கர்ப்பமான வயிற்றில் அதை எழுதி.. வைரலாகும் ஸ்ரீதேவி அஷோக் புகைப்படங்கள்..!

தமிழ் தொலைக்காட்சியில் பிரபல சீரியல் நடிகையாக வலம் வந்து கொண்டிருப்பவர் தான் நடிகை ஸ்ரீதேவி அசோக்.

இவர் பல்வேறு பல்வேறு சீரியல்களில் நடித்த பிரபலமான சீரியல் நடிகையாக தமிழ் சினிமா மக்களால் பார்க்கப்பட்டு வருகிறார்.

குறிப்பாக இவர் திரைப்பட வாய்ப்புகள் ஒன்று இரண்டு கிடைக்க அதிலும் நடித்து தன்னுடைய நடிப்பு திறமை வெளிப்படுத்தினார்.

சீரியல் நடிகை ஸ்ரீதேவி:

புதுக்கோட்டையிலிருந்து சரவணன் திரைப்படத்தில் செல்வி என்ற கதாபாத்திரத்தில் நடித்திருந்தார், அதன் பிறகு கிழக்கு கடற்கரை சாலை என்ற படத்திலும் அவர் நடித்திருந்தார்.

இதனிடையே சீரியல்கள் என எடுத்துக்கொண்டோமானால் செல்லமடி நீ எனக்கு, கஸ்தூரி, இளவரசி, தங்கம், மானாட மயிலாட, பிரிவோம் சந்திப்போம், இரு மலர்கள், என் பெயர் மங்கம்மா, வாணி ராணி, சிவசங்கரி, சித்திரம் பேசுதடி ,கல்யாண பரிசு உள்ளிட்ட பல்வேறு தொடர்களில் இவர் நடித்து புகழ்பெற்ற சீரியல் நடிகையாக பார்க்கப்பட்டார்.

அத்துடன் ராஜா ராணி தொடரில் இவர் நடித்து பிரபலமானார். தற்போது அரண்மனைக்கிளி மற்றும் பூவே உனக்காக, காற்றுக்கு என்ன வேலி, தாலாட்டு உள்ளிட்ட சீரியல்களில் நடித்து வருகிறார்.

தொடர்ந்து பல்வேறு வெற்றி சீரியல்களில் நடித்து பிரபலமான சீரியல் நடிகையாக பார்க்கப்பட்டு வரும் ஸ்ரீதேவி திரைப்பட வாய்ப்புகள் அவ்வப்போது கிடைத்தாலும் நடித்து வருகிறார்.

மீண்டும் கர்ப்பம் ஆன ஸ்ரீதேவி:

இதனிடையே இவர் அசோக் சிந்தலாவை காதலித்து திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு ஒரு அழகிய ஒரு மகள் இருக்கும் நிலையில் தற்போது மீண்டும் இரண்டாவது முறையாக கர்ப்பமாக இருக்கிறார் ஸ்ரீதேவி ஸ்ரீதேவி.

பெரும்பாலான சீரியல் நடிகைகளின் வாழ்க்கை சரியாக அமையாது. அவர்களும் சரியாக குடும்பத்துடன் ஒன்றிணைந்து வாழ்க்கை நடத்த மாட்டார்கள் .

சீரியல்களில் நடிக்கும் பெரும்பாலான நடிகைகள் தங்களுக்கு பிரபலமும் , பணமும் பெரிதாக நினைத்துக் கொண்டு வாழ்க்கையை கோட்டை விட்டுவிடுவார்கள்.

ஆனால் ஸ்ரீதேவியை பொறுத்தவரை அப்படி கிடையாது தன் கணவர், குழந்தைகளுமே தனக்கும் மிக முக்கியம் என்றவாறு இருப்பார்.

கர்ப்பமான வயிற்றில் கவுன்டிங்:

சீரியல்களில் நடித்து நடித்துவிட்டு வீட்டிற்கு வந்ததும் தனது குடும்பமே முக்கியம் என அவர்களோடு முழு நேரத்தை செலவிடுவார். இதனாலே ஸ்ரீதேவிக்கு தனி ரசிகர்கள் கூட்டமே இருக்கிறார்கள்.

ஸ்ரீதேவி அவ்வப்போது தனது குடும்பத்தோடு இருக்கும் அழகான புகைப்படங்களையும் தனது மகளின் கியூட்டான வீடியோ புகைப்படங்கள் உள்ளிட்டவற்றையும் தொடர்ச்சியாக தனது சமூக வலைத்தளங்களில் வெளியிட்டு வருவதை வாடிக்கையாக வைத்திருக்கிறார்.

இந்நிலையில் நிறைமாத கர்ப்பிணியாக இருந்த போது நாட்களை எண்ணும் விதமாக கர்ப்பமான வயிற்றில் மாத நாட்காட்டி ஒன்றை வரைந்து ஒவ்வொரு நாளாக எண்ணுவது போன்ற புகைப்படங்கள் சிலவற்றை வெளியிட்டுள்ளார்.

நடிகை ஸ்ரீதேவி அஷோக்கின் இந்த புகைப்படம் தற்போது இணையத்தில் தீயாய் பரவி வைரலாகி வருவது குறிப்பிடுத்தக்கது.

புதுப்பேட்டை படத்துல நிஜமாவே அந்த உறுப்பில்.. ரகசியம் உடைத்த சினேகா..!

Comments are closed.
Exit mobile version