நடிகை ஸ்ரீதேவி சொன்ன சம்பவம்.. எம் ஜி ஆர் எனக்கு சொன்னது நடந்தது..!

தென்னிந்திய திரை உலகில் தனக்கு என்று ஒரு தனி இடம் பிடித்து முன்னணி நடிகர்களோடு நடித்து பெருவாரியான ரசிகர்களுக்கு கனவு கன்னியாக திகழ்ந்த நடிகை ஸ்ரீதேவி ஹிந்தி பட உலகிலும் தனது அற்புத நடிப்பை வெளிப்படுத்தி ஆட்சி புரிந்தவர்.

அந்த வகையில் நடிகை ஸ்ரீதேவி, எம்ஜிஆர் குறித்து சொன்ன விஷயம் பற்றி இந்த பதிவில் விரிவாக படித்து தெரிந்து கொள்ளலாம். மேலும் இவருக்கு எம்ஜிஆர் சொன்ன விஷயம் நடந்ததாக சொல்லி அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தி இருக்கிறார்.

நடிகை ஸ்ரீதேவி..

தமிழ் திரை உலகில் ஸ்ரீதேவியின் ஆதிக்கம் அதிகளவு இருந்தது. அதுவும் குறிப்பாக கமலஹாசனோடு இணைந்து நடிக்கும் படங்களில் இவர்களது கெமிஸ்ட்ரி மிகச் சிறப்பாக ஒர்க் அவுட் ஆகி இருக்கும்.

குறிப்பாக இவர் எதார்த்தமாக பேசிய ஒவ்வொரு வசனங்களும் ரசிகர்களால் இன்றளவும் ரசிக்கப்படக்கூடிய வகையில் உள்ளது.

அந்த வகையில் கமலஹாசனோடு இணைந்து நடிக்கும் போது சப்பானி என்று கூப்பிட்டால் சப்புனு அறைந்தது விடு என்று வெள்ளந்தி தனமாக அவர் பேசிய பேச்சு இன்று வரை ரசிகர்களால் மறக்க முடியவில்லை.

அப்படிப்பட்ட இவர் திரைப்படங்களில் நடிக்கும் போது பல்வேறு வகையான கிசுகிசுக்கள் குறிப்பாக கமலஹாசனுடன் இணைந்து வெளி வந்த போதிலும் இவர் அந்த கிசுகிசுகளுக்கு பதிலடி தரக்கூடிய வகையில் போனி கபூரை திருமணம் செய்து கொண்டு முற்றுப்புள்ளி வைத்தார்.

இந்நிலையில் இவர் எம்ஜிஆர் பற்றி சில விஷயங்களை பகிர்ந்து கொண்டிருப்பதோடு மட்டுமல்லாமல் எம்ஜிஆர் மிகவும் ராசியானவர் அவரை பார்த்து சென்றால் எல்லாமே பாசிட்டிவாக தான் நடக்கும் என்று சொன்ன விஷயமானது வைரலாக பரவி வருகிறது.

நடிகை ஸ்ரீதேவி சொன்ன சம்பவம்..

இந்திய திரை உலகையே தன் கைப்பிடியில் வைத்திருந்த அசைக்க முடியாத நடிகை ஸ்ரீதேவி ரசிகர்களின் கனவு கன்னியாக இருந்ததோடு மட்டுமல்லாமல் குழந்தை நட்சத்திரமாக அதுவும் பாலமுருகனாக நடித்து கண்ணதாசன் கூறியது போல மிகப் பெரிய நடிகையாக வளர்ந்தார்.

மேலும் நம் நாடு என்ற படத்தில் தான் முதல் முதலாக ஸ்ரீதேவி எம் ஜி ஆர்-ஐ சந்தித்திருக்கிறார். அதுவும் அந்தப் படத்தில் நடிக்கும் போது அவரை சித்தப்பா என்று அழைத்தபடி சென்று அவரை கட்டிப்பிடித்துக் கொள்வேன் என்று முன்பு அளித்த பேட்டி ஒன்றில் கூறி இருக்கிறார்.

இயல்பாகவே குழந்தைகளின் மீது அன்பை வெளிப்படுத்தக்கூடிய எம்ஜிஆர் என்னிடமும் அபரிமிதமான அன்பை காட்டினார். எனினும் முதல் நாள் ஷூட்டிங்கில் செல்லும் போது அவரோடு எப்படி நடிப்பது என்ற பயத்தோடு தான் சென்றேன்.

மேலும் செட்டில் அவர் முகத்தை பார்த்த உடனேயே என்னுடைய பயம் இருந்த இடம் தெரியாமல் போய்விட்டது. அவரைப் பார்த்தாலே கூடுதல் எனர்ஜி கிடைத்தது போல் இருந்ததோடு மட்டுமல்லாமல் அதீர ஞாபக சக்தி உள்ள நபராகவும் இருந்தார்.

மேலும் படத்தில் அவர் எனக்கு புத்திமதி சொல்வது போல நல்ல பேரை வாங்க வேண்டும் பிள்ளைகளே என்ற பாடல் வரிகள் இன்று வரை எத்தனை படத்தில் நடித்திருந்தாலும் என்னால் மறக்க முடியாத பாடல் வரிகளாக உள்ளது.

எம்ஜிஆர் சொன்னது எனக்கு நடந்தது..

அந்த பாடல் வரிகளில் எனது நடிப்பை பாராட்டிய எம்ஜிஆர் நீ நல்ல பெயரை எடுப்பதோடு மட்டுமல்லாமல் நல்ல பெரிய நிலைக்கு வருவ நல்ல வளர்ச்சி இருக்கும் என்று பாராட்டியது இன்றும் நினைவில் உள்ளது.

எனவே அவர் சொன்ன எனக்கு வாக்கு பலித்தது. அது மட்டுமல்லாமல் அன்று அவர் சொன்னது போல ஒரு மிகப்பெரிய இடத்தில் இருக்கிறேன். அத்தோடு எம்ஜிஆர் அங்கிள் என்னிடம் சோம்பேறியா இருக்கக்கூடாது. நீ ஓடணும், உழைக்கணும் நல்ல எக்சர்சைஸ் செய்யணும் பல்வேறு வகையான நாட்டியங்களை கற்றுக்கொள்ள வேண்டும் என்று அறிவுரை சொன்னார்.

அதையெல்லாம் நான் ஃபாலோ செய்ததை அடுத்த தான் இந்த நிலையை அடைந்தேன். எனவே எம்ஜிஆர் சொன்னது என் வாழ்க்கையில் நடந்தது என்று நடிகை ஸ்ரீதேவி முன்பு அளித்த பழைய பேட்டி ஒன்றில் சொன்ன விஷயம் தற்போது இணையங்களில் வைரலாக மாறி வருகிறது.

புதுப்பேட்டை படத்துல நிஜமாவே அந்த உறுப்பில்.. ரகசியம் உடைத்த சினேகா..!

Comments are closed.
Exit mobile version