தமிழில் சில திரைப்படங்களில் ஹீரோயின் ஆகவும் சில திரைப்படங்களில் குணச்சித்திர நடிகையாகவும் நடித்து பிரபலமானவர் நடிகை ஸ்ரீதேவி விஜயகுமார். பிரபல நடிகர் விஜயகுமார் மற்றும் பிரபல நடிகை மஞ்சுளா தம்பதியின் மூன்றாவது மகளான ஸ்ரீதேவி விஜயகுமார் பல திரைப்படங்களில் ஹீரோயினாக நடித்திருக்கிறார்.
குறிப்பாக நடிகர் தனுஷ் நடிப்பில் வெளியான தேவதையை கண்டேன் நடிகர் மாதவன் நடிப்பில் வெளியான பிரியமான தோழி உள்ளிட்ட படங்களில் நடித்து ரசிகர்களின் கவனத்தை ஈர்த்திருக்கிறார் மட்டுமில்லாமல் குழந்தை பருவத்திலேயே பல திரைப்படங்களில் நடித்திருக்கிறார்.
நடிகர் சத்யராஜ் நடிப்பில் வெளியான ரிக்ஷா மாமா என்ற திரைப்படத்தில் குழந்தை நட்சத்திரமாக நடித்திருந்தார். அதன் பிறகு தித்திக்குதே காதல் வைரஸ் என்ற படங்களில் ஹீரோயினாக நடித்ததன் மூலம் தமிழ் சினிமாவில் ஹீரோயினாக என்றியான இவர் நடிகர் தனுஷின் தேவதையை கண்டேன் திரைப்படத்தில் நடித்ததன் மூலம் தமிழ் சினிமா ரசிகர்கள் மத்தியில் தன்னை ஒரு நடிகையாக அறிமுகப்படுத்திக்கொண்டார்.
இந்த திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்றது. சினிமாவில் முன்னணி நடிகையாகும் வாய்ப்பு இருக்கிறது என்று பலரும் யூகித்துக் கொண்டிருந்த நேரத்தில் திடீரென ராகுல் என்பவரை திருமணம் செய்துகொண்டு திருமண வாழ்க்கையில் ஐக்கியமாகிவிட்டார் நடிகை ஸ்ரீதேவி விஜயகுமார்.
இவருக்கு ஒரு மகனும் இருக்கிறார் திருமணத்திற்கு பிறகு சினிமாவில் இருந்து ஒதுங்கி விட்ட இவர் சமீப காலமாக சினிமா ஹீரோயின்களை ஓரங்கட்டும் அளவுக்கு கிளாமரான உடைகளை அணிந்து கொண்டு புகைப்படங்களை இணையத்தில் வெளியிட்டு வருகிறார்.
அந்த வகையில் தற்போது சமீபத்தில் எடுத்துக் கொண்ட புகைப்படங்களை என்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவு செய்திருக்கிறார் ஸ்ரீதேவி விஜயகுமார் இந்த புகைப்படங்கள் இணையத்தில் பரவி வருகிறது.