நதியா போல வயசு கூட கூட இளமையாகி கொண்டே போகும் ஸ்ரீதேவி விஜயகுமார்..! அசத்தல் போட்டோஸ்..!

தமிழ் சினிமாவில் நடித்து வரும் மூத்த நடிகர்களில் ஒருவராக இருப்பவர் நடிகர் விஜயகுமார். எம்ஜிஆர் சிவாஜி காலத்தில் இருந்து சினிமாவில் இருந்து வருகிறார். இவரும் 3 தலைமுறைகளை கண்ட சீனியர் நடிகர்தான்.

விஜயகுமார்

சினிமாவில் நடிக்க வரும் முன்பே, முத்துக்கண்ணு என்ற உறவுக்கார பெண்ணை, விஜயகுமார் திருமணம் செய்துக்கொண்டார். இந்த தம்பதிக்கு கவிதா, அனிதா, அருண் விஜய் ( நடிகர்) என்ற 3 பிள்ளைகள் உள்ளனர். இதில் கவிதா, அனிதா இருவரும் வெளிநாட்டில் டாக்டர்களாக உள்ளனர்.

சினிமாவில் நடித்த காலகட்டத்தில், நடிகை மஞ்சுளாவை காதலித்த நடிகர் விஜயகுமார், முதல் மனைவி முத்துக்கண்ணு சம்மதத்துடன் மஞ்சுளாவை 2வது திருமணம் செய்துக்கொண்டார்.

இந்த தம்பதிக்கு வனிதா, ப்ரீத்தா, ஸ்ரீதேவி என்ற 3 மகள்கள் உள்ளனர். இதில் நடிகை வனிதா, துவக்கத்தில் மாணிக்கம் உள்ளிட்ட சில படங்களில் நடித்தார்.

சமீபத்தில் பிக்பாஸ் நிகழ்ச்சியிலும் பங்கேற்றார். சமூக வலைதளங்களில் அடிக்கடி சர்ச்சையான விஷயங்களை பேசி வருகிறார்.

ஸ்ரீதேவி விஜயகுமார்

2வது மகள் ப்ரீத்தா, இயக்குநர் ஹரியை திருமணம் செய்துள்ளார். 3வது மகள் ஸ்ரீதேவி விஜயகுமார், கதிர் இயக்கத்தில் காதல் வைரஸ் என்ற படத்தில் நடித்தார். இதில் நடிகர் அஜித் மச்சான், ஷாலினியின் சகோதரர் ரிச்சார்ட் ஜோடியாக நடித்திருந்தார்.

இதையும் படியுங்கள்: ப்பா.. வியர்க்க வியர்க்க வெறித்தனமான வொர்க்அவுட்.. தீயாய் பரவும் ஜோதிகாவின் வீடியோ..

அதற்கு பின், இயக்குநர் விக்ரமன் இயக்கத்தில் ப்ரியமான தோழி என்ற படத்தில் நடித்தார். இதில் ஹீரோ மாதவன், ஹீரோயின் ஜோதிகா என்றாலும், மாதவனின் தோழியாக ஜூலி என்ற மிக முக்கியமான கேரக்டரில் நடித்திருந்தார், இந்த படத்தில் ஸ்ரீதேவிக்கு ஜோடியாக, நடிகர் வினீத்குமார் நடித்தார்.

தேவதையை கண்டேன்

அடுத்து தனுஷ் ஜோடியாக தேவதையை கண்டேன் படத்தில் நடித்த ஸ்ரீதேவி விஜயகுமார், அதற்கு பின் படங்களில் நடிக்கவில்லை. கடந்த 2009ம் ஆண்டில் ராகுல் என்பவரை திருமணம் செய்துக்கொண்டார். இந்த தம்பதிக்கு மகள் இருக்கிறார்.

திருமணத்துக்கு பிறகு சினிமாவில் நடிக்க ஆர்வம் காட்டாத ஸ்ரீதேவி அவ்வப்போது விஜயகுமார் வீட்டில் நடக்கும் தனது குடும்ப விழா நிகழ்ச்சிகளில் மட்டுமே பங்கேற்று வருகிறார்.

விஜய் டிவியில்

இதற்கிடையே இப்போது, விஜய் டிவியில் ஜோடி ஆர் யூ ரெடி என்ற ரியாலிட்டி ஷோவில் ஸ்ரீதேவி விஜயகுமார் நடுவராக பங்கேற்கிறார். அதனால் வாராவாரம் விதம் விதமான ஆடைகளில் நிகழ்ச்சிக்கு வந்து பார்வையாளர்களை கிறங்க வைக்கிறார்.

இதையும் படியுங்கள்: கூவத்தூருக்கு வந்து நடிகைகள் பட்டியல்.. இவர் வாயை திறந்தால் அவ்ளோ தான்.. பகீர் கிளப்பும் நடிகர்..!

அதில் நீல நிற லெஹங்கா டிரஸ்சில் வந்த ஸ்ரீ தேவியின் அசத்தல் புகைப்படங்கள் இப்போது வைரலாகி வருகின்றன.

இளமையாகி கொண்டே போகும் ஸ்ரீதேவி

நதியா போல வயசு கூட கூட இளமையாகி கொண்டே போகும் ஸ்ரீதேவி விஜயகுமாரின் அசத்தல் போட்டோக்களை பார்த்து, ரசிகர்கள் அசந்து போகின்றனர்.

புதுப்பேட்டை படத்துல நிஜமாவே அந்த உறுப்பில்.. ரகசியம் உடைத்த சினேகா..!

Comments are closed.
Exit mobile version