என் மகளை கல்யாணம் பண்ணிக்கிறீங்களா..? நடிகரிடம் வெளிப்படையாக கேட்ட ஸ்ரீதேவி..!

தமிழ் சினிமாவில் சிறு வயது முதலே நடித்து வரும் முக்கிய நடிகையாக ஸ்ரீதேவி இருந்திருக்கிறார். தமிழில் முதன் முதலில் கந்தன் கருணை திரைப்படத்தில் முருகன் கதாபாத்திரத்தில் நடித்தார் நடிகை ஸ்ரீ தேவி.

அதற்குப் பிறகு நிறைய திரைப்படங்களில் இவருக்கு குழந்தை கதாபாத்திரத்தில் நடிப்பதற்கான வாய்ப்புகள் கிடைத்தது. முதன்முதலாக மூன்று முடிச்சு என்கிற திரைப்படத்தில்தான் இவர் கதாநாயகியாக நடித்தார். அதற்கு முன்பு நடித்த திரைப்படங்களில் எல்லாம் குழந்தை கதாபாத்திரமாகதான் நடித்து வந்தார்.

ஸ்ரீ தேவி அறிமுகம்:

நடிகர் ரஜினிகாந்த் தமிழ் சினிமாவில் பிரபலமாவதற்கு முன்பே ஸ்ரீதேவி சினிமாவில் பிரபலமான நடிகையாக இருந்தார். கவிக்குயில் திரைப்படத்தில் ஸ்ரீதேவி கதாநாயகியாக நடித்த பொழுது அந்த திரைப்படத்தில் துணை கதாபாத்திரத்தில் ரஜினிகாந்த் நடித்திருந்தார்.

சிவகுமாரன் அந்த திரைப்படத்தில் கதாநாயகனாக நடித்திருந்தார். அதற்குப் பிறகு 16 வயதினிலே திரைப்படம் ஸ்ரீதேவிக்கு முக்கியமான திரைப்படமாக அமைந்தது. அந்த திரைப்படத்தில் மயில் என்கிற அவரது கதாபாத்திரத்தை தொடர்ந்து நிறைய திரைப்படங்களில் வரவேற்பை பெற்றார் ஸ்ரீதேவி.

ஆனால் அப்போதைய காலகட்டத்தில் தமிழ் சினிமாவை விடவும் பாலிவுட் சினிமாவில்தான் சம்பளம் என்பது அதிகமாக இருந்து வந்தது. அதனால் சில நாட்கள் தமிழ் சினிமாவில் இருந்து விட்டு பிறகு பாலிவுட் சினிமாவிற்கு சென்று முயற்சி செய்தார் ஸ்ரீதேவி.

பாலிவுட்டில் கிடைத்த பிரபலம்:

அங்கு அவருக்கு நல்ல வாய்ப்பு கிடைத்தது. தொடர்ந்து பாலிவுட் சினிமாவில் அழகியாக இருக்க வேண்டும் என்பதற்காக அவரது முகத்தில் அறுவை சிகிச்சைகள் கூட செய்து கொண்டார் ஸ்ரீதேவி. இந்த நிலையில் பாலிவுட்டில் பிரபல தயாரிப்பாளரான போனி கபூருடன் இவருக்கு காதல் ஏற்பட்டது.

அதனை தொடர்ந்து இவர்கள் இருவரும் திருமணம் செய்து கொண்டனர் தற்சமயம் ஸ்ரீதேவியின் மகளான ஜான்வி கபூர் ஹிந்தியில் முக்கியமான ஒரு நடிகையாக இருந்து வருகிறார். இந்த நிலையில் அவருக்காக ஒரு நடிகரிடம் சென்று ஸ்ரீ தேவி பெண் கேட்ட சம்பவம் அப்பொழுது நடந்திருக்கிறது.

ஜான்விகபூர் மிக இளம் வயதாக இருந்த பொழுது ஒரு சமயத்தில் சக்கரவர்த்தி என்கிற நடிகரை சென்று சந்தித்திருக்கிறார் ஸ்ரீதேவி. சக்கரவர்த்தியின் வீட்டிற்கு சென்ற ஸ்ரீதேவி அங்கு அவரிடம் நேரடியாகவே எனது மகளை நீங்கள் திருமணம் செய்து கொள்கிறீர்களா? என்று கேட்டிருக்கிறார்.

சக்கரவர்த்திக்கு ஸ்ரீதேவியின் மகளை திருமணம் செய்து கொள்ள எந்த ஒரு ஆர்வமும் கிடையாது. இதனால் திடீரென்று ஸ்ரீதேவி அப்படி கேட்டதும் அவர் வாயடைத்து நின்று இருக்கிறார். இதனை அவரே பிறகு ஒரு பேட்டியில் பகிர்ந்தும் இருக்கிறார்.

புதுப்பேட்டை படத்துல நிஜமாவே அந்த உறுப்பில்.. ரகசியம் உடைத்த சினேகா..!

Comments are closed.
Exit mobile version