பட வாய்ப்புகளை இழந்த ஸ்ரீதிவ்யா; மீண்டும் சினி பீல்டுக்கு வருவாரா?

வருத்தப்படாத வாலிபர் சங்கம் படத்தின் மூலம் ரசிகர்களிடம் பிரபலமானவர் நடிகை ஸ்ரீதிவ்யா. உயரம் சற்று குறைவாக இருந்தாலும், ‘ஹோம்லி லுக்’கில் அம்மணி இருந்ததால், சிவகார்த்திகேயன், விஷால், விக்ரம் பிரபு, விஷ்ணு விஷால், அதர்வா போன்ற உயரமான நடிகர்களுடன் ஜோடி போட்டார்.

காக்கிச்சட்டை, மருது, காஷ்மோரா, ஈட்டி, வெள்ளைக்கார துரை, ஜீவா, பெங்களூரு நாட்கள், பென்சில், மாவீரன் கிட்டு உள்ளிட்ட படங்களில் ஹீரோக்களுக்கு ஜோடியாக நடித்தார். இதில், சில படங்கள் அபார வெற்றி பெற்றதால், அடுத்தடுத்து ஸ்ரீதிவ்யாவுக்கு பட வாய்ப்புகள் வந்தது. ஆனால், ஒரு கட்டத்துக்கு பிறகு, இவருக்கு படங்கள் வருவது வெகுவாக குறைந்து போய்விட்டது. இவர் பகீரத முயற்சி எடுத்தும், சரியான பட வாய்ப்புகள் அமையவில்லை.

இதையடுத்து, நொந்துபோன ஸ்ரீதிவ்யா தற்போது கிராமப்புறத்தில் உள்ள தனது வீட்டில் ஓய்வெடுத்து வருகிறார். அவ்வப்போது, டுவிட்டர், இன்ஸ்டாகிராம் போன்ற சமூக வலைதள பக்கங்களில் தனது லேட்டஸ்ட் புகைப்படங்களை அப்டேட் செய்து விடுகிறார்.

ஆனால், அந்த படங்களுக்கு ரசிகர்களின் லைக்ஸ், கமெண்ட் குவிந்தாலும், பட வாய்ப்புகள் ஒன்றிரண்டு கூட இன்னும் கிடைக்கவில்லை என்பதுதான் வருத்தம். மேலும் இவருடன் ஜோடி போட்ட ஹீரோக்கள் அனைவருமே இப்போது டாப் லெவலில்தான் உள்ளனர். அவர்களில் யாராவது, தனது படங்களில் நடிக்க வாய்ப்பு அளிப்பார்களா, என்ற ஸ்ரீதிவ்யாவின் ஆசையும் கானல் நீராகி விட்டது.

சினிமா நடிகைகளின் நிலையே இதுதான். மார்க்கெட் உள்ள வரைதான், பட்டம் உயரத்தில் பறக்கிறது. மவுசு குறைந்துவிட்டால், பட்டமும் இறங்கி விடுகிறது. மீண்டும் நல்ல படங்களில் நடித்தால், ஸ்ரீதிவ்யா தமிழ் சினிமாவில் ஒரு ரவுண்டு வருவார் என, அவரது ரசிகர்கள் மிக ஆர்வமாக எதிர்பார்க்கின்றனர். அவர்களது ஆசை நிறைவேறட்டும்.

Check Also

ப்பா…கேட்டதும் கிறுகிறுனு வருதே.. என்னது 50 வினாடிக்கு இம்புட்டு சம்பளமா? – யாருமா.. அந்த நடிகை..

திரை உலகில் கோடிக்கணக்கில் சம்பளமாக வாங்குகின்ற நடிகர் நடிகைகளை பற்றி உங்களுக்கு சொல்ல தேவை இல்லை. அந்த வகையில் தளபதி …