ஸ்ரீதேவியின் மெய்சிலிர்க்க வைக்கும் கண்ணீர் கதை..!

தமிழ் சினிமாவில் லேடி சூப்பர்ஸ்டாராக உச்ச நட்சத்திர நடிகையாக ஒரு காலத்தில் சொல்லித் கொண்டு இருந்தவர் தான் நடிகை ஸ்ரீதேவி.

நடிகை ஸ்ரீதேவி வாழ்ந்து மறைந்த மெய்சிலிர்க்க வைக்கும் கதையை பற்றி இந்த செய்தி தொகுப்பில் பார்க்கலாம்.

லேடி சூப்பர் ஸ்டார் ஸ்ரீதேவி:

சிவகாசி தந்த லேடிஸ் சூப்பர் ஸ்டார் என்று போற்றப்படும் நடிகை ஸ்ரீதேவி 1963 ஆம் ஆண்டு ஆகஸ்ட் 18ஆம் நாள் சிவகாசி மாவட்டம் அனுப்புன்குப்பம் ஊராட்சியில் உள்ள மீனம்பட்டி என்கிற ஒரு சின்ன கிராமத்தில் பிறந்தார்.

திரு அய்யப்பன் ராஜேஸ்வரி பெற்றோர்களின் தம்பதிகளுக்கு மூத்த மகளாக ஸ்ரீதேவி பிறந்தார். இவரது இயற்பெயர் ஸ்ரீ அம்மா என்பதுதான்.

இவருக்கு ஸ்ரீலதா என்கிற ஒரு தங்கையும் இருக்கிறார். ஸ்ரீதேவியின் தந்தையான திரு ஐய்யப்பன் சட்டம் படிப்பதற்காக சென்னைக்கு வந்து படித்துக் கொண்டிருந்த போது ராஜேஸ்வரி என்பவர் மேல் காதல் பயப்பட்டு அவரை திருமணமும் செய்து கொண்டார்.

ஸ்ரீதேவியின் தந்தை தமிழ்நாட்டை சேர்ந்தவராகவும் ஸ்ரீதேவியின் தாயார் ராஜேஸ்வரி ஆந்திராவை பூர்வீகமாகக் கொண்டவரும் ஆவார்கள்.

இப்படி ஒரு நிலையில் தான் படித்து வழக்கறிஞரான என ஸ்ரீதேவியின் தந்தையான ஐயப்பன் சென்னையிலேயே வேலை செய்து மனைவி குழந்தை குட்டிகளுடன் குடும்பமாக மிகுந்த மகிழ்ச்சியோடு வாழ்ந்து வந்தார்.

ஏதேனும் முக்கியமான குடும்ப நிகழ்ச்சிகள் , ஊர் திருவிழாக்கள் போன்ற நேரங்களில் மட்டும் சொந்த ஊரான மீனம்பட்டிக்கு சென்று வருவதை வழக்கமாக வைத்திருந்தார்கள்.

ஸ்ரீதேவியின் பிறப்பு:

அப்படி ஒரு முறை மீனம்பட்டிக்கு வந்த போது தான் ஸ்ரீதேவி பிறந்திருக்கிறார். அவர் பிறந்த சில மாதத்திலேயே ஐயப்பன் ராஜேஸ்வரி தம்பதியினர் அவர்கள் குழந்தையுடன் மீண்டும் சென்னைக்கு திரும்பி விட்டார்கள்.

சென்னையில் வழக்கறிஞராக பணியாற்றி வந்த ஸ்ரீதேவியின் தந்தையும் கவிஞர் கண்ணதாசனும் நெருக்கமான நல்ல நண்பர்களாக இருந்து வந்தனர் .

அப்படி ஒரு முறை ஸ்ரீதேவியின் வீட்டிற்கு வந்த கண்ணதாசன் நான்கு வயது குழந்தையாக இருந்த ஸ்ரீதேவியை பார்த்த உடனே தன்னுடைய நண்பரின் தயாரிப்பாளர் சாண்டோ சின்னப்பன் தேவரிடம் ஸ்ரீதேவியை அறிமுகம் செய்து வைத்தார் .

ஸ்ரீதேவியை பார்த்த நொடியிலேயே எனக்கு முருகப்பெருமானே கண் முன்னாடி வந்து நிற்பது போல உள்ளது எனக் கூறி தயாரிப்பாளர் சின்னப்ப தேவர் தான் தயாரித்த “துணைவன்” என்கிற திரைப்படத்தில் ஸ்ரீதேவியை சிறு வயது முருகன் வேடத்தில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகம் செய்து வைத்தார்.

