அவனை நினைச்சு அழாத நாள் இல்லை.. ஸ்ரீதேவி அஷோக் கண்ணீர்..!

புதுக்கோட்டையிலிருந்து சரவணன், படத்தில் அறிமுகமானவர் ஸ்ரீதேவி. கிழக்கு கடற்கரை சாலை என்ற படத்திலும் நடித்திருக்கிறார்.

ஸ்ரீதேவி அசோக்

சின்னத்திரை நடிகை ஸ்ரீதேவி, முதலில் திரைப்படங்களில் நடித்துக்கொண்டு இருந்தார். அதன்பிறகுதான் சீரியல்களில் நடிக்கத் துவங்கினார். செல்லமடி நீ எனக்கு, தங்கம், கஸ்தூரி போன்ற சீரியல்களில் நடித்தார். அதன்பிறகு ராஜா ராணி சீரியலில் நடித்த போது, பார்வையாளர்கள் மத்தியில் இவரது செல்வாக்கு அதிகரித்தது.

ரசிகர்களின் கூடுதல் கவனத்தை பெற்றார். சில சீரியல்களில் துணை நடிகையாக கிடைத்த கேரக்டர்களில் நடித்த அவர், சில சீரியல்களில் வில்லி கேரக்டரில் நடித்து, பார்வையாளர்களை மிரட்டவும் செய்தார். இப்போது தாலாட்டு என்ற சீரியலில் நடித்து வருகிறார்.

தன்னுடன் நெருங்கிப் பழகிய நண்பர் அசோக் சிண்டலா என்பவரை திருமணம் செய்துக்கொண்டார் ஸ்ரீதேவி.

இந்நிலையில் சமீபத்தில் ஒரு நேர்காணலில் பங்கேற்றுப் பேசிய ஸ்ரீதேவி அசோக், தனது கணவருடன் ஏற்பட்ட பழக்கம் குறித்து சில விஷயங்களை வெளிப்படையாக பேசினார்.

வளர்ப்பு பிராணிகள்

அப்போது அவர் கூறியதாவது, எனக்கு வளர்ப்பு பிராணிகள் என்றால் மிகவும் பிடிக்கும். சின்ன வயதில் இருந்தே அதில் அதிக ஆர்வம் உண்டு. ஒருமுறை என்னுடைய வளர்ப்பு நாய்க்கு உடல் நலம் பாதித்திருந்தது.

அந்த நேரத்தில் நான் பெங்களூருவில் இருந்தேன். அதனால் யாராவது இந்த விஷயத்தில், எனக்கு உதவுங்கள் என பொதுவான ஒரு பதிவை பேஸ்புக்கில் செய்திருந்தேன்.

இதையும் படியுங்கள்:  ஜாக்கெட் எங்கம்மா.. முதல் படத்திலேயே மூச்சு முட்ட வைக்கும் கவர்ச்சி.. கிக் ஏற்றும் ரச்சிதா மகாலட்சுமி..!

திருமணம் செய்துக்கொள்வோம்

அதை பார்த்துவிட்டு முதல் ஆளாக எனக்கு அசோக் போன் செய்தார். அப்படித்தான் அவருடன் நான் பழக ஆரம்பித்தேன். அந்த சந்தர்ப்பம் மூலமாக தான் எங்களின் நட்பு துவங்கியது. பிற்காலத்தில் நாங்கள் இருவரும் திருமணம் செய்துக்கொள்வோம் என்று ஒருநாள் கூட நான் நினைத்து பார்த்ததே கிடையாது.

நண்பர்களாக பழகி வந்த நிலையில், ஒரு நாள் அசோக் தனது குடும்பத்தினருடன் என் வீட்டுக்கு வந்து, என் குடும்பத்தாரிடம் பெண் கேட்டார். இருவருக்கும் பிடித்துப் போனதால் உடனே சம்மதம் தெரிவித்தால், இருவருக்கும் திருமணம் நடந்தது.

3 ஆண்டுகள் எங்களுடன்…

ஒருமுறை ஷூட்டிங் சென்றுவிட்டு திரும்பி வந்த போது ரோட்டோரத்தில் ஒரு நாய் விபத்தில் அடிபட்டு கிடந்தது. அதை மீட்டு சிகிச்சை செய்து காப்பாற்றினோம். பிறகு எங்கள் வீட்டிலேயே அதை வைத்துக்கொண்டோம்.

இதையும் படியுங்கள்: ஆடு ஜீவிதம் படம் எப்படி இருக்கு..? திரை விமர்சனம்..!

கிட்டத்தட்ட 3 ஆண்டுகள் அவன் எங்களுடன்தான் இருந்தான். நல்ல உடல் ஆரோக்கியத்துடன்தான் வளர்ந்தான். ஆனால் ஒருநாள் திடீரென இறந்து விட்டான். இதுகுறித்து விசாரித்தால், சிறுநீரக பிரச்னையால் உயிரிழந்தது தெரிய வந்தது.

அழாத நாளே இல்லை

அவனுடைய நினைவுகளை நினைத்து அழாத நாளே இல்லை, என்று அந்த நேர்காணலில் கண்களில் கண்ணீர் மல்க பேசியிருக்கிறார் ஸ்ரீதேவி அசோக். இந்த வீடியோ காட்சிகள் இப்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

தன் வீட்டில் வளர்க்கப்பட்ட நாயை, நினைச்சு அழாத நாள் இல்லை என்று ஸ்ரீதேவி அஷோக் கண்ணீர் விட்டபடி பேசியிருப்பது, அவரது இளகிய மனதை வெளிப்படுத்தியிருக்கிறது.

புதுப்பேட்டை படத்துல நிஜமாவே அந்த உறுப்பில்.. ரகசியம் உடைத்த சினேகா..!

Comments are closed.
Exit mobile version