வீட்ல அதுக்கு கட்டாயப்படுத்துனாங்க.. செந்தில் மட்டும் இல்லனா.. ஓப்பனாக கூறிய நடிகை ஸ்ரீஜா..!

தமிழ் தொலைக்காட்சிகளிலேயே அதிகமான பார்வையாளர்களைக் கொண்ட தொலைக்காட்சியாக விஜய் டிவி இருக்கிறது. ஏனெனில் நாடகங்கள் மட்டுமன்றி மாறுபட்ட நிகழ்ச்சிகளின் மீதும் தொடர்ந்து கவனம் செலுத்தி வருவதால் விஜய் டிவிக்கு என்று அதிக ரசிகர்கள் இருந்து வருகின்றனர்.

இதனால்தான் விஜய் டிவியில் நடிக்கும் பிரபலங்கள் மட்டும் அதிக பிரபலமாகி சினிமாவில் வாய்ப்புகளை பெறுகின்றனர். இந்த நிலையில் ரேடியோ மிர்ச்சி சேனலில் ஆர்.ஜே வாக பணிபுரிந்து வந்தவர் செந்தில்.

விஜய் டிவியில் வாய்ப்பு:

அவருக்கு விஜய் டிவியில் நாடகங்களில் நடிப்பதற்கான வாய்ப்புகள் கிடைத்தது. முதன் முதலில் விஜய் டிவியில் ஒளிபரப்பான சரவணன் மீனாட்சி தொடரில் சரவணன் கதாபாத்திரத்தில் இவர் நடித்தார். அந்த சீரியல் அதிக வரவேற்பை பெற்றதை அடுத்து அவருக்கும் அதிக வரவேற்பு கிடைத்தது.

அப்பொழுது அந்த சீரியலில் இவருக்கு ஜோடியாக மீனாட்சி ஆக நடித்தவர் நடிகை ஸ்ரீஜா. இந்த சீரியலில் இவர்கள் இருவருக்கும் இடையே காதல் காட்சிகள் அதிகமாக இருந்தது. அந்த காட்சிகள் மக்கள் மத்தியில் நன்றாகவே ஒர்க்அவுட் ஆனதை அடுத்து இவர்கள் பிரபலமானார்கள்.

இந்த நிலையில் இவர்கள் இருவருக்கும் இடையே நிஜமாகவே காதல் உருவானது. இதனை தொடர்ந்து அவர்கள் திருமணம் செய்து கொண்டனர். திருமணமாகி எட்டு ஆண்டுகளுக்கு பிறகு கடந்த வருடம்தான் இவருக்கு குழந்தை பிறந்தது.

காதல் கதை:

இப்போதும் செந்தில் தொடர்ந்து சினிமாவிலும் சீரியல்களிலும் நடித்து வருகிறார். இந்த நிலையில் தங்களுடைய காதல் கதையை செந்திலும் ஸ்ரீஜாவும் ஒரு பேட்டியில் பகிர்ந்திருந்தனர். அதில் ஸ்ரீஜா கூறும்பொழுது எனக்கும் செந்திலுக்கும் திருமணம் நடப்பதற்கு முன்பு எனது பெற்றோர்கள் எனக்கு மாப்பிள்ளை பார்த்து வைத்து இருந்தனர்.

ஆனால் மாப்பிள்ளை வீட்டிலிருந்து பெண் பார்க்க வரும் பொழுது எனக்கு திருமணத்தில் விருப்பம் இல்லை, இருந்தாலும் எனது வீட்டில் உள்ளவர்கள் கட்டாயப்படுத்துவதால்தான் திருமணத்திற்கு ஒப்புக்கொள்கிறேன் என்று அவர்களிடம் கூறிவிட்டேன்.

அப்போது இது குறித்து நான் என்னுடைய தோழியிடம் பேசிக்கொண்டிருந்த பொழுது, அவர்தான் என்னிடம் செந்திலின் நம்பரை கொடுத்தார். அப்போது அவரிடம் போனில் நான் பேசிக் கொண்டிருக்கும் பொழுது  உங்களுக்கு திருமணம் ஆகப்போகிறது ஆனால் ஏன் சோகமாக இருக்கிறீர்கள் உங்களுக்கு இந்த திருமணத்தில் விருப்பம் இல்லையா என்று கேட்டார்.

நானும் ஆமாம் இது எனக்கு பிடிக்கவில்லை  என்றேன் அப்படியானால் உங்கள் வீட்டில் சொல்லுங்கள் என்று எனக்கு தைரியம் கொடுத்தார். நானும் அதற்கு பிறகு எனது அம்மாவிடம் சென்று இது குறித்து பேசினேன். அதற்கு பிறகுதான் செந்திலுடன் எனக்கு நட்பு ஆரம்பமானது.

அதன் பிறகு இவரை திருமணம் செய்தால் வாழ்க்கை நன்றாக இருக்கும் என்று தோன்றியது. பிறகு அவரிடம் நான் என்னுடைய காதலை சொன்னேன். அதற்குப் பிறகு அவரும் அதற்கு ஒப்புக்கொண்டார் என்று தனது காதல் கதையை கூறி இருக்கிறார் ஸ்ரீஜா.

புதுப்பேட்டை படத்துல நிஜமாவே அந்த உறுப்பில்.. ரகசியம் உடைத்த சினேகா..!

Comments are closed.
Exit mobile version