அவன் இறந்த பிறகு.. இதை பண்ணாத நாளே இல்லை.. நடிகை ஸ்ரீதேவி அஷோக் குமுறல்..!

பிரபல சீரியல் நடிகையான ஸ்ரீதேவி அசோக் சென்னையில் பிறந்து வளர்ந்து முதன் முதலில் தனுஷ் நடிப்பில் வெளிவந்த புதுக்கோட்டையில் இருந்து சரவணன் எனும் திரைப்படத்தின் மூலமாக அறிமுகமானார்.

அந்த திரைப்படத்தில் அவர் செல்வி எனும் கேரக்டரில் நடித்திருப்பார். அதை தொடர்ந்து பல்வேறு தொலைக்காட்சி சீரியல்களில் நடிக்க ஆரம்பித்தார்.

ஸ்ரீதேவி அஷோக்

அவர் செல்லமடி நீ எனக்கு என்ற சீரியலின் மூலம் 2008 ஆம் ஆண்டு சீரியல் துறைக்கு தொலைக்காட்சியில். தென்பட ஆரம்பித்தார் .

இதையடுத்து கஸ்தூரி, வைர நெஞ்சம், இளவரசி, பிரிவோம் சந்திப்போம், வாணி ராணி, சித்திரம் பேசுதடி, அன்னக்கொடியும் ஐந்து பெண்களும், கல்யாண முதல் காதல் வரை உள்ளிட்ட தொடர்களில் நடித்துள்ளார்.

பூவே பூச்சூடவா, செம்பருத்தி, ராஜா ராணி இப்படி பல்வேறு சூப்பர் ஹிட் சீரியல்களில் தொடர்ச்சியாக நடித்து பிரபலமான சீரியல் நடிகையாக இவர் பார்க்கப்பட்டு வருகிறார்.

இதனிடையே மானாட மயிலாட நிகழ்ச்சியில் பங்கேற்ற ஸ்ரீதேவி அங்கு தனது நடனத் திறமையை வெளிப்படுத்தி அசத்தியிருந்தார்.

நாயால் மலர்ந்த காதல்:

சீரியல்களில் ஹோம்லியாக கதாபாத்திரங்களை தேர்ந்து நடித்து வந்த அவருக்கு தனி ரசிகர்கள் கூட்டமே இருக்கிறார்கள் .

இதனிடையே அவர் தன்னுடைய நண்பரும் காதலரும் ஆன அசோக் என்பவை காதலித்து திருமணம் செய்து கொண்டார்.

இந்த தம்பதிக்கு இரண்டு பெண் குழந்தைகள் இருக்கிறார்கள். இந்த நிலையில் சமீபத்திய பேட்டி ஒன்றில் தன் கணவரை எப்படி சந்தித்தேன் எங்களுக்குள் எப்படி காதல் மலர்ந்தது என்பது குறித்து பேசி இருக்கிறார்.

நான் பெங்களூரில் இருந்த போது என்னுடைய செல்ல நாய்க்கு சில உடல் நலக்க கோளாறு ஏற்பட்டது. அப்போது அதுக்காக சிகிச்சை எடுக்கணும்.

ஸ்ரீதேவி அஷோக் குமுறல்:

அந்த சமயத்தில் பெங்களூர்ல எனக்கு யாருமே தெரியாது. என்னோட என்னுடைய நாயோட போட்டோவ நான் பேஸ்புக்ல வெளியிட்டேன்.

பெங்களூர்ல இருக்க யாருக்காவது சிகிச்சை செய்வீர்களா? தயவு செய்து என்னை மெசேஜ் பண்ணுங்க. என்று கேட்டேன்.

அப்போது என்னுடைய கணவர் அசோக் தான் என்னை தொடர்பு கொண்டார். அவர்தான் என்னை தொடர்பு கொண்டு என் நாய்க்கு தேவையான அனைத்து சிகிச்சைகளையும் ஏற்பாடு செய்தார்.

அன்றிலிருந்து நாங்கள் நண்பர்களாக பழகி வருகிறோம். இதனிடையே நட்பு காதலாக மாறியது. பின்னர் வீட்டிலேயே இருவரும் இந்த செய்தி அறிவித்து திருமணம் செய்து கொண்டோம் .

மேலும் ஒரு முறை நான் என்னுடைய காரை ஒட்டிக் கொண்டிருக்கும் போது ஒரு நாய் மீது வண்டியை ஏற்றி விட்டேன்.

நாயின் கால் உடைந்து விட்டது. பின்னர் அந்த நாயை நாங்களே மீட்டு எடுத்து சிகிச்சை அளித்து வந்தோம். அந்த நாய் குணமாகி நன்றாக வளர்ந்து கொண்டிருந்தது.

ஆனால், சிறுநீரக கோளாறு காரணமாக அவர் திடீரென உயிரிழந்து விட்டார். அதை நினைத்தால் நான் என்றும் அழுவேன் என நடிகை ஸ்ரீதேவி கூறுகிறார்.

அவன் இறந்த பிறகு நான் அவனை நினைத்து அழாத நாட்களே இல்லை என ஸ்ரீதேவி அசோக் மிகுந்த வேதனையோடு தெரிவித்தார்.

புதுப்பேட்டை படத்துல நிஜமாவே அந்த உறுப்பில்.. ரகசியம் உடைத்த சினேகா..!

Comments are closed.
Exit mobile version