முதுகலை வணிக மேலாண்மை பட்டம் பெற்றவர்.

நடிகை ஸ்ரீதேவி அசோக்..

சின்னத்திரை சீரியல்களான செல்லமடி நீ எனக்கு, கஸ்தூரி, வைர நெஞ்சம், இளவரசி, தங்கம் போன்ற சன் டிவி சீரியல்களில் நடித்து பெருவாரியான இல்லத்தரசிகளின் மனதைக் கவர்ந்தவர்.

இவர் 2010-ஆம் ஆண்டு மானாட மயிலாட என்ற நிகழ்ச்சிகள் கலைஞர் தொலைக்காட்சியில் பங்கேற்ப்பாளராக பங்கு பெற்று தனது அபார நடன திறமையை வெளிப்படுத்துகிறார்.

சன் டிவி மட்டுமல்லாமல் ஜீ தமிழ், ஜெமினி தொலைக்காட்சி, ஜெயா தொலைக்காட்சி, விஜய் தொலைக்காட்சி போன்றவற்றில் பல சீரியல்களில் நடித்திருக்கிறார்.

இதில் குறிப்பாக ஜீ தமிழில் அன்னக்கொடியும் ஐந்து பெண்களும், விஜய் தொலைக்காட்சிகள் கல்யாண முதல் காதல் வரை, விஜய் தமிழில் செம்பருத்தி, பூவே பூச்சூடவா தற்போது சன் டிவியில் தாலாட்டு போன்ற சீரியலில் நடித்து அனைவரையும் தன் நடிப்பால் அசர வைத்தவர்.

தமன்னா எல்லாம் ஓரம் போயிடுங்க..

பெரிய திரையைப் பொறுத்த வரை 2004-ஆம் ஆண்டு வெளி வந்த புதுக்கோட்டையில் இருந்து சரவணன் என்ற திரைப்படத்தில் முதல் முதலில் அறிமுகமான இவர் 2006-ஆம் ஆண்டு கிழக்கு கடற்கரை சாலை படத்தில் தேவி என்ற கேரக்டர் ரோலை ஏற்று நடித்திருந்தார்.

இதனை அடுத்து இவர் பெரிய திரை வாய்ப்பை எதிர்பார்த்து காத்திருந்தார். எனினும் நினைத்த படி திரைப்பட வாய்ப்புகள் கிடைக்காததை அடுத்து சின்னத்திரையில் செட்டில் ஆகிவிட்டார்.

சமூக வலைதள பக்கங்களில் படு பிஸியாக இருக்கக்கூடிய இவர் அடிக்கடி வண்ண, வண்ண உடைகளை அணிந்து போட்டோ ஷூட் நடத்தி வீடியோக்களையும், போட்டோக்களையும் வெளியிடுவார்.

இந்த வகையில் தற்போது இவர் வெளியிட்டு இருக்கின்ற வீடியோவில் அரண்மனை படத்தில் வெளி வந்த அச்சச்சோ பாடலுக்கு அழகான நடனத்தை ஆடி அனைவரையும் அசர வைத்திருக்கிறார்.

அரண்மனை 4 பாடலுக்கு ஆட்டம் போட்ட ஸ்ரீதேவி..

இவர் போட்ட ஆட்டத்தை பார்த்து ரசிகர்கள் அனைவரும் தமன்னா கூட ஓரம் போய்டுங்க என்று சொல்லி இருப்பதோடு தமன்னாவை விட ஒரு படி மேலே நடனத்தில் பிச்சு உதறி இருக்கிறார் என்று சொல்லி வருகிறார்கள்.

நீங்களும் இவர் போட்டு இருக்கும் ஆட்டத்தை பார்க்க வேண்டும் என்றால் கட்டாயம் கீழே கொடுக்கப்பட்டிருக்கும் லிங்கை கிளிக் செய்து பாருங்கள்.

அவர் போட்டிருக்கும் அற்புதமான ஆட்டத்தை பார்த்து நீங்களும் அவரோடு எழுந்து ஆடி விடுவீர்கள். அவ்வளவு நேர்த்தியாக நடன திறனை இந்த பாடலில் வெளிப்படுத்தி இருப்பதை பார்த்து ரசிகர்கள் அனைவரும் அகமகிழ்ந்து லைக்குகளை அள்ளித் தந்திருக்கிறார்கள்.

இந்நிலையில் இதை பார்த்தாவது இவருக்கு புதிய படங்களில் நடிக்க கூடிய வாய்ப்புகள் கிடைக்குமா? என்பது இனிவரும் காலங்களில் தெரிய வரும் என்று சில ரசிகர்கள் பகிர்ந்திருக்கிறார்கள்.

இந்நிலையில் இந்த வீடியோவானது தற்போது இணையத்தில் வைரலாக பரவி வருவதோடு அதிக அளவு பார்க்கப்படும் வீடியோக்களில் ஒன்றாக மாறிவிட்டது.

புதுப்பேட்டை படத்துல நிஜமாவே அந்த உறுப்பில்.. ரகசியம் உடைத்த சினேகா..!

Comments are closed.
Exit mobile version