பிரபல சீரியல் நடிகை ஸ்ரீதேவி அஷோக் தன்னுடைய இணையப் பக்கங்களில் வீடியோக்கள் மற்றும் புகைப்படங்களை அடிக்கடி பதிவிடுவதை வாடிக்கையாக கொண்டிருக்கிறார்.
சமீபத்தில் ஒரு பேட்டியில் பேசிய இவர் அடிக்கடி கோயிலுக்கு செல்வதை வழக்கமாகக் கொண்டிருக்கிறீர்கள் இது பற்றி உங்களுடைய கருத்து என்ன..? என்று கேட்கப்பட்டது. அதற்கு அது குறித்து பதில் அளித்த நடிகை ஸ்ரீதேவி அசோக் நான் மதம் சார்ந்த ஆள் கிடையாது. ஆனால், ஆன்மீகம் சார்ந்த ஒரு நபர்.
நான் சிறுவயதில் இருக்கும் போதே யாரிடம் பிரார்த்தனை செய்கிறோம்.. என்ன வேண்டிக் கொள்கிறோம்.. என்றெல்லாம் தெரியாது. நான் என்னுடைய வாழ்க்கையின் தற்போது இருக்கும் விஷயங்களுக்காக எப்பொழுதுமே பிரார்த்தனை செய்து வந்திருக்கிறேன்.
எனக்கு ஒரு நல்ல குடும்பம், நல்ல வாழ்க்கை வேண்டும்.. என வேண்டினேன் அதற்காக பல போராட்டங்களையும் பல கடினமான விஷயங்களையும் தாண்டி வந்து இருக்கிறேன்.
என்றாலும் கூட அந்த பிரார்த்தனை தான் எனக்கு துணை புரிந்து இருக்கிறது என்று பேசியிருந்தார். மறுபக்கம் என்னுடைய சிறப்பான வாழ்க்கைக்கு துணையாக இருக்கும் என்னுடைய கணவருக்கும் நன்றிக்கடன் பட்டிருக்கிறேன் என்று பேசியிருந்தார்.
இதெல்லாம் ஒரு பக்கம் இருந்தாலும் கூட இணையத்தில் தன்னை ஆக்டிவாக வைத்துக் கொண்டிருக்கும் இவர் அடிக்கடி கிளாமரான வீடியோக்கள் மற்றும் புகைப்படங்களை வெளியிடுவதை வாடிக்கையாக வைத்திருக்கிறார்.
View this post on Instagram
அந்த வகையில் மொட்டை மாடியில் இறங்கி குத்தாட்டம் போட்ட ஒரு வீடியோவையும் பதிவிட்டிருக்கிறார். இந்த வீடியோ காட்சிகள் இணையத்தில் வெளியாகி வருகின்றது.