சினிமாவில் அறிமுகம்:

அதுதான் ஸ்ரீதேவியின் முதல் திரைப்படம் அந்த திரைப்படத்திலேயே தனது மிகச்சிறந்த நடிப்பை வெளிப்படுத்தி எல்லோரும் மனதையும் கவர்ந்தார் ஸ்ரீதேவி.

தொடர்ந்து பல்வேறு திரைப்படங்களில் குழந்தை நட்சத்திரமாக நடித்து வந்த அவர் அதன் பின்னர் ஹீரோயின் ஆக அறிமுகம் ஆகி பல்வேறு வெற்றி திரைப்படங்களில் நடித்து நட்சத்திர நடிகையாக அந்தஸ்தை பிடித்தார்.

5ம் வகுப்பு வரை மட்டுமே படித்திருக்கும் ஸ்ரீதேவி வீட்டிலேயே ஆங்கிலம் ,ஹிந்தி ,வீணை போன்றவற்றை கற்றுத் தெரிந்தார்.

பின்னர் 13 வயதில் ஹீரோயினாக அறிமுகமான ஸ்ரீதேவி 1976 ஆம் ஆண்டு கே. பாலச்சந்தர் இயக்கி சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் வெளிவந்த ” மூன்று முடிச்சு” திரைப்படத்தில் நடித்திருந்தார்.

இதனை தொடர்ந்து ஹிந்தி படங்களிலும் அடுத்தடுத்து அடுத்த பெரும் புகழ்பெற்ற நடிகையாக பார்க்கப்பட்டார்.

தாய் , தந்தையின் அடுத்தடுத்த மரணம்:

ஸ்ரீதேவியின் தந்தை மாரடைப்பாலும் அவரது தாய் புற்றுநோயாலும் ஒரே ஆண்டில் அடுத்தடுத்து மரணம் அடைந்தார்கள்.

இளம் வயதிலேயே தனது பெற்றோர்களை இழந்ததால் சமுதாயத்தில் பல பிரச்சனைகளை சந்தித்தார் நடிகை ஸ்ரீதேவி.

மேலும் சினிமா உலகில் பல்வேறு கிசுகிசுகளும் பரவ ஆரம்பித்தது. இதனிடையே பாலிவுட் நடிகரான மிதுன் சக்கரவர்த்தியுடன் ஸ்ரீதேவி கிசுகிசுக்கப்பட்டார்.

அதன்பின் 1996 ஆம் ஆண்டு ஜூன் இரண்டாம் நாளில் பாலிவுட் பிரபல தயாரிப்பாளரான போனி கபூரை காதலித்து திருமணம் செய்து கொண்டார் .

இந்த தம்பதிக்கு ஜான்வி கபூர், குஷி கபூர் இரண்டு மகள்கள் இருக்கிறார்கள். போனி கபூர் தன்னை விட்டு முதல் மனைவியிடம் சென்று விடுவாரோ என்ற ஒரு பயம் ஸ்ரீதேவிக்கு இருந்து கொண்டே இருந்ததாக கூறப்படுகிறது.

திருமணத்திற்கு பிறகு சினிமாவை விட்டு விலகி இருந்த நடிகை ஸ்ரீதேவி 6 ஆண்டுகளுக்கு கழித்து சில தொலைக்காட்சி தொடர்களில் நடித்தார்.

பயத்தோடே மரணத்த ஸ்ரீதேவி:

இதனிடையே ஸ்ரீதேவி குடும்ப திருமண நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்ட போது துபாயில் மாரடைப்பு ஏற்பட்டு திடீரென இரவு 11:30 மணிக்கு இறந்துவிட்டார்.

இவரது மரணம் ஒட்டுமொத்த இந்திய சினிமாவையே பேரதிர்ச்சி கொள்ளாக்கியது. போனை கபூரின் முன்னாள் மனைவிக்கு பிறந்த மகனான நடிகர் அர்ஜுன் கபூர் தனது தாயிடமிருந்து தந்தையை பிரித்து இரண்டாவது திருமணம் செய்து கொண்ட ஸ்ரீதேவியுடன் எப்போதுமே கோபமாக இருந்ததாக கூறப்படுகிறது.

அதனால் தனது வாழ்க்கைக்கு ஏதேனும் பிரச்சினை ஏற்பட்டு விடுமோ என்று ஸ்ரீதேவி மரணம் வரை ஒரு விதமான அச்சத்துடனே வாழ்ந்து வந்தாராம்.

ஆனால் அப்படி ஏதும் நடிக்கவில்லை… ஸ்ரீதேவியின் மரண செய்தி கேட்டு முதல் ஆளாக ஓடிவந்தது அர்ஜுன் கபூர் தானாம்.

புதுப்பேட்டை படத்துல நிஜமாவே அந்த உறுப்பில்.. ரகசியம் உடைத்த சினேகா..!

Comments are closed.
Exit mobile version