தனுஷ் மட்டும் இப்படி பிறந்திருந்தால் நான் கல்யாணம் பண்ணியிருப்பேன்.. குண்டை தூக்கி போட்ட ஸ்ரீகாந்த்..!

தமிழ் சினிமாவில் பிரபலமாக இருந்து வரும் நடிகர்களில் முக்கியமானவர் நடிகர் தனுஷ். பெரும்பாலும் நடிகர் தனுஷ் நடிக்கும் திரைப்படங்களுக்கு மக்கள் மத்தியில் அதிக ஆர்வம் இருந்து வருகிறது. அதற்கு முக்கிய காரணம் அவர் தேர்ந்தெடுக்கும் கதாபாத்திரங்களே எனக் கூறப்படுகிறது.

தனுஷ் சினிமாவிற்கு வந்த ஆரம்ப காலகட்டங்களில் சிவாஜி கணேசன் விஜய் மாதிரியே இவரும் அதிக கிண்டலுக்கும் கேளிக்கும் உள்ளானார். ஆனாலும் போகப் போக தனுஷின் நடிப்பை அனைவரும் ஏற்றுக்கொள்ள துவங்கி விட்டனர். அவருடைய டயலாக்கான “சிலப்பேரை பார்த்தா பிடிக்கும் சிலரை பார்க்க பார்க்கதான் பிடிக்கும்” என்கிற ரீதியில் மக்களுக்கு தனுஷை பிடிக்கத் துவங்கியது.

மக்களிடம் வரவேற்பு:

ஒரு மேடையில் தனுஷ் பேசும் பொழுது அவரே இதுபற்றி பேசியிருக்கிறார். ”என்னை எல்லாம் கதாநாயகனாக ஏற்றுக் கொண்டதே பெருசு” என்று தனுசு பேசியிருக்கிறார்.  அதையும் தாண்டி தனுஷ் ஒரு தனிப்பட்ட நடிகராக தெரிவதற்கு முக்கிய காரணம் அவர் தேர்ந்தெடுக்கும் கதாபாத்திரங்கள்தான்.

பொதுவாகவே நடிப்புக்கு முக்கியத்துவம் கொடுக்கும் கடினமான கதாபாத்திரங்களை தனுஷ் தேர்ந்தெடுத்து நடிப்பதை பார்க்க முடியும் அசுரன் திரைப்படத்தில் வரும் அப்பா கதாபாத்திரம் குறித்து ஒருமுறை வெற்றிமாறன் கூறும் பொழுது ”அந்த கதாபாத்திரத்தில் நடிப்பதற்கு எத்தனையோ நடிகர்களிடம் கேட்டோம், ஆனால் யாருமே வயதான கதாபாத்திரத்தில் நடிப்பதற்கு ஒப்புக்கொள்ளவில்லை.

வித்தியாசமான கதைக்களம்:

ஆனால் நான் இந்த கதையை தனுஷிடம் கூறிய உடனே அப்பா கதாபாத்திரத்தில் நடிக்கிறேன் என்று அவரே நேரடியாக வந்து கூறினார்”, என்று வெற்றிமாறன் கூறியிருக்கிறார். இப்படி மற்ற நடிகர்கள் நடிக்கவே யோசிக்கும் திரைப்படத்தில் கூட தனுஷ் நடிப்பதை பார்க்க முடியும்.

உதாரணமாக திருச்சிற்றம்பலம் திரைப்படத்தில் சண்டை காட்சிகள் இல்லாத சண்டைக்கே பயப்படும் ஒரு கதாபாத்திரத்தில் தனுஷ் நடித்திருப்பதை பார்க்க முடியும். பொதுவாகவே கமர்ஷியல் கதாநாயகர்கள் சண்டை காட்சிகள் அதிகம் கொண்ட திரைப்படத்தில்தான் நடிப்பார்கள்.

ஆனாலும் சண்டை இல்லாத படத்திலும் நடித்து திருச்சிற்றம்பலம் திரைப்படத்தை வெற்றி படமாக்கி இருந்தார் தனுஷ். இதுதான் தனுஷின் தனித்துவமாக பார்க்கப்படுகிறது. அதனால்தான் ஹாலிவுட் வரை சென்று நடித்து விட்டு வந்திருக்கிறார் தனுஷ்.

ஸ்ரீகாந்தின் பதில்:

இந்த நிலையில் ஒரு காலத்தில் சாக்லேட் பாய் என்று அழைக்கப்பட்ட நடிகர் ஸ்ரீகாந்த் தனுஷ் குறித்து ஒரு பேட்டியில் கூறும்பொழுது ”தனுஷின் தனிப்பட்ட நடிப்பு எனக்கு மிகவும் பிடிக்கும் தனுஷ் மட்டும் ஒரு வேலை பெண்ணாக பிறந்திருந்தால் அவரை நான் திருமணம் செய்து இருப்பேன்” என்று கூறியிருந்தார் இப்படி ஸ்ரீகாந்த் கூறியிருந்தது ட்ரெண்டிங் ஆகி வருகிறது.

புதுப்பேட்டை படத்துல நிஜமாவே அந்த உறுப்பில்.. ரகசியம் உடைத்த சினேகா..!

Comments are closed.
Exit mobile